நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

பாலாஜி, துர்காவின் மேல் முழுமையாக சாய, அந்த நேரம் பார்த்து வீட்டு வாசலில் கால் வைத்த ஆனந்த், அந்தக் காட்சியைப் பார்த்து பலத்த அதிர்ச்சி அடைந்தான். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு!

என்ன நடக்கப் போகிறது இனி?!

- இப்படி முடிந்திருந்தது கடந்த எபிசோட்.

இங்கே, 'அடுத்த எபிசோட் இயக்குநராக நான்தான் இருக்க வேண்டும்' என்கிற ஆவலில் போட்டிப் போட்டுக் கொண்டு 'கதை சொல்லி'களாக கலக்கியிருக்கிறார்கள் வாசகிகள்!

திருநின்றவூர் - குப்பிபாய், சேலம் - திலகா, 'பாலாஜிக்கு கோமா' என்றும், '2 ஆபரேஷன்கள்' என்றும் ஆளுக்கொன்றாகச் சொல்கிறார்கள்! மறுபடியும் ஆஸ்பத்திரியா?

சங்கரன்கோயில் - சுகுணா ரவி, குளித்தலை - சுபா... 'துர்கா வெளிநாடு போவதை பாலாஜிக்கே தாங்க முடியவில்லை! ஆனந்த் எப்படி தாங்குவான்' என்கிறார்கள்.

ஈரோடு - விஜயலட்சுமி, சென்னை - கௌசல்யா... 'முதலில் சந்தேகப்படும் ஆனந்த், பிறகு வெட்கப்பட்டு தெளிகிறான்' எனக் கதையைத் திருப்பப் பார்க்கிறார்கள்!

சென்னை - பிரேமா, 'பாலாஜி மீது சந்தேகம். இனி, இவர்களுக்கு துர்கா உதவ வேண்டாம். தனிக்குடித்தனம் போகலாம்’ என ஆனந்த் கருதுவதாக ஆவேசப்படுகிறார்!

மும்பை - மீனலதா, 'சந்தேகம் காரணமாக ஆனந்த் ஒரு மாதிரி அருவருப்பு அடைகிறான்' என புதுப் பாதை போடுகிறார்! இந்தச் சகோதரிக்கு இரண்டாவது இடத்தைத் தரலாம்!

திருவான்மியூர்- ஜெயா சங்கரன் சொல்கிறார், ''என்ன இருந்தாலும் இது ஒரு கணவனை உறுத்தும்! பாலாஜி அட்வான்டேஜ் எடுக்கக் கூடாது! 'இந்த அளவுக்கு நீ செய்தது போதும்' என துர்காவை தன்னுடன் அழைக்க நினைக்கிறான் ஆனந்த்!''

- புதிதாக இல்லை என்றாலும், சகோதரி இதைச் சொல்லியிருந்த விதம்... அழுத்தமான யதார்த்தம். ஒரு கணவனின் நியாயமான சிந்தனை! எனவே இந்த இதழ் எபிசோட் இயக்குநர் பதவி இவருக்குத்தான்! வாழ்த்துக்கள்!

ஆனந்த்தின் உடம்புக்குள் ஒரு நெருப்புப் பந்து உருண்டது. ஒரு நொடி அங்கு நிற்கக்கூட முடியவில்லை அவனால். ஆவேசம் தலை முதல் கால் வரை மின்சார வேகத்தில் பயணித்தது. அதற்குள் தன் மேல் சாய்ந்த பாலாஜியை தாங்கிப் பிடித்து, மெள்ளச் சரித்து சோபாவில் படுக்க வைத்தாள் துர்கா. ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தாள். ஆனந்த் இதையும் பார்த்தான். ஆனால், அவன் வந்ததையே துர்கா கவனிக்கவில்லை!

பாலாஜியின் கால்களை தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு சூடு பறக்கத் தேய்த்தாள். சில நொடிகளில் பாலாஜி கண் விழிக்க,

வாசலில் காலை வைத்தார் நடேசன்.

