சட்டைப்பையில் வீட்டைச்

சுமந்துகொண்டிருப்பவன்

அதை அடிக்கடி எடுத்து வருடிக்கொடுக்கிறான்

ஒரு நாய்க்குட்டியை வருடும் வாஞ்சையோடு

சட்டைப்பையில் இருக்கும் வீடு

எப்போதாவது குரைக்கும்போது

அவன் பதறுகிறான்

சட்டைப்பையில் வீடு உள்ளவன் கழுத்தில்

மாலை ஆறு மணி நீளத்துக்கு

ஒரு கயிறு கட்டப்பட்டுள்ளது

வழக்கத்தின் உலர்ந்த புல்வெளிகளில்

சீதோஷணமற்ற வானிலைகளில்

தன் மரிகளை மேய்த்துத் திரும்புகிறான்

சட்டைப்பையில் வீடுள்ளவன்

பிரம்புகளின் மொக்கை நகைச்சுவைக்குப் பல்லை இளிக்கிறான்

எளிய மிரட்டல்களுக்கு

மரித்துப் பிழைக்கிறான்

சட்டைப்பையில் வீடுள்ளவன்

மூன்றாவது ரவுண்டில் எலுமிச்சை கடிக்கிறான்

முகநூலில் பொங்கல் வைக்கிறான்

சட்டைப்பையில் வீடுள்ளவன்

தொலைதூரப் பிரயாணங்களில்

ரயிலின் கடைசிப் பெட்டியாக

தன் வீட்டையும் இணைக்கிறான்

இறங்கும்போது கவனமாக அதை

தன் சட்டைப்பையில் வைத்துக்கொள்கிறான்

சட்டைப்பையில் வீட்டைச்

சுமந்துகொண்டிருப்பவன்

அதை அடிக்கடி எடுத்து வருடிக்கொடுக்கிறான்

ஒரு நாய்க்குட்டியை வருடும் வாஞ்சையோடு

சட்டைப்பையில் இருக்கும் வீடு

எப்போதாவது குரைக்கும்போது

அவன் பதறுகிறான்

சட்டைப்பையில் வீடு உள்ளவன் கழுத்தில்

மாலை ஆறு மணி நீளத்துக்கு

ஒரு கயிறு கட்டப்பட்டுள்ளது

வழக்கத்தின் உலர்ந்த புல்வெளிகளில்

சீதோஷணமற்ற வானிலைகளில்

தன் மரிகளை மேய்த்துத் திரும்புகிறான்

சட்டைப்பையில் வீடுள்ளவன்

பிரம்புகளின் மொக்கை நகைச்சுவைக்குப் பல்லை இளிக்கிறான்

எளிய மிரட்டல்களுக்கு

மரித்துப் பிழைக்கிறான்

சட்டைப்பையில் வீடுள்ளவன்

மூன்றாவது ரவுண்டில் எலுமிச்சை கடிக்கிறான்

முகநூலில் பொங்கல் வைக்கிறான்

சட்டைப்பையில் வீடுள்ளவன்

தொலைதூரப் பிரயாணங்களில்

ரயிலின் கடைசிப் பெட்டியாக

தன் வீட்டையும் இணைக்கிறான்

இறங்கும்போது கவனமாக அதை

தன் சட்டைப்பையில் வைத்துக்கொள்கிறான்