மிகச் சரியாக 12 மணி, `டொய்ங்... டொய்ங்’ என அடித்து நிற்க, வெளியே சலசலவென சப்தம். முகில் மேலேறி கண்களைச் சிமிட்டி நிற்க, தென்னங் கீற்றுகள் அசைந்து கொடுக்க, கிணற்றடியில் இருந்து மீண்டும் சப்தம்…

சட்டென அந்தக் காகிதத்தைக் கசக்கிய இன்ஸ்பெக்டர், “என்னா பெரியாம்பள, களவு போன ஜாமான் லிஸ்ட்ட கம்ப்ளைன்ட் எழுதிக் குடுக்கச் சொன்னா, என்னமோ கதை எழுதுற மாதிரி விட்டு ரப்படியா இழுத்துருக்க?”

உடன் சென்ற எங்களிடம் திரும்பி, “நீங்க பார்த்த வேல தானாடா இது?, லிஸ்ட்ட மட்டும் எழுதிக்குடுங்கடா, ஏற்கெனவே ஊருக்குள்ள திடீர்னு இந்தத் திருட்டுப் பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு, இதுல ஒங்க லந்து வேறயா? காணாமப்போனா மட்டும்தான்டா புகார் குடுக்கணும், போயிருமோனு கதையெல்லாம் எழுதக் கூடாது, அந்தாள முழுக் கிறுக்கனா ஆக்காம விட மாட்டீங்களாடா நீங்க?”

சொல்லிக்கொண்டே தன் நாற்காலியை பின்னுக்கு நகர்த்தி எழுந்தவர், தன் அறையிலிருந்து வெளியே போகும்போது என் வயிற்றில் ஓங்கிக் குத்துவதுபோல் பாவனை செய்து, சிரித்துவிட்டுப் போனார். சட்டென பின்னோக்கி உள்ளிழுத்துக்கொண்ட அந்த அரை நொடிக்கே என் வயிற்றில் பிரளயம் நடந்தேறிவிட்டது.

பெரியாம்பளையை அங்கிருந்து நகர்த்தி தெருவுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஏகபோக சொத்தும், ஏழெட்டு வீடுகளும் பெரியாம்பளைக்குச் சொந்தம். முன்னொரு காலத்தில், `பெரிய ஆம்பளை’ என்று அவருடைய மூதாதையருள் எவருக்கோ இருந்த பெயர் தொட்டுத் தொடர்ந்து இப்போது கடைசியாக பரமசிவம் என்ற பெரியாம்பளையோடு முடியப் போகிறது. ஆம். இந்த ஐம்பத்தைந்து வயது வரையிலும் கட்டை பிரம்மச்சாரி. பத்து, ஏழு, மூன்று எனக் குறுகிக்கொண்டே வந்த பெரியாம்பளையின் குடும்ப மரம், சுப்ரமணியத்துக்குப் பிறந்த பரமசிவத்தோடு பட்டுப்போகப் போகிறது. திருமணமாகி வெகு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஒற்றைப் பிள்ளை என்பதால், பரமசிவத்தின் முதல் பிறந்த நாளை ஊரையே அடைத்துப் பந்தல் போட்டு, தடபுடலாகக் கொண்டாடினாராம் சுப்பு. அதுதான் பரமசிவத்தின் முதலும் கடைசியும் என்றாகிப்போன விசேஷம். ஆள் வளர வளர, மூளை அதற்குச் சரியான விகிதாசாரத்தில் வளரவில்லை என்பதை மெள்ள ஊர் உணரத் தொடங்கியது. பார்க்காத வைத்தியம் இல்லை.

“முழுப் பைத்தியமாவும் இல்லாம, இப்பிடி முக்காப் பைத்தியமாவும் இல்லாம இருக்குறவன என்ன பண்றதுனு தெரியலியே” எனப் புலம்பிப் புலம்பியே இறந்துபோனார் சுப்ரமணியம். அவருக்கு முன்னமே அவர் மனைவி சிவலோகப் பதவி அடைந்துவிட்டிருந்தார் என்பதனால், `பெரியாம்பளை’ என்ற பரமசிவம் தன் இருபத்தி ஐந்தாவது வயதில் இருந்து சகல சொத்துகளோடும் பணக்கட்டுகளோடும் தனித்து விடப்பட்டிருந்தார்.

நடந்துகொண்டிருக்கும்போதே திடீரெனத் தாவுவது, உறியடிச் சத்தம் எழுப்புவது, `ரெங்க ரெக்குன... ரெங்க ரெக்குன' என உடலை வளைத்து ஆடுவது போன்ற செயல்களை எப்போதாவது செய்வாராம்.