''ஆனந்த், உள்ளே போகாம ஏன் இங்கே நிக்கறே?''

''மயங்கி விழுந்த பாலாஜிக்கு துர்கா முதலுதவி செஞ்சுட்டு இருக்கா. அது முடிஞ்சு உள்ளே போகலாம்னு காத்துக்கிட்டிருக்கேன்.''

''எ... என்னடா சொல்றே... பாலாஜிக்கு மயக்கமா? நீ போய் உதவ வேணாமா? பார்த்துட்டு வாசல்லயே நிக்கறே?''

- கேட்டபடியே அவன் முகத்தைப் பார்த்த நடேசனுக்கு 'திக்’கென்றது!

''எ... என்னடா?''

ஆனந்த் பேசவில்லை!

''இங்க வேணாம். வெளிய வா'' என அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடேசன் வெளியே வந்தார். தெருக்கோடியில் உள்ள கோயில் திறந்திருந்தது. இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

''ஆனந்த்... என்ன நடந்தது?''

''மயக்கமாகி பாலாஜி விழப்போக, இவ தாங்கிப் பிடிச்சுருக்காப்பா?''

''அதுல தப்பில்லையே ஆனந்த்... மனிதாபிமானம்தானே?''

ஆனந்த் பேசவில்லை!

''நீ... நீ... துர்காவை சந்தேகப்படறியா?''

''ஐயோ... இல்லப்பா! ஆனா... நான் முதல்ல புருஷன். அப்புறம்தான் மனுஷன்!''

''இதுக்கு என்னடா அர்த்தம்?''

''நிச்சயமா தப்பான அர்த்தம் இல்லைப்பா. எனக்கு துர்கா மேல அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதேசமயம் இத்தனை நெருக்கமா அவமேல சாஞ்சு நிற்கற பாலாஜியைப் பார்த்தப்ப... ஸாரிப்பா... என்னால... முடியல!''

''தப்புடா ஆனந்த்! இந்த வார்த்தைகளை துர்கா கேட்டா, அவ உயிரே போயிடும்டா. கல்யாணி இறந்த துக்கம் - விவரம் தெரியாத குழந்தை... எப்படி எதிர் காலத்தை சந்திக்கப் போறோம்னு நெனைச்சு பாலாஜிக்கு மயக்கம் வந்திருக்கலாம்!''

''எனக்கும் புரியுதுப்பா. துக்கத்தோட உச்சத்துல, அனுசரணையான ஒரு பெண் பக்கத்துல இருந்தா, ஆம்பளைக்கு மயக்கமும் வரும், வேற உணர்வுகளும் சமயத்துல தலை தூக்கிடும். நான் குறுகின மனசோட இதைப் பேசல. எச்சரிக்கை நிமித்தம் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிஇருக்கேன். துர்கா இந்த வீட்ல இருந்து உதவினது போதும். இனி கூட்டிட்டுப் போயிடலாம்!''

''என்னடா இப்படிப் பேசறே?''

''அப்பா... ஒரு ஆம்பளைதான். உங்களுக்கும் எல்லாம் புரியும். மனைவியைச் சந்தேகப்படற மட்டமான புருஷன் இல்லை நான். ஆனா... யதார்த்தத்தையும் ஒரு ஆம்பள யோசிக்கறதுல தப்பில்ல. அதுக்கு சந்தேகம்னு பேர் கட்டி கொச்சைப்படுத்திடாதீங்க. பரந்த மனசு, உன்னத சிந்தனைனு சொல்லிக்கிட்டே... உள்ளுக்குள்ளே புழுங்கிச் சாக நான் தயாரா இல்ல. என்னையே ஏமாத்திக்கவும் தயாரா இல்ல!''

''இதை எப்படி நீ துர்காகிட்ட பேசப் போறே?''

''எதையும் வெளியில காட்டிக் காம பேச எனக்குத் தெரியும். வாங்க!''

ஆனந்த் நடக்க, நடேசனுக்கு புதுக் கவலை பிடித்துக்கொண்டது. 'கடவுளே... இந்த விவகாரம் எந்த மாதிரி ஒரு புயலைக் கிளப்பப் போகுதோ... என்ன நடக்குமோ...’

இருவரும் வீட்டுக்குள் நுழைய, பாலாஜி கண் விழித்து சோபாவில் அமர்ந்திருக்க, துர்கா சூடான பாலை அவனுக்குத் தந்தவள், வாசலைப் பார்த்தாள்.

''ரெண்டு பேரும் வாங்க! கொஞ்சம் முன்ன அத்தான் மயங்கி விழுந்து, என் மேல சாய்ஞ்சு... நான் பயந்தே போயிட்டேன்!''

நடேசன் திரும்பி ஆனந்தைப் பார்த்தார். மனசு பேசியது... 'பாருடா... கள்ளமில்லாத பொண்ணு துர்கா!’

''ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்னு நினைச்சேன். முதலுதவி செஞ்சு பார்த்தேன். நல்ல காலம் முழிச்சுக்கிட்டார்!''

அருகில் அமர்ந்த நடேசன், ''எதுக்கு பாலாஜி மயக்கம்? கல்யாணி இனி திரும்பி வரவா போறா? உங்க மனசைத் தேத்திக்க வேண்டாமா?'' என்றார்.

''அதில்லைப்பா... நமக்கெல்லாம் ஆதரவா இருக்கிறவ துர்கா மட்டும்தான்! அவளும் வெளிநாடு போயிட்டா நானும் குழந்தையும் எப்படி வாழ்வோம்? நெனச்சுக்கூட பாக்க முடியலை. அவளைப் போகவிடாதே கல்யாணினு கேட்டுக்கிட்டேன். தாங்க முடியாம மயக்கமாயிட்டேன்!''

- பாலாஜி யதார்த்தமாகப் பேசினாலும் ஆனந்துக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவனது மனநிலை நடேசனுக்கு நன்றாகப் புரிந்தது!

''சரி, நான் சாப்பாடு ரெடி பண்றேன்!'' என்று துர்கா எழுந்தாள்.

''பாலாஜி... நீங்க உள்ள போய்ப் படுங்க. வாங்க...'' என அழைத்துக் கொண்டு போய் உள்ளே படுக்க வைத்தார் நடேசன்.

''இப்ப எனக்கு ஒண்ணும் இல்லைப்பா!''

''பாலாஜி... நான் கொஞ்சம் பேசணும் உங்ககிட்ட!''

''சொல்லுங்கப்பா!''

''இன்னிக்கு சமையல முடிச்சுட்டு துர்கா எங்ககூட கிளம்பட்டும்!''

''ஐயோ... ஏம்ப்பா?’'

''என்ன பாலாஜி நீங்க? அவளுக்குனு ஒரு குடும்பம் இல்லையா? எத்தனை நாளைக்கு இங்கேயே இருக்க முடியும்?''

பாலாஜி நிமிர்ந்து பார்த்தான். அதேநேரம் சமையல் கட்டுக்குள் துர்கா இருக்க, ஆனந்த் பின்னால் வந்தான்!

''துர்கா... உங்கத்தானுக்கு உன்னை வெளிநாட்டுக்கு அனுப்ப விருப்பமில்லை. உன்னை அனுப்பிட்டு நாங்க எப்படி வாழ்வோம்னு கேக்கறார். ஆனா, பணத்துக்காக உன்னை அனுப்ப நான் தயாரா இருக்கேன். எத்தனை கேவலமாயிட்டேன் பார்த்தியா நான்?''

துர்கா பதறித் திரும்பினாள்.

''என்ன பேசறீங்க ஆனந்த் நீங்க?''

