Published:Updated:

பிளாஸ்டிக் நிலம் - கவிதை

பிளாஸ்டிக் நிலம் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
பிளாஸ்டிக் நிலம் - கவிதை

கலாப்ரியா, ஓவியம்: செந்தில்

பிளாஸ்டிக் நிலம் - கவிதை

கலாப்ரியா, ஓவியம்: செந்தில்

Published:Updated:
பிளாஸ்டிக் நிலம் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
பிளாஸ்டிக் நிலம் - கவிதை
பிளாஸ்டிக் நிலம் - கவிதை

டிக்கடி இல்லையென்றாலும்
அவ்வப்போது
குட்டிக் குழந்தைகள் நீரூற்றுமென்று
கொள்ளைப்பிரியத்துடன் காத்திருக்கிறது
தொட்டிச்செடியின் துண்டு நிலம்

என்றாலும் அதற்கு
குறுகத்தரித்த போன்சாய் மரங்கள்
தாங்கி நிற்க நேர்வதில்
மனவருத்தமும் உண்டு

வெடித்துப் பறந்து பரவும்
எருக்கம்விதையைத் தேர்ந்தெடுத்து 
கருவேந்திக்கொள்ளும்
குப்பைமேட்டு நிலம்

குளிரில்கூடத் திறந்துகிடக்கும்
ஆனால் இலையுதிர் காலத்தில்
இறுக்கமாய் ஆடை சூடிக்கொள்ளும்
காட்டு நிலம்

பாத்திரங்களில்
மழை பிடிப்பவர்களிடம்
மின்னலை நிரப்பிக்கொள்ள
நான்தானே பாத்திரமென்னும்
பருவ நிலம்

எங்கோ கடகடக்கும் ரயிலோசையை
இங்கே காது பொருத்தி
சிறுவர்கள் கேட்கும் தண்டவாளங்களை 
சிலம்பாய்ச் சூடியிருக்கும்
இருப்புப்பாதை நிலம்
என்ன சொல்லும்

நம் எச்சங்களிடம்
நாம் விட்டுச்செல்லும்
மூச்சுத்திணறும்
அவர்களின் பிளாஸ்டிக் நிலம்.