அவரின் ஐம்பதாவது வயதில்தான் நாங்கள் அவருக்கு நெருக்கமானோம். நாங்கள் என்றால் நான், ரகு, செந்தில் மற்றும் சொர்ணகுமார்.

அது தொண்ணூறுகளின் புகையிறுதி. உலகமே Y2K என்ற அபாயம் குறித்துப் பேசி பயந்துகொண்டிருந்த காலம். ஆனால், மதுரைக்குத் தெற்கே நான்கைந்து மைலுக்கு அந்தப் பக்கம் இருந்த எங்கள் ஊரில் அது கொசுக்கடி அளவுக்கே எங்களால் பேசப்பட்டது.
“பூரா கம்ப்யூட்டரும் அப்பிடியே ஒக்காந்துருமாம்டா, 99-க்கு அங்குட்டு எதுவும் இல்லையாம் அந்தப் பெட்டிக்குள்ள...”

சொர்ணகுமார் எங்கள் குழுவில் சற்று விவரமானவன். ஆனால், அவன் உட்பட எங்கள் ஊரில் யாருக்கும் K என்பது `ஆயிரம்’ என்ற வார்த்தையைக் குறிக்கும் என்பது அப்போது தெரிந்திருக்கவே இல்லை.

எங்களின் பதின்மத்துக்கு தேவையான சில்லறைகள் கிடைக்கும் இடமாகவும், இரவில் கண்முழித்துப் பேசிச் சிரிக்கும் ஜாகையாகவும் பெரியாம்பளையின் வீடும் அவரின் சினேகமும் எங்களுக்குக் கிடைத்தன. பத்து இருபது வருடங்களாகத் தனித்துவிடப்பட்டவர் எங்களின் பேச்சுக்காகவே காத்திருப்பார்.

வீட்டு வேலை பார்க்கும் அழகுமுத்து, காலையிலும் மாலையிலும் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து, அவருக்குத் தேவையான சாப்பாட்டை மந்தைக் கடையோ, பரங்குன்ற மெஸ்ஸோ, அன்று அவர் வாயில் வரும் கடையின் பெயரைக் கேட்டு, அங்கிருந்து பொட்டலம் வாங்கி வந்து வைத்துப் போவாள். மெடிக்கல் ஷாப்பில் இருந்து இரவு மாத்திரையையும் தவறாமல் வாங்கி வந்து கொடுப்பாள். அழகுமுத்துவின் அம்மாவும் பாட்டியும் அதே வீட்டில் வேலைபார்த்தவர்கள். காலங்காலம் என்பதனால் விசுவாசம் மிச்சமிருந்தது எனலாம். சொர்ணகுமாருக்கு அவள் தூரத்து சொந்தம் என்பதால் நாங்கள் அவளிடம் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்.

ஒவ்வொரு நாளும், மாலையில் நாங்கள் அங்கே செல்லும் வரை திண்ணையில் இருக்கும் திண்டில் சாய்ந்து எங்களுக்காகக் காத்திருப்பார் பெரியாம்பளை. ஒரு கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்து, பாதி படுத்தநிலையில் கிட்டத்தட்ட கைலாச சுகத்தில் கண்களை மூடி அரைத் தூக்கத்தில் காத்திருப்பார்.

அவரைப் பொருட்படுத்தாமல் நாங்கள் நேரே உள்ளே நுழைவோம். எங்களுக்குப் பின்னால் ஏதோ எங்கள் வீட்டில் அவர் நுழைவதுபோல் நடந்து வருவார். தூண்களுக்கு முதுகைக் கொடுத்து அமர்ந்தோம் என்றால், நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம். சீட்டுக்கச்சேரியும் அவ்வப்போது நடக்கும்.

வீடு பளிச்செனத் துடைத்து வைக்கப்பட்டிருக்கும் எப்போதும். ஆனால், அவரின் அண்டர்வேர்கள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கழற்றி எறிந்த கதியில் கிடக்கும். மற்றபடி, தூய பருத்தி வேட்டி, மஞ்சள் அல்லது பச்சை கலர் உள் பனியன். அது தெரியும் வண்ணம், பட்டன்கள் போடப்படாத வெள்ளைச் சட்டை சகிதம் பெரியாம்பளை தூணில் பாதியாக நிற்பார். தூண்களுக்கடியில் மிக்சர், தூள் பக்கோடா, ஆல்பக்கோடா, தேன் மிட்டாய் எனப் பொட்டலங்கள் கிடக்கும். எங்கு கை வைத்தாலும் வாயில் வைத்துக்கொள்ள ஒரு தின்பண்டம் கிடைக்கும். இஞ்சி மொரப்பாவை மட்டும் தன் அருகிலேயே வைத்துக்கொள்வார் பெரியாம்பளை.