''பணப் பிரச்னைகளைச் சமாளிக்க எனக்குத் துப்பில்லை. பிரச்னைகள்ல பெரும்பகுதி என் குடும்பத்தோடது. அதனால் உன்னைத் தடுத்து நிறுத்தற யோக்கியதை எனக்கு இல்லை!''

''அப்படி நான் நெனச்சேனா?''

''நான் இப்பப் பேசறது என்னைப் பற்றி. கணவனைவிட, ஒரு மனைவி எல்லா வகையிலும் திராணியா இருந்துட்டா, கணவனுக்கு எதையும் யோசிக்கற அருகதைகூட இருக்காது துர்கா!''

துர்கா ஆடிப் போனாள்.

இங்கே நடேசன்... ''துர்காவை வெளிநாட்டுக்கு அனுப்ப, உங்களுக்கே பிடிக்கல. ஆனந்தால எப்படி பாலாஜி தாங்கிக்க முடியும்?''

''நிச்சயமா முடியாது!''

''அவனுக்கும் பிரச்னை காரணமா ஒடம்பும் மனசும் உடைஞ்சு போயாச்சு. அவ வெளிநாட்டுக்குப் போறாளா, இல்லையாங்கறது இப்ப முதல் பிரச்னை இல்லை. ஆஸ்பத்திரில படுத்து எழுந்து வந்துருக்கான் ஆனந்த். அவன்கூட துர்கா இருக்கணும்!''

''நிச்சயமாப்பா!''

''ராஜா சின்னக் குழந்தை. அவனுக்கொரு தாயன்பு வேணும்.''

''அதுக்கு அவன் கொடுத்து வெக்கல.''

''இல்லை பாலாஜி... அதுக்கும் வழியிருக்கு.''

- பாலாஜி புரியாமல் பார்த்தார்.

சமையல்கட்டுக்குள் துர்கா கலக்கத்துடன் ஆனந்தைப் பார்த்தாள்.

''சமையல் முடிச்சுடறேன். நான் உங்களோட நம்ம வீட்டுக்கு வர்றேன்!''

அடுத்த ஒரு மணி நேரத்தில் சமையல் முடித்து, எல்லோரையும் சாப்பிட வைத்தாள்.

''அத்தான்... ராஜாவையும் கூட்டிட்டு அவர்கூட, எங்க வீட்டுக்குப் போறேன்!''

பாலாஜி முகத்தில் ஒரு வேதனை படர்ந்தது. அதை ஆனந்த் கவனித்தான்.

''ராஜா எதுக்கு துர்கா? அவனை இங்கே விட்டுட்டுப் போ...!''

ராஜா, அஞ்சு இருவரும் உள்ளே ஓடி வந்தார்கள்!

''ராஜா, சித்தி அவங்க வீட்டுக்குப் போறாங்களாம்...''

''வேண்டாம் சித்தி... நீ போகாதே!''

''உன்னையும் கூட்டிட்டுப் போறேன் ராஜா!''

''அப்படீனா சரி சித்தி!''

''ராஜா... நீ என்கூடயே இரு!''

''அம்மா இல்லாம, இந்த வீட்டுல இருக்கப் பிடிக்கலப்பா!''

துர்கா அருகில் வந்தாள்.

''ராஜா இப்ப என்கூட வரட்டும். அப்புறமா என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்!''

அவளை அனுப்ப பாலாஜிக்கு விருப்பமில்லை. அதைத் தாண்டி பேசவும் வழியில்லை. புறப்பட்டு விட்டார்கள். அரை மணி நேரத்தில் வீட்டுக்குள் நுழைய, சுதாவின் அழுகைக் குரல்!

''அத்தே... என்னாச்சு சுதாவுக்கு? ஏன் அழறா?''

''நீயே போய்ப் பாரு!''

