Published:Updated:

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!
பிரீமியம் ஸ்டோரி
பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

சுட்டிகளை குஷிப்படுத்தும் அனிமேஷன் நிறுவனங்கள்

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

சுட்டிகளை குஷிப்படுத்தும் அனிமேஷன் நிறுவனங்கள்

Published:Updated:
பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!
பிரீமியம் ஸ்டோரி
பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!
பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

னிமேஷன் என்ற வார்த்தையைச் சொல்லும்போதே ஆயிரம் சாக்லேட்டுகளை ஒன்றாகச் சாப்பிட்ட பரவசம் உண்டாகும். எல்லையற்ற கற்பனை உலகையும், எண்ணற்ற உருவங்களையும் நேர்த்தியாக படைப்பதில்தான் உள்ளது அனிமேஷன் திரைப்படங்களின் வெற்றி. அப்படி உலக அளவில் கெத்து காட்டும் 10 அனிமேஷன் கம்பெனிகள் இவை...

பிக்‌ஸார் (Pixar)
உலகின் முதல் முழு அனிமேஷன் படமான ‘டாய் ஸ்டோரி’ படத்தை தயாரித்தது ‘பிக்ஸார்’ நிறுவனம்தான்.  1986-ம் ஆண்டு முதல் கலிஃபோர்னியாவில் இருந்து செயல்படுகிறது. ஆப்பிள் நிறுவனராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், இந்த நிறுவனத்தை வாங்கியதும் அசுர வேகம் எடுத்தது. அதன் பின்னர், வால்ட் டிஸ்னி நிறுவனம் 50 ஆயிரம் கோடிக்கு பிக்ஸாரை விலைக்கு வாங்கியது. ‘ஃபைண்டிங் நிமோ’, ‘இன்சைட் அவுட்’, ‘மான்ஸ்டர்ஸ் இன்க்’ என இதன் தயாரிப்புகள் அனைத்துமே வெற்றி. பிற அனிமேஷன் படங்களை வாங்கி வெளியிடுவதிலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது பிக்ஸார் நிறுவனம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!
பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!


ட்ரீம்வொர்க்ஸ் (Dreamworks)
தனது பணக்கார நண்பர்களான டேவிட் க்ரிப்பின் மற்றும் ஜெஃப்ரி ஆகியோருடன் இணைந்து ஸ்பீல்பெர்க் தொடங்கிய நிறுவனமே ‘ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன்’. 1994-ம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிறுவனத்தின் முதல் படம், எறும்புகளின் சாகசங்களைச் சொல்லும் ஆன்ட்ஸ் (Antz). இந்த ஆண்டு வெளியான ‘குங்கு ஃபூ பாண்டா 3’ வரை இவர்களின் அனிமேஷனில் உருவான விலங்குகளும் பறவைகளும் சுட்டிகளின் இதயத்தில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொண்டுள்ளன. இந்த நிறுவனம் 23 தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளது. 13 ஆஸ்கர் அவார்டுகளை அள்ளி உள்ளது. 2020-ம் ஆண்டு வரை கை நிறைய அனிமேஷன் படங்களோடு  பிஸியாக  இருக்கிறது ட்ரீம்வொர்க்ஸ்.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

கார்ட்டூன் நெட்வொர்க் ஸ்டுடியோஸ் (Cartoon Network Studios)
புகழ்பெற்ற கார்ட்டூன் நிறுவனமான ஹன்னா பார்பராவை டைம் வார்னர் என்கிற பெரிய நிறுவனம் 1995-ம் ஆண்டு வாங்கியது. அதன் பின்னர், கார்ட்டூன் நெட்வொர்க் என்கிற முழு நேர தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டது. அந்த சேனலுக்கு தேவையான நிகழ்ச்சிகளுக்கு, அனிமேஷன் காட்சிகளை உருவாக்க  தொடங்கப்பட்டதுதான் ‘கார்ட்டூன் நெட்வொர்க் ஸ்டுடியோஸ்’.  ‘ஜானி பிராவோ’ முதல் ‘பென் 10’ வரை இவர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களும் தொடர்களும் அதிரி புதிரி சரவெடி.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