எங்களுடைய பேச்சே பொதுவாக, பெரியாம்பளையின் கல்யாணத்தில் ஆரம்பிக்கும் அல்லது அதில் முடியும்.

“என்னா பெரியாம்பள, மேலூரப் பக்கம் ஒரு கடுங்கட்ட கெடக்காம்யா, பாவம், இல்லாதக் குத்தம், எதுண்டாலும் சரிங்குறாங்காளாம் அவுக வீட்ல, ஒரு எட்டுப் போய்ப் பார்த்துருவமா?”

அப்போது, பெரியாம்பளையின் முகத்தில் பட்டெனப் படரும் சிறு வெட்கம். ஆனால், அதை உடனே முறிக்கும் அவர் வார்த்தைகள்.

“அட ஏனப்பா என்னயப் போட்டு, ஒக்காந்த எடத்துல இருந்து நான் எந்திரிக்கவே லேட் ஆகுது. இதுல எனக்கு எங்கிட்டிருந்து..? அத விடு, அந்த ராணிய எறக்கிவிடப்பா, பாயின்ட்டுக்குப் பிடிச்ச கேடு” என சீட்டுக்கு வழிசொல்லி பேச்சை மாற்றுவார்.

சொர்ணகுமார் விடாமல் இழுப்பான். “அட சீட்டு ராணிய விடப்பா பெரியாம்பள, இந்த வீட்டுக்கு ஒரு ராணியக் கொண்டாருவோம். ஒனக்கு என்னா கொற? ஆளு சும்மா கிண்ணுன்னு இருக்க, மந்தைக் கடைச் சோறுன்னா சும்மா அரைப்படி அடிக்கிற. சுருட்ட முடிக்கும் ஒன் ஒசரத்துக்கும், என்னடா நாஞ் சொல்றது?”

எங்களைத் துணைக்கு அழைப்பான். நாங்களும் ஆமோதிப்போம்.

வெட்கம் படரப் படரச் சிரிப்பார் பெரியாம்பளை.

“ஆனா, இந்தப் பல்லுலதான் கொஞ்சம் வேல கெடக்கு. நம்ம வடக்குமாசி வீதி ஜப்பான் பல் டாக்டர்கிட்டப் போனம்னா, க்ளீனா சாணை பிடிச்சு பாலீஷ் போட்டுருவான்.”

பட்டெனப் பல் தெரியாதவாறு உதட்டை மடித்து மூடிக்கொண்டு, “விடுங்கடா டேய், ஆமா, ஏதோ உறியடிக்கிற சத்தம் கேக்குதுல்ல?”

அப்படி திடீரென ஏதாவது சம்பந்தம் இல்லாமல் பேசினார் என்றால், ஏகாந்த நிலைக்குச் செல்கிறார் என்று அர்த்தம். நாங்கள் சத்தம் காட்டாமல் மெள்ள நகர்ந்துவிடுவோம். `உக்கிரமானார் என்றால் அவ்வளவுதான்' என்று ரகு அடிக்கடி சொல்வான். ஆனால், அவர் உக்கிரமாகி நாங்கள் நேரடியாகப் பார்த்தது இல்லை. செவிவழிச் செய்திகளாக, சோனைமுத்துவை கையில் வெட்டியதாகவும், மந்தைக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உறியடி சத்தம் வருவதாகக் கத்திக்கொண்டே அன்னக்கரண்டியைக் கொண்டு நாயக்கரின் மண்டையைப் பிளந்துவிட்டார் என்றும் பேசுவார்கள் ஊரில்.

பெரியாம்பளையின் வீட்டு அமைப்பு அவ்வளவு அம்சமாக இருக்கும்.

