Published:Updated:

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

Published:Updated:
வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!
வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

‘‘ஜிம்னாஸ்டிக் விளையாட்டை பலரும்  சர்க்கஸ் என்றே நினைக்கிறார்கள். இந்த நினைப்பை மாற்ற வேண்டும்’’ என்றார், ரியோ ஒலிம்பிக் மூலம் அனைவரின் கவனம் பெற்ற திபா கர்மாகர்.

திபா கர்மாகர் சொல்லும் மாற்றம் விரைவிலே நடக்கும் என்பதை கண்ணெதிரே காண முடிந்தது. ஆம்! ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறும் நாளைய நட்சத்திரங்களைப் பார்ப்போம் என சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நுழைந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாலை நேரம். மைதானத்தில் சுறுசுறுப்பாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் குட்டி ஜிம்னாஸ்டிக் நட்சத்திரங்கள். கால்கள் இரண்டையும் மாஸ்டர் பிடித்துக்கொள்ள, தரையில் கைகளை மாற்றி மாற்றி ஊன்றியபடி நடந்துகொண்டிருந்தாள் ஒரு சிறுமி.

இன்னொரு சிறுவனை, ஒரு பயிற்சியாளர் தனது கைகளில் தாங்கிப் பிடித்திருக்க, உடம்பை வில்லாக வளைத்துக்கொண்டிருந்தான். 

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

‘‘ஃப்ளெக்ஸிபிலிட்டி, ஸ்டாமினா, ஸ்ட்ரென்த் என மூன்றையும் டெவலப் செய்ய ஜிம்னாஸ்டிக் உதவுகிறது. இதில், வால்ட்டிங் (vaulting) எனப்படும் தாவுதல், ஹரிஸாண்டல் பார் (Horizontal Bar) எனப்படும் கிடைச்சட்டம், ஸ்டில் ரிங்க்ஸ் (still rings) எனப்படும் நிலைத்த வளையங்கள், பேலன்ஸ் பீம் (Balance Beam) எனப்படும் சமநிலைச் சட்டம், தரைப் பயிற்சியான ஃப்ளோர் (Floor) எனப் பல வகைகள் இருக்கு. ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறுவது மனரீதியாகவும் நம்மை வலிமையாக மாற்றும். அது மட்டுமா? ஓட்டப்பந்தயம், லாங் ஜம்ப், ஹை ஜம்ப் என எல்லா விளையாட்டுகளுக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சி அடிப்படையானது. ஐந்து ஆண்டுகள் ஜிம்னாஸ்டிக் கற்றவர்கள், வேறு எந்த விளையாட்டுக்குச் சென்றாலும் சிறப்பாக ஜொலிக்க முடியும். அந்த அளவுக்கு உடலை நாம் நினைக்கும் வகையில் தயார்படுத்திவிடும்’’ என்கிறார் பயிற்சியாளர் ஜி.கண்ணன்.

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

‘பேலன்ஸ் பீம்’ எனப்படும் பலகையில், ‘பேக் வாக்கர், கார்ட் வீல்’ போன்ற சாகசங்களை செய்துகொண்டிருந்த தீபிகா படிப்பது நான்காம் வகுப்பு.

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

‘‘ஒரு உண்மையைச் சொல்லட்டுமா அங்கிள்...ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக் மேல எனக்கு இன்ட்ரஸ்ட்  இல்லை. அம்மாதான் சேர்த்துவிட்டாங்க. ஸ்கூல் லெவல் டோர்னமென்ட்டில் வெண்கலப் பதக்கம் ஜெயிச்சேன். எல்லோரும் பாராட்டினாங்க. இனிமே, என் அம்மாவே வேணாம்னு சொன்னாலும் நான் விடமாட்டேன்’’ எனச் சிரிக்கிறார் தீபிகா.

தீபிகாவைப் பார்த்து அவரது அண்ணன் லோகேஷ், ஜிம்னாஸ்டிக்கில