அம்மாக்கள் வைத்த குழம்பையே வைத்துக்கொண்டிருந்தபோது
அக்காக்கள் சிக்குக் கோலங்களையே
போட்டுக்கொண்டிருந்தபோது

அண்ணிகள் வலதுகாலை எடுத்து
வாயிற்படிகளில் வைத்தார்கள்

அடுப்பங்கரைகளில் புதிய மணம் தவழ்ந்தது
தெருக்களில் புதிய வண்ணங்கள் மிளிர்ந்தன

கதவே இல்லாத மறைப்புகளில்
அவர்கள் குளித்தபோது

கொரகொரவென்று பாடிய திருச்சி
ஸ்டேஷனை மூடினோம்
வீட்டுக்கு ஜானகி வந்தாளென சந்தோஷப்பட்டோம்

கிராமத்து அழுக்கை அகற்ற
செங்கல்லைப்போல கனக்கும்
லைஃபாயே கதியெனக் கிடந்தோம்

அண்ணிகளிடம் மணந்த லக்ஸையும் ரெக்ஸோனாவையும் சுவாசித்தபோதுதான்

காசு கொடுத்தால் ஸ்ரீதேவி சோப்பையும் கடைக்காரன் கொடுப்பானென்கிற
உண்மை தெரிந்தது

மோட்டாரின் சீரிய நீரோட்டத்தில்
ஷாம்பு நுரை பொங்கும் கேசங்களின்
எழிலைப் பார்த்து ஊர் வாய்பிளந்தது

அண்ணிகள் அக்கா தங்கைகளையும்
நவீனப்படுத்தினார்கள்

பிரேசியர் என்கிற வஸ்து வாசல்
கொடிக் கயிற்றில் தொங்கியபோது
ஆளுக்கொன்றை யூகித்துக்கொண்டோம்

எங்கள் பூனை மீசை அண்ணன்கள்
மந்திரித்துவிட்டதுபோல் கோபமழிந்தவர்களானார்கள்

அவர்களது ஒட்டிய கன்னங்களில்
தேஜஸ் கூடியது

டவுனுக்குபோய் கூலிங்கிளாஸ் போட்டு
ஸ்டீல்சேரில் அண்ணியோடு
போட்டோ பிடித்து வாசலில் மாட்டினார்கள்

பக்கத்தில் நமது போட்டோவை எப்போது மாட்டுவோமென
ஏங்கித்தான் போனோம்

அம்மாவோடு கோபித்து
அய்யனார் கோயிலில் கிடந்தவர்களைத் தேடி

தட்டு நிறைய சுடுசோற்றைக் கொட்டி
வஞ்சனையில்லாமல் உண்ணும் வாய்பார்த்து மகிழ்ந்தவர்கள் அண்ணிகள்

விதைநெல்லள்ளிக் கொடுத்தார்கள்
விற்றுவந்த பணத்தைப் பாதுகாத்தார்கள்
கடிதங்களைப் படித்துக்காட்டினார்கள்

சிந்துபாத் கதைகளை
தங்கைகளுக்குச் சொன்னார்கள்
அம்மாவுக்கு பேனெடுத்துக் குத்தினார்கள்

வீட்டை சந்தோஷம் உறையும் கோயிலாக்கியவர்கள் அண்ணிகள்

இன்று கிராமத்துக்குப் போகும்போது
அண்ணி உறவு எங்கே
தொலைந்ததென்றே தெரியவில்லை

ஐம்பது பவுன் நகை அகலத்திரை டி.வி
வாஷிங்மெஷினோடு
வாசலில் நிற்கும் 150 சிசி

எதிர்பார்ப்பான பேராசையில்
அண்ணன்களைக் கூட்டிக்கொண்டு
அண்ணிகள் தனிவீடு போனார்கள்

சீர்வரிசைத் தகராறுகள் பெரிதாகி
ஈகோ உரசல்களின் தீயில்
பொசுங்கியது பாசம்

அனைத்து மகளிர் நிலையங்களில் குடும்பத்தோடு கைகட்டி
உறவுகளை
வாழும் காலம் நிற்கவைத்தபோது

அண்ணி ரோல்
சீரியல்களின் ரேட்டிங்கை எகிறவைக்கும்
வில்லியாய்ப் பரிணமித்தது!