திண்டு வைத்து அமர்வதற்கு ஏதுவான திண்ணை. சற்றுக் குறுகி உள்ளே நுழைந்தால், விஸ்தாரமான ஹால். நான்கு வழவழப்பான தேக்குத் தூண்கள். தூண்களை இணைக்கும் சதுரம் சற்று பள்ளமாக, முற்றம்போல். இரண்டு பக்கங்களிலும் அறைகள். வீட்டுக்குள் இருக்கும் தரை, வெளியே எவ்வளவு வெயில் காய்ந்தாலும் அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும். கடுக்காயையும் முட்டையையும் அரைத்துக் குழைத்துக் கட்டியதால்தான் அந்தக் குளிர்ச்சி என்பார்கள். கருந்தரை. நாங்கள் குளிர்ச்சியை எதிர்பார்த்தே அமர்வோம், அப்படியும் எதிர்பாராத ஒரு ஜில்லிப்பைக் கொடுக்கும் அந்த வீட்டின் தரை. அக்னி மூலையில் சமையற்கட்டு. அங்கு நாங்கள் பார்த்து ஒருபோதும் அடுப்பு எரிந்தது இல்லை. இந்தப் பக்கமாக ஓர் இரும்புப் பெட்டி. மேற்பாகம் சற்று வளைந்து, லிங்க வடிவில் இருக்கும். அதன் பூண் போட்ட கைப்பிடிகளும் அதற்குக் கீழாக தடிமனான பீடமும் என லேசாக அச்சுறுத்தும். உள்ளே தங்கக்கட்டிகளும் வெள்ளிப் பாத்திரங்களும் கட்டுக்கட்டாகப் பணமும் இருப்பதாகப் பேசுவார்கள். பெரியாம்பளை மட்டும்தான் அதைத் திறக்க முடியும். அதற்கென பிரத்யேக சாவிக்கொத்தும் ஒரு குத்தூசியும் உண்டாம். அந்தக் குத்தூசியை ஏதோ ஒரு மர்மமான இடத்தில் குத்தினால்தான் சாவியை நுழைக்கும் துவாரம் திறக்கும் என்பதை எல்லாம் நாங்கள் நம்பாமல்தான் இருந்தோம். ஒருநாள் ஏதோ தோன்றி, எங்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து அந்தப் பெட்டியைத் திறந்து காட்டினார் பெரியாம்பளை. ஆனால், உள்ளே இருந்த கதவைத் திறக்காமல் பட்டென மூடிவிட்டார். சொர்ணகுமார் ஏதேதோ ஏற்றிவிட்டுத் திறக்கப் பார்த்தான், அவர் மசியவில்லை. ஊரில் சொன்னதுபோல் அந்தக் குத்தூசியை பக்கவாட்டில் ஓரிடத்தில் விரல்களைக்கொண்டு தடவித் தடவி நுழைத்ததும் கைப்பிடிகளுக்குப் பக்கத்தில் இருந்த ஏதோ டிஸைன் என்று நாங்கள் நினைத்த இடம் சற்று விலகி, சாவித் துவாரமாக மாறியது. வாயடைத்துப்போனோம்.

சொர்ணகுமார், “பெரியாம்பள, அந்த குத்தூசிய எங்க குத்துனன்னு காட்டேவே இல்லியேய்யா, வெவரமா” என்று சொல்லி எங்களைப் பார்த்துக் கண்ணடித்தான்.

அந்த இரும்புப் பெட்டியை ஒட்டி, மரப்படிகளால் ஆன மாடிப்படி. சற்று செங்குத்தாக இருக்கும். ஏறும்போது ஒருவித பயம் பீடிக்கும். அந்த மரப்படியைத் தாண்டி பின்னால் சென்றால், பெரிய கொல்லைப்புறம். எத்தனையோ ஆண்டுகளாக வளர்ந்து இருக்கும் பெரிய முள்மரம். அதை ஒட்டி கிணற்றடி. அதன் பக்கத்தில் சில சிறிய முள் மரங்கள். வேப்ப மரம். பாதி பழுத்த அரசமரம். அதை ஒட்டி, பட்டியக்கற்களைக் கொண்டு கற்கோட்டைபோல வீடு முடியும். அந்தப் பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலின் வில்வ மரக்கிளை அந்தக் கற்சுவரின் மீது இறங்கி, பள்ளம் ஏற்படுத்தி இருக்கும்.

நாங்கள் ஒன் பிட்ச் கிரிக்கெட் விளையாட ஏற்ற இடம். அந்தக் கிணற்றில் நீரைவிடவும் அதிகமாக நாங்கள் போட்ட ரப்பர் பந்துகளாகத்தான் இருக்கும்.

ஆண்டுகள் நகர, பெரியாம்பளைக்கும் எங்களுக்குமான நெருக்கம், பிரித்துச் சொல்லிக்காட்டத் தேவையற்ற, உடம்பில் இருக்கும் ஓர் அங்கம்போல ஆனது. முதலில் திட்டிக்கொண்டே இருந்த வீட்டினர்கூட, சரி வெய்யிலில் சுற்றாமல் தெருவுக்குள்ளேயே ஓர் இடத்தில் கிடக்கிறார்களே என விட்டுவிட்டார்கள்.

படிப்பு முடிந்து சொர்ணகுமார் தன் தந்தையின் கடையைப் பார்க்கத் தொடங்கி இருந்த நேரம். நானும் ரகுவும் சேல்ஸ் ரெப். இப்படி கிரிக்கெட், சீட்டு, கேரம், வேலை, பெரியாம்பளையின் திருமணப் பேச்சுக் கேலிகள் என்று சுமுகமாய்ப் போய்க்கொண்டிருந்த பொழுதுகளின் மத்தியில்தான் ஊருக்குள் அந்த பரபரப்பு. திடீரென திருடர்கள், தினமும் ஒரு தெருவுக்கு, யார் வீட்டுக்குள்ளாவது நுழைகிறார்கள் என்ற செய்தி.

“எவனோ கழுவங்குளத்துக்காரனாம்ய்யா, ஒருத்தந்தானாம், களவுல ஏகத்துக்கும் பேர்போன ஆளாம், பொருள பூப்போல எடுப்பானாம். பொத்துனாப்புல நடப்பானாம்.”

மந்தையில் இதே பேச்சாக ஆனது. ஒருவனா, ஒரு கூட்டமா என்ற சந்தேகமும் பயமும் நாளுக்கு நாள் கூடியது.

ஒருநாள் காலையில், நாடார் கடையின் வாசலில் ஒரு முழுத் தார் வாழைப்பழத் தோல்களும், வெறுந்தாரும் கிடக்க, ``ஒத்த ஆள் எப்பிடிய்யா முழுத்தாரத் திம்பான், ஏழெட்டுப் பேரப்பா” என நாடார் முடிவுக்கு வர, மறுநாளே பஸ் ஸ்டாண்ட் டீக்கடை வாசலில் ஒரே ஒரு முட்டை ஓடும் ஒரு பீடியும் கிடக்க, குழம்பியது ஊர்.

“திடும்னு திரும்பிப் பார்த்தா, வெங்கலப் பான லேசா உருளுது... போய்ப் பார்த்தா ஓடுற சத்தம்.”

“குழாய்த் தண்ணிய திறந்துவிட்டுப் போயிருக்கானுங்க, பொட்டுத் தண்ணியக் காணோம்யா விடிஞ்சு பார்த்தா.”

“வீட்டு வாசல்ல பிய்யப் பேண்டு வச்சுட்டுப் போயிருக்கானுகய்யா, மூணு பேரு, ச்சைய், நாரப் பயலுக!”

இப்படி விதவிதமாய் ஒவ்வொரு நாளும் திருடர்கள் பற்றிய பேச்சும் செயல்களும் என ஊர் திமிலோகப்பட்டது. ஆனால், யாரும் இன்னது காணவில்லை, இவ்வளவு பணம் பறிபோனது என்று சொல்லவில்லை.

பெரியாம்பளை நிலைகொள்ளாமல் இருந்தார். அவ்வப்பொழுது தன் வேட்டியில் முடிந்திருக்கும் சாவிக்கொத்தைத் தடவிப் பார்ப்பது, மரப்படிகளின் வழியே தடதடவென பெரும் சப்தம் எழ ஓடி, மாடிக்குச் சென்று பார்ப்பது என விநோதமாக நடந்துகொள்ளத் தொடங்கினார்.

அவரை சமாதானப்படுத்தும் விதமாய் போலீஸில் புகார் கொடுத்துப் பாதுகாப்பு கேட்கலாம் என்று ரகுதான் தனக்குத் தெரிந்த, சலசலவென சப்தம் என எதை எதையோ எழுதி எடுத்துப்போக, இன்ஸ்பெக்டர் திட்டி அனுப்பிவிட்டார்.

எவ்வளவு கேலியாக, ஏதேதோ பேசியும் பெரியாம்பளை தன் இயல்புக்குத் திரும்பாமல் பயத்தோடேயே இருப்பதாகப்பட்டது. கைகளில் இயல்புக்கு மீறிய நடுக்கம்.

நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம். அதாவது திருடனை அல்லது திருடர்களை இரவில் மறைந்திருந்துப் பிடிப்பது என்று முடிவு. செந்திலுக்குத்தான் இதுபோன்ற கடாம்முடாம் யோசனைகள் தோன்றும். அவன் உடல்வாகு அப்படி. நாலைந்து பேரைக்கூட சமாளித்துவிடுவான். சொர்ணகுமாரும் திமுதிமுவென எதற்கும் தயாராய் நிற்பான். இதில் ரகுவும் நானும்தான் டொங்கல்.

வீட்டில் இந்த யோசனையைச் சொன்னதும் பெரியக்கா சிரிக்க ஆரம்பித்ததுதான் தாமதம், வீடே கொல்லெனச் சிரித்ததுபோல் ஆனது. நான் எதையும் பொருட்படுத்தாமல், என் பாதுகாப்புக்காக என, மேலே பரணில் ஏறி, முன்பு எப்போதோ பார்த்திருந்த கட்டையைத் தேடி எடுத்தோம் நானும் ரகுவும். அது உள்ளீடற்ற உருளைக்கட்டை. பார்க்க சாதாரணமாக இருந்தாலும், கைப்பிடியைத் திருகினால் உள்ளே இரும்பு ராடு உருவிக்கொண்டு வரும். அந்தக்காலத்தில் களத்துமேட்டில் படுக்கப் போகும்பொழுது பாதுகாப்புக்காக எடுத்துச் செல்வாராம் தாத்தா. அதை எடுத்துக்கொண்டு இறங்குவதைப் பார்த்த அப்பா, “என்னடா இது?” என்றார்.

“நைட்டு, திருடனப் பிடிக்கப் போறோம்.”
“சர்றா, இது எதுக்கு?”
“அடிக்க!”
“யாரு அடிக்க? ஏன்டா சும்மாப் போனாலும் கையால அடிச்சுட்டுப் போவான். இத எடுத்துட்டுப்போனா, பிடுங்கிப் பொடனில விடுவான்டா. போ, போய் உள்ள வை.”

இவ்வளவுதான் எனக்கும் ரகுவுக்குமான மரியாதை.

2.

இரவு பத்து மணிக்கு பெரியாம்பளை வீட்டின் வாசலில் கூடினோம். நிலா மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. செந்தில் கையில் சரியான பிச்சுவாக் கத்தியை வைத்திருந்தான். அவனுடைய மாமா வாழக்கா பாண்டி... ஊரறிந்த ரெளடி. அவரிடம் இருந்துதான் எடுத்து வந்திருப்பான். சொர்ணகுமார் கையில் இரும்புத்தடி. நானும் ரகுவும் மிளகாய்ப் பொடியைக் காகிதத்தில் சுற்றி வைத்திருந்தோம், வேறு வழி?

மெள்ள நடந்து சிவன் கோயில் வாசலுக்குச் சென்றோம். பூட்டி இருந்த உயரமான கதவில் பெரிய பூட்டு. மதில் சுவர்போல சுற்றிலும் படர்ந்து வளர்ந்த பட்டை அடிக்கப்பட்ட சுவர்கள்.

“இந்தப் பக்கம் இம்புட்டு எடம் கெடக்கு, அங்குட்டு பெரியாம்பள வீட்டுப் பக்கம் கோயில் குறுகிப்போகுது பாரு, கோயிலுக்குள்ள போனம்னா, பெரியாம்பள வீட்டுக்குள்ள தவ்விரலாம் போல. பெரிசா இடிச்சுக் கட்டுறோம்னு கோயிலுக்குள்ள வீட்டக் கட்டி இருக்கான்யா பெரியாம்பளையோட அப்பன்.”

செந்தில் ஒரு முடிவோடு இருந்தான். எப்படி ஏறி எங்கு தாவினால் எப்படிப் பிடிக்க முடியும் என்பதாகவே இருந்தது அவன் பேச்சு.

“இங்க பாருங்கடா, கீழ திருடன் இருக்கான்னு டவுட் வந்தா, ஒடனே தாவிரக் கூடாது, மொதோ ஹுப்ப்புனு வெறும் சத்தம் மட்டும் குடுக்கணும். ஒருவேள உள்ள திருடன் இருந்தா, சத்தத்தக் கேட்டு தவ்விட்டோம்னு நினைச்சு வெளில பிடிக்க வருவான். அதுக்கு அப்புறம்தான் தவ்வணும்.

இப்படியான, ஏகப்பட்ட ஆலோசனைகளும் முன்யோசனைகளுமாய் அள்ளி விட்டுக்கொண்டிருந்தான். சொர்ணகுமாரும் அவனுக்கு ஈடுகொடுத்துக் கொண்டிருந்தான். நானும் ரகுவும் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தவர்கள்போல சினையான பசுமாட்டின் ஈனஸ்வர முனகலோடு உம் கொட்டிக்கொண்டு உடன் நடந்துகொண்டிருந்தோம்.

பேசிக்கொண்டே, தெருவுக்குள் வந்து, முன்பே பேசிவைத்ததுபோல, பெரியாம்பளை வீட்டுத் திண்ணையின் பக்கவாட்டில் மறைந்துகொண்டோம். பெரியாம்பளை வழக்கம்போல் பதினோரு மணி ஆனதும் சத்தம் காட்டாமல் படுக்கப் போய்விட்டார். அவர் சாப்பிடும் மாத்திரைகளின் வீரியம் ஆளை அசத்தும் என்று மெடிக்கல் செந்தில் அண்ணன் சொல்வார்.

நேரம் போய்க் கொண்டிருந்தது. தெருவில் சுத்தமாய் ஆள் அரவம் அற்றிருந்தது. அசம்பாவிதம் உணர்ந்தோ என்னவோ, தெருநாய்களைக்கூடக் காணவில்லை. இரவில் எங்கள் தெரு அவ்வளவு நிசப்தமாகவும், அந்நியமாகவும்பட்டது. குழாயடியில் கிடந்த காலிக்குடங்களில் இருந்து சங்குச் சத்தம்போல் சன்னமாய் ஓர் ஒலி மிதந்தது போலிருந்தது.

பெரியாம்பளை வீட்டிலிருந்து ஏதோ சத்தம் வந்ததுபோல் இருந்தது. எங்களை சைகையால் கை அமர்த்திவிட்டு, செந்தில் கையில் கத்தியோடு உள்ளே நுழைந்தான். சொர்ணகுமார் எங்களோடு இருந்த தைரியத்தில் நாங்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு செந்திலின் குரலுக்காகக் காத்திருந்தோம். இரவின் அந்த சோடிய இளமஞ்சள் நிறம் ஒரு மாயம்போல் அப்பி இருந்தது.

சற்று நேரம் கழித்து உள்ளிருந்த வந்த செந்தில், இரண்டு தெருக்கள் தள்ளி யாரோ ஓடுவதுபோல் இருக்கிறது என்று சொல்லி என்னையும் சொர்ணகுமாரையும் அங்கிருந்து உடனே கிளப்பிக்கொண்டு போனான். ரகு எங்களுக்குப் பின்னால் மெதுவாக வந்து கொண்டிருந்தான். அன்று எந்தத் திருடர்களும் எங்களிடம் அகப்படவில்லை.

இரண்டு மூன்று நாட்கள் எங்களின் காவல் தொடர்ந்தது. சொர்ணகுமார் சற்று பரபரப்பாக இருந்தான், கடைசி நாள் இரவு முழுக்கவே.

ஒரு வாரம் கழித்து, ரோந்து போலீசார் குளத்துமேட்டு ஆட்கள் நான்கு பேரைப் பிடித்துவிட்டார்கள். அவர்கள் `ஊரைப் பயமுறுத்துவதே நோக்கம்' என்று சொன்னது சற்று அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால், எங்களுக்குத்தான் வேறுவிதமான அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். மிகப் பெரிய அதிர்ச்சி அது.

3.

சொர்ணகுமார் எங்களிடம் சொல்லியபோது நாங்கள் உறைந்துவிட்டோம். செந்தில், சொர்ணகுமாரிடம் சிரித்துக்கொண்டே, ``நேரா கேட்டாவே பெரியாம்பள நமக்கு காசு கொடுத்துருவாப்ளடா சொர்ணா’’ என்றான். ஆனால், சொர்ணகுமார் அதைக் கேட்கவில்லை.
சொர்ணகுமார் விவரித்தது இதுதான். அந்தக் கடைசி இரவில், வழக்கத்துக்கு மாறாக முன்னமே சென்றுவிட்ட சொர்ணகுமார், ஏதோ சப்தம் என பெரியாம்பளை வீட்டின் உள்ளே நுழைந்தவன், அங்கே அழகுமுத்து வேலை முடித்து வெளியேறுவதைப் பார்த்து, இருளில், ஆசை உந்த கையைப் பிடித்து இழுக்க, அவள் திமிறி இருக்கிறாள். முடிந்து வெளியேறும்போது `லூஸுப் பெரியாம்பள’ என திட்டிக்கொண்டே போனாளாம்.

நாங்கள், `இது பெரிய பாவம்’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவன், பெரியாம்பளையிடம் அழகுமுத்து சொல்லி அழுதாகவும், அவள் சொந்தம் என்பதால் தானே திருமணம் செய்துகொள்ளத் தயார் என்றும் சொல்லியிருக்கிறான். ஆனால், அதற்கு ஈடாக, அவன் கேட்ட தொகை கிட்டத்தட்ட அவரின் பாதிச் சொத்து, அதைத் தந்தால் போலீஸுக்குப் போகாமல் முடித்துக்கொள்ளலாம் என முடித்தான்.
செந்தில் விருட்டென வெளியேறினான்.