ஃப்ரேம்ஸ்டோர் (Framestore)
லண்டனில் இருந்து இயங்கும் மிக பிரபல அனிமேஷன் நிறுவனம். நாடகம், விளம்பரம் என ஆல் ஏரியாவிலும் கலந்து கட்டி அடிக்கிறார்கள். ஷரோன் ரீட், வில்லியம் சார்ஜென்ட், ஜோனதன் ஹில்ஸ், மைக் மெக்கி மற்றும் அலிஸன் டர்னர் ஆகியோர் இணைந்து 1986-ம் ஆண்டு ஆரம்பித்த  நிறுவனம். பின்னர், இவர்களுடன் சேர்ந்த டிம் வெப்பர் என்பவரின் வழிகாட்டுதலுடன் நிறைய கம்ப்யூட்டர் ஆப்ஸ் வெளியிட்டனர். ‘நார்னியா’, ‘ஹாரி பாட்டர்’ ஆகிய படங்கள் இவர்களின் திறமையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காண்பித்தன. ஜேம்ஸ் பாண்ட் படங்களான ‘குவான்டம் ஆப் சோலஸ்’ ‘ஸ்கை ஃபால்’ போன்ற படங்களுக்கும் இவர்கள்தான் அனிமேஷன்.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன்  (Warner Bros. Animation)
‘போலார் எக்ஸ்பிரஸ்’ படத்தையும் அதில் வரும் ரயிலையும், ஒவ்வொரு காட்சியின் அழகையும் மறக்க முடியுமா? இந்தப் படத்தின் அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியது ‘வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன் கம்பெனி’.வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ராணுவ வீரரான ஹால் கீர் (Hal Geer), 1980-ம் ஆண்டு ‘வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன்’ நிறுவனத்தை துவங்கினார். பக்ஸ் பண்ணி (முயல்), டாஃபி டக் (வாத்து), டீவிட்டி (குருவி), சில்வஸ்டர் (பூனை) என இவர்கள் உருவாக்கிய ஒவ்வொரு கார்ட்டூனும் அழகு கொஞ்சும். ‘ஸ்டார் வார்ஸ்: க்ளோன் வார்ஸ்’, ‘ஹேப்பி ஃபீட்’ என பல படங்கள் மூலம் வாய் பிளக்கும் அனிமேஷன் விருந்து அளித்தவர்கள். சொல்லி அடிக்கும் கில்லியாக ஆண்டுக்கு ஓர் அதிரடி ஹிட் கொடுத்துவரும் இந்த நிறுவனத்தின் கடைசி மெகா ஹிட், ‘தி லெகோ மூவி’ (The Lego Movie). 60 மில்லியன் டாலர் செலவுகளில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 480 மில்லியன் டாலர் வசூல் சாதனை படைத்தது.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்(Walt Disney Studios)
இந்தப் பட்டியலில் இருக்கும் நிறுவனங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த  நிறுவனம் இதுதான். டாப் 10 அனிமேஷன் நிறுவனங்களின் பட்டியல் போட்டால், முதல் இரண்டு இடங்களுக்குள்  வருவது வால்ட் டிஸ்னிதான். 1923-ம் ஆண்டு ‘டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன்’ என்கிற பெயரில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், 1986-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி அனிமேஷனாக மாறியது. வால்ட் டிஸ்னி, தனது மூத்த சகோதரரான ராய் டிஸ்னியுடன் இணைந்து இதை ஆரம்பித்தார். கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் வரலாற்றில் அதிகப் படங்களை தயாரித்திருப்பது இந்த நிறுவனமே. இந்த ஆண்டின் மெஹா ஹிட், ‘ஜுட்டோபியா’.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!
பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

 வீடா டிஜிட்டல் (weta Digital)
கிராபிக்ஸ், அனிமேஷன் துறைகளில் பெரிய நிறுவனங்கள் என்றால், அமெரிக்காவிலும்  இங்கிலாந்திலும்தான் இருக்கும் என்கிற விதியை உடைத்தது இந்த ‘வீடா டிஜிட்டல்’. நியூசிலாந்தை சேர்ந்த பீட்டர் ஜாக்சன், ரிச்சர்ட் டெய்லர் மற்றும்  ஜாமி செல்கிர்க் ஆகியோர் சேர்ந்து 1993-ம் ஆண்டு தொடங்கிய நிறுவனம். ஆரம்பத்தில், சின்னச் சின்ன புராஜெக்ட்களை செய்துகொடுத்தவர்கள், ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ மூலம்  ஆஸ்கர் விருது பெற்று, உலகையே திரும்பி பார்க்கத்தார்கள். ‘அவதார்’ படத்துடன் சேர்த்து இதுவரை 5 ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளனர்.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

ஸ்டுடியோ கிப்ளி    (Studio Ghibli)
1985-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஜப்பானை விட்டு வெளியே கால் வைத்தது இல்லை. ஆனால், உலக அளவிலான அனிமேஷன் நிறுவனப் பட்டியலில் உள்ளது.  கிப்ளியின் சொத்து, இந்திய மதிப்பில் 15,000 கோடி. இந்த நிறுவனத்தின் மஸாகி அண்டோ மற்றும் கெனிச்சி யோசித்தா என்ற கதாபாத்திரங்கள் மிகவும்  புகழ்பெற்றவை.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் (Industrial Light & Magic)
அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் வெற்றிகரமான இயக்குநர் ஜார்ஜ் லூகாஸின் நிறுவனம்தான் இது. திரைப்படங்களில் மேற்கொள்ள வேண்டிய விஷுவல் எஃபக்ட்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துக்காக 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு உலகின் முக்கியமான அனிமேஷன் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ‘மென் இன் பிளாக்’ இவர்களின் திறமைக்கு விசிட்டிங் கார்டு. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ மற்றும் ‘ஸ்பைடர்மேன்’ போன்றவற்றின் அடுத்த பாகங்கள் உள்பட 8 படங்கள் இந்த நிறுவனத்தின் கையில்தான் உள்ளது.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

புளூ ஸ்கை (Blue Sky)
1987-ம் ஆண்டு தொடங்கி,  சின்னச்சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தது. 20 செஞ்சுரி ஃபாக்ஸ் இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. 1997-ம் ஆண்டு  ‘டைட்டானிக்’ படத்துக்கு செய்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பெரிய அங்கீகாரத்தை அளித்தது.   2002-ம் ஆண்டு பொருளாதாரச் சரிவின் காரணமாக நிறுவனத்தை மூடிவிட முடிவுசெய்தனர். அப்போதுதான், ‘ஐஸ் ஏஜ்’ படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அது முதல் இன்று வரை டாப் 10 அனிமேஷன் கில்லிகளில் ஒன்றாக உள்ளது.

பத்துக்கு பத்து இவங்கதான் கெத்து!

- வரவனை செந்தில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism