வான்கா, லியனார்டோ டாவின்ஸி, ஆந்த்ரே ரூப்லவ், மைக்கேல் ஆஞ்சலோ, பிக்காஸோ... புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை வீட்டில்வைத்து அழகுபார்க்க எல்லோருக்கும் ஆசைதான். நம் ஏழு தலைமுறை சொத்தை விற்றால்கூட இவர்களின் ஒரிஜினல் படங்களை வாங்க முடியாது என்பதே யதார்த்தம். ஆனால், அச்சு அசலாக அவற்றின் நகல் ஓவியங்களை, நம் பாக்கெட்டை பதம் பார்க்காத விலையில், வாங்கலாம். இப்படி, பிரபல ஓவியர்களின் படங்களை வரைவதற்கு என்று ஒரு ஊரே இயங்கிக்கொண்டிருக்கிறது.

எங்கே இருக்கிறது அந்த ஊர்..? வழக்கமாக, நகலெடுப்பு வேலைகளை கனகச்சிதமாக செய்யும் சீனாவில், குவாங்டாங் (Guangdong) மாநிலத்தில் இருக்கிறது. பெயர், டாஃபென் (Dafen). எல்லா வீடுகளிலும் கேன்வாஸ், பிரஷ்கள்தான் கண்ணில்படுகின்றன. எங்கு திரும்பினாலும் வண்ண வண்ண ஓவியங்களே காட்சியளிக்கின்றன. ஊரில் உள்ள அத்தனை பேருக்குமே ஓவியம் வரைவதுதான் தொழில்.

சுமார் 8,000-க்கும் மேற்பட்ட ஓவியர்கள் இங்கு இருக்கிறார்கள். வீட்டு வாசல்களிலேயே விதவிதமான ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் விநியோகஸ்தர்களும் இங்கு குவிகிறார்கள். மோனலிசா, லாஸ்ட் சப்பர் எதுவாகவும் இருக்கட்டும்... எது ஒரிஜினல், எது டூப்ளிக்கேட் என்று சொல்ல முடியாத அளவுக்கு தத்ரூபமாக இருப்பதுதான் அதிசயம்.

1990-ம் ஆண்டில் ஹாங்காங் ஓவியர் Huang Jiang, இங்கு ஒரு `ஆர்ட் ஒர்க்ஷாப்' நடத்தினார். அப்போது, இந்த ஊரைச் சேர்ந்த சிலர், அவரிடம் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டனர். அவர்கள், மற்றவர்களுக்கும் கற்றுத்தந்தனர். இப்படித்தான் இந்த கிராமம் ஓவியக் கிராமமாக மாறியது. கடல் பக்கத்தில் இந்த ஊர் அமைந்திருப்பதால், முன்பு மீன் பிடிப்புதான் பிரதான தொழிலாக இருந்தது. இப்போது அந்த நிலைமை மாறி, வருடத்துக்கு ஆயிரக்கணக்கான ஓவியங்களை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது இந்த ஊர். அதனால்தான் இந்த ஊ்ரை `ஆயில் பெயின்டிங் ஃபேக்டரி' என்று அழைக்கிறார்கள்.