பெரியாம்பளை எங்கள் மூவரையும் அடிபட்ட கண்களோடு பார்த்தார். அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. தன்னிச்சையாய் தன் சாவிக்கொத்தைத் தடவின.

சொர்ணகுமார்-அழகுமுத்து திருமணம் நடந்த கையோடு, அவன் கடையை விரிவுபடுத்தி, பளபளவென மாறினான். அதிலிருந்து மூன்று நான்கு மாதங்களில் பொருளீட்டும்பொருட்டு, கித்தான் சாக்கின் யூரியா மூட்டையைப் பிரித்ததுபோல் பொலபொலவென நாங்கள் நான்கு திசைகளில் சரிந்து பிரிந்தோம். ஆனாலும் மனம் ஊரை நோக்கித்தான் மையமாகக் குவிந்து இருந்தது. அதனால்தான், இதோ செந்திலின் மகன் காது குத்துக்காக மீண்டும் சந்திக்கிறோம், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு.

அய்யனார் கோயிலின் கம்பீர வெள்ளைக் குதிரையை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது, பின்னால் இருந்து அணைத்தான் ரகு. அவனுக்குப் பக்கத்தில் சொர்ணகுமார், அடையாளம் தெரியாமல், கண்கள் பெரிது பெரிதாக, முகம் சிறிதாகிப் போய், “சுகர்டா மாப்ள” என்றான்.

செந்தில் பட்டு வேட்டியில் மாப்பிள்ளைத் தோரணையில் மகனைத் தூக்கிக்கொண்டு வலம் வந்தான்.

“கடையில ஆள் இல்லடா. இப்ப மூணு கட மாப்ள. ஊர்ல எவென் என்ன வாங்கணும்னாலும் நம்ம கடைங்கதான். நைட்டு வர்றேன்” என்று சொர்ணகுமார் சற்று நேரத்தில் கிளம்பிப் போனதும் பெரியாம்பளை வரவும் சரியாய் இருந்தது.

ஆச்சர்யமாக, அன்று போலவே இருந்தார். அதே மலர்ந்த சிரிப்பு, சோழிசோழியாய் பற்கள். என்னையும் ரகுவையும் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டார்.

“என்னா பெரியாம்பள...”

கக் கக் கக்கென விநோத ஒலியில் சிரித்தவர், சாப்பிட மறுத்து, பிரதோஷம் என்பதை நினைவுபடுத்தி, கோயிலுக்குப் போவதாகச் சொல்லிப் போனார். எப்பொழுதும்போல வேட்டியை ஒதுக்கி, அண்டிராயரில் இருந்து சலவைத்தாள்களை எடுத்து செந்திலின் மகன் கையில் திணித்துவிட்டு, “ஒங்களுக்கு ஒரு விசேஷம் எப்ப வரும்னு சொல்லுங்கடா, சிறப்பா செஞ்சுபுடுவோம்” எனச் சொல்லி, மீண்டும் கலகலவென சிரித்தபடியே போய்விட்டார்.

“ப்ச், ஆனாலும் சொர்ணகுமார், இம்புட்டுப் பழகிட்டு, இப்பிடி அவன் பண்ண மேட்டருக்கு, இந்தாள இழுத்து, சொத்த வாங்குனது தப்புதானடா? பாவம், இந்தாளப் போய் ஏமாத்திப்புட்டானேடா!” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னரே, செந்தில் சிரிப்பை அடக்கிக்கொண்டே மெல்லிய குரலில் சொன்னான்.

“ஏமாந்தது பெரியாம்பள இல்லடா. சொர்ணகுமார்தான். திருடனைப் பிடிக்கத் திரிஞ்சோமே, அப்ப, நான் மொதோ நாள் உள்ள போயிட்டு வந்தேனே, உள்ள என்னத்தப் பார்த்தேன் தெரியுமா?”
ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து சிரித்துக் கொண்டே ஊதினான்.

எங்கள் காலடியில் வந்து விழுந்த பந்தை நோக்கி ஓடி வந்தான் ஒரு சிறுவன்.

பந்தை எடுத்துக் கொடுத்ததும், ‘டாங்க்ஸ் அங்கிள்’ எனச் சொல்லி, ஈ எனச் சிரித்தான், சோழிப் பற்கள் தெரிய.

``இவந்தான் சொர்ணகுமார் மகென், சுப்புரமணி’’ என மீண்டும் ஊரே அதிரச் சிரித்தான் செந்தில்.