துர்கா உள்ளே வந்தாள். சுதா கட்டிலில் கவிழ்ந்து படுத்து அழுது கொண்டிருந்தாள்!

''சுதா... என்னாச்சும்மா?''

சுதா திரும்பினாள்!

''அண்ணி... என் முகத்தைப் பாருங்கண்ணி!''

அம்மைத் தழும்புகள் பரவலாக!

''என் அழகே போயிடுச்சு. அன்வர் என்னை ஏத்துப்பாரா?''

''அசடு மாதிரி பேசாதே. இந்தத் தழும்பை போக்கிடலாம். டாக்டர்கிட்டப் பேசலாம். ஏன் வேற மாதிரியெல்லாம் யோசிக்கறே? அன்வர் எப்பவுமே மனசை மட்டுமே பாக்கறவன்... அழாதே!''

சமாதானப்படுத்திவிட்டு துர்கா வெளியே வர, ''ராஜா எதுக்கு வந்திருக்கான்..?'' என்றாள் ராஜம்.

''அம்மாவை இழந்துட்டான். துர்காதான் ஆதரவு.''

''ஏன்... அப்பா இல்லையா?''

''என்ன ராஜம் பேசற? நீ மனுஷிதானா? தாயில்லாக் குழந்தை இது.''

''சரி... இன்னிக்கு இவன் வருவான். நாளைக்கு அப்பன் வந்து நிப்பான். இது சத்திரமா?''

''ராஜம்! என்ன அடிபட்டாலும், நீ திருந்தவே மாட்டியா?''

துர்கா அருகில் வந்தாள்.

''அத்தே... இந்தக் குழந்தை நிரந்தரமா இங்கே இருக்க மாட்டான். கவலைப்படாதீங்க!''

''நீ ஏம்மா விளக்கம் சொல்லிட்டு..?''

''அவ இன்னும் ஒரு மாசத்துல, தான் பெத்ததைக்கூட விட்டுட்டு விமானத்துல ஏறி பறக்கப்போறா. என் பேத்திக்கே இங்கே நாதியில்லை. தாயில்லாப் புள்ளைக்கு வக்காலத்து வாழுது.''

''இல்லை அத்தே... நான் வெளிநாட்டுக்குப் போகப் போறதில்லை!''

நடேசன் அருகில் வந்தார்.

''என்னம்மா சொல்றே நீ?''

''ஆமாம் மாமா. நான் முடிவெடுத்துட்டேன். நாளைக்கே சேர்மனைப் பார்த்து அதைக் கேன்சல் பண்ணப் போறேன். பணப் பிரச்னைகளை தீர்க்க வேற வழியிருக்கு!''

''ஓ... உன் பிள்ளைக்காக நீ கவலைப்படலை. அக்கா குழந்தை அநாதை ஆனவொடன, தாய்மை பொங்குதாக்கும்?''

''ஏண்டீ இப்படி மடக்கி மடக்கிப் பேசற?''

''இதப்பாருங்க... இந்த வீட்ல என் பேத்திக்கு மட்டும்தான் இடம். வேற யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்!''

''அடிப்பாவி... உன் நெஞ்சுல ஈரம் வத்திப் போச்சாடீ?''

''மாமா... விட்டுருங்க. அவங்க சொல்றதுல தப்பில்லை. அதுக்காக தாயில்லாக் குழந்தையை நான் விடவும் முடியாது. நாங்க வெளில போயிடறோம்!''

''நாங்கனா?''

''உன் பிள்ளை ஆனந்த் தனிக்குடித்தனம் போகப் போறான். புரியுதா?''

ராஜம் ஆடிப் போனாள்!

''இது நியாயமாடா ஆனந்த்? அவளோட அக்கா செத்ததுக்காக உன்னை நான் பிரியணுமா?''

''அத்தே... உங்க பிள்ளையை உங்ககிட்டேயிருந்து நான் பிரிக்கப் போறதில்லை. அந்தப் பாவம் எனக்கு ஏன்? இந்த ரெண்டு புள்ளைங்களைக் கூட்டிட்டு நான் மட்டும் போறேன்!''