அம்மாக்கள் வைத்த குழம்பையே வைத்துக்கொண்டிருந்தபோது
அக்காக்கள் சிக்குக் கோலங்களையே
போட்டுக்கொண்டிருந்தபோது

அண்ணிகள் வலதுகாலை எடுத்து
வாயிற்படிகளில் வைத்தார்கள்

அடுப்பங்கரைகளில் புதிய மணம் தவழ்ந்தது
தெருக்களில் புதிய வண்ணங்கள் மிளிர்ந்தன

கதவே இல்லாத மறைப்புகளில்
அவர்கள் குளித்தபோது

கொரகொரவென்று பாடிய திருச்சி
ஸ்டேஷனை மூடினோம்
வீட்டுக்கு ஜானகி வந்தாளென சந்தோஷப்பட்டோம்

கிராமத்து அழுக்கை அகற்ற
செங்கல்லைப்போல கனக்கும்
லைஃபாயே கதியெனக் கிடந்தோம்

அண்ணிகளிடம் மணந்த லக்ஸையும் ரெக்ஸோனாவையும் சுவாசித்தபோதுதான்

காசு கொடுத்தால் ஸ்ரீதேவி சோப்பையும் கடைக்காரன் கொடுப்பானென்கிற
உண்மை தெரிந்தது

மோட்டாரின் சீரிய நீரோட்டத்தில்
ஷாம்பு நுரை பொங்கும் கேசங்களின்
எழிலைப் பார்த்து ஊர் வாய்பிளந்தது

அண்ணிகள் அக்கா தங்கைகளையும்
நவீனப்படுத்தினார்கள்

பிரேசியர் என்கிற வஸ்து வாசல்
கொடிக் கயிற்றில் தொங்கியபோது
ஆளுக்கொன்றை யூகித்துக்கொண்டோம்

எங்கள் பூனை மீசை அண்ணன்கள்
மந்திரித்துவிட்டதுபோல் கோபமழிந்தவர்களானார்கள்

அவர்களது ஒட்டிய கன்னங்களில்
தேஜஸ் கூடியது

டவுனுக்குபோய் கூலிங்கிளாஸ் போட்டு
ஸ்டீல்சேரில் அண்ணியோடு
போட்டோ பிடித்து வாசலில் மாட்டினார்கள்

பக்கத்தில் நமது போட்டோவை எப்போது மாட்டுவோமென
ஏங்கித்தான் போனோம்

அம்மாவோடு கோபித்து
அய்யனார் கோயிலில் கிடந்தவர்களைத் தேடி

தட்டு நிறைய சுடுசோற்றைக் கொட்டி
வஞ்சனையில்லாமல் உண்ணும் வாய்பார்த்து மகிழ்ந்தவர்கள் அண்ணிகள்

விதைநெல்லள்ளிக் கொடுத்தார்கள்
விற்றுவந்த பணத்தைப் பாதுகாத்தார்கள்
கடிதங்களைப் படித்துக்காட்டினார்கள்

சிந்துபாத் கதைகளை
தங்கைகளுக்குச் சொன்னார்கள்
அம்மாவுக்கு பேனெடுத்துக் குத்தினார்கள்

வீட்டை சந்தோஷம் உறையும் கோயிலாக்கியவர்கள் அண்ணிகள்

இன்று கிராமத்துக்குப் போகும்போது
அண்ணி உறவு எங்கே
தொலைந்ததென்றே தெரியவில்லை

ஐம்பது பவுன் நகை அகலத்திரை டி.வி
வாஷிங்மெஷினோடு
வாசலில் நிற்கும் 150 சிசி

எதிர்பார்ப்பான பேராசையில்
அண்ணன்களைக் கூட்டிக்கொண்டு
அண்ணிகள் தனிவீடு போனார்கள்

சீர்வரிசைத் தகராறுகள் பெரிதாகி
ஈகோ உரசல்களின் தீயில்
பொசுங்கியது பாசம்

அனைத்து மகளிர் நிலையங்களில் குடும்பத்தோடு கைகட்டி
உறவுகளை
வாழும் காலம் நிற்கவைத்தபோது

அண்ணி ரோல்
சீரியல்களின் ரேட்டிங்கை எகிறவைக்கும்
வில்லியாய்ப் பரிணமித்தது!