''எங்கே? உங்கக்கா வீட்டுக்கே நிரந்தரமா போயிடப் போறியா?''

ஆனந்த் விசுக்கென நிமிர்ந்தான்! அதை நடேசன் கலக்கத்துடன் கவனித்தார்.

''எதுக்கு அக்கா வீட்டுக்கு நான் போகணும்? தனியா எனக்குனு ஒரு வீடு பாக்கச் சொல்லிஇருக்கேன். யாரையும் நான் பிரிக்கலை. அந்தப் பாவமும் எனக்கு வேண்டாம். அதுக்காக இந்தக் குழந்தையை ஏங்க வைக்க முடியாது. என்னை வளர்த்தவ எங்கக்கா. அவ குழந்தையை அநாதையா விட்டா... நான் மனுஷியில்லை!''

ஆனந்த் அருகில் வந்தான்!

''மனைவியை இழந்ததால, பாலாஜி தனி மனுஷன் ஆயிட்டார். நீ உயிரோட இருக்கும்போதே என்னை ஏன் தண்டிக்கறே?''

''இல்லை ஆனந்த்... உங்களை நான் தண்டிக்கல. ஆனா, வயசான பெத்தவங்ககிட்டேயிருந்து உங்கள பிரிச்சிட்டேன்னு ஏன் பழிக்கு ஆளாகணும்?''

நடேசன் அருகில் வந்தார்.

''நான் உயிரோட இருக்கேன்மா. ஆரோக்கியமா இருக்கேன். நீ ஆனந்தை தாராளமா கூட்டிட்டு போ. உனக்குக் கடமைகள் நிறைய இருக்கு. உன்னை வாசல்ல நிக்க வெச்ச ராஜத்துக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது!''

''ஆனந்த்... நீ போகப் போறியாடா?''

சில நொடிகள் மௌனம்!

''ஆமாம்மா... நான் போய்த்தான் ஆகணும்!''

''கல்யாணம் ஆகாத சுதா இங்கே இருக்கா. அவளுக்கென்ன வழி? நீ செய்றது உனக்கே நல்லா இருக்காடா?''

''ஆனந்த்... அவ கிடக்கா. உன் முடிவை நீ மாத்திக்காதே!''

மறுநாள் காலை அன்வர் வந்து விட்டான்!

''அக்கா... வீடு ரெடி. பாத்துடறீங்களா?''

ஆனந்தும், துர்காவும் புறப்பட, நடேசனையும் அழைத்தாள் துர்கா. அவரும் புறப்பட்டார். அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளம். இரண்டு படுக்கையறை வசதிகளுடன் கூடிய ஃப்ளாட். வசதியாக இருந்தது. வாடகை பத்தாயிரம்... ஆறு மாத முன்பணம்!

''வீடு நல்லாயிருக்கு. இதுக்கு வேற பணம் புரட்டணுமே அன்வர்?''

''நான் பாத்துக்கறேன்க்கா. நல்ல நாளா பார்த்து பாலைக் காய்ச்சி, குடித்தனம் வந்துடு!''

''என்ன செய்யலாம் ஆனந்த்?''

''ம்! வந்துடலாம்!''

அங்கேயே நாள் பார்த்தார்கள். வரும் புதன் அற்புதமான நாளாக இருந்தது. வீட்டுக்கு வந்து விவரம் சொல்ல, ராஜம் கொதித்துப் போயிருந்தாள். கல்பனா இருந்தாள்.

''ஆனந்த்... நீ தனிக் குடித்தனம் போறது நியாயம் இல்லை. அவளோட அக்கா குழந்தைக்காக பெத்தவங்கள பிரியறது கொடுமை!''

''நான் ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்க மாட்டேண்டி கல்பனா!''

- ராஜம் நீலிக் கண்ணீர் வடித்தாள்.

''அது நடந்தா, குடும்பமே உருப்படும்!''

- நடேசன் அழுத்தமாகச் சொன்னார்.

புதன் அதிகாலை புது வீட்டில் பால் காய்ச்சினார்கள். ராஜம், கல்பனா, சுதா யாருமே வரவில்லை. நடேசன் கூடவே இருந்தார். வராகன் மற்றும் அன்வர் இருந்தார்கள்.

துர்கா, குழந்தைகளுடன் வீட்டை சரி செய்து கொண்டிருக்க, வராண்டாவில் நடேசன். ஆனந்த் அருகில் வந்தான்.

''சபாஷ்டா ஆனந்த்... நீ இப்பிடி ஒரு முடிவுக்கு வந்ததுதான் எனக்கு சந்தோஷம்!''

''காரணம் இருக்குப்பா! நான் ஆஸ்பத்திரில இருந்தப்ப, வெளிநாட்டுக்குப் போக வேண்டாம்னு தடுத்தேன். துர்கா கேக்கல. இப்ப பாலாஜி மயங்கி விழுந்தப்ப வெளிநாட்டு பயணத்தை ரத்து பண்ணிட்டா. அஞ்சுவைப் பிரியறதுக்குக்கூட யோசிக்காதவ... ராஜாவை விட்டுட்டுப் போக யோசிக்கறா. புள்ளைங்களோட நாளைக்கு துர்கா மட்டும் தனிக்குடித்தனம் வந்துட்டா, பாலாஜி வீட்டைக் காலி பண்ணிட்டு இங்கேயே குடியேறலாம். காரணம் கேட்டா, என் மகனைப் பிரிய முடியலைனு சொல்லிக்கலாம். எதுவும் விபரீதமா நடந்துடக்கூடாதேனுதான் உங்களை எல்லாம் பிரிஞ்சு நான் தனிக் குடித்தனம் வந்தேன். ஸாரிப்பா!''

''இவனுக்குள் இப்படி ஒரு விஷமா? இது எங்கே கொண்டு போய் விடப் போகிறது?'' என்று நடேசன் ஆடிப் போய் நிற்க,

கதவோரம் நின்று சகலமும் கேட்ட அன்வருக்கு... அதிர்ச்சி தாள முடியவில்லை!

இனி, துர்காவின் எதிர்காலம் எப்படி?

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம். சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை

பிரஷர் குக்கர் பரிசு!

''நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்ல வேலை பார்த்து ரிட்டயர் ஆகி, இன்னமும் ஓய்வில்லாமல் படித்துக்கொண்டு இருக்கும் சீனியர் சிட்டிசன் நான்'' என்று தன்னை அழகாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஜெயா சங்கரன், ''சமீபத்தில் பெரிய விபத்தில் சிக்கி உயிர்பிழைத்து வந்திருக்கும் எனக்கு, அவள் விகடனில் வெளியாகும் தன்னம்பிக்கை கட்டுரைகள்தான் ஆதார ஆறுதல். பல சமயங்களில், 'கவலைப்படாதே ஜெயா, உன்னைவிட கொடுமையான போராட்டச் சூழலில் நிறைய பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்' என்று என் தோள் தட்டி ஆறுதல் சொல்லும் அன்புத் தோழியும், மகளுமாய் அரவணைத்திருக்கிறது அவள் விகடன். இப்போது இயக்குநர் கௌரவம் கொடுத்து என்னை தொடர்ந்து எழுதவும், படிக்கவும் சொல்லும் அவள் விகடனை வாழ்த்துகிறேன் ஒரு வாசகியாகவும்... ஒரு அம்மாவாகவும்'' என்று நெகிழ்ந்தார்.

இவருக்கு பிரஷர் குக்கர் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லி விட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு!

முக்கிய குறிப்பு: செவ்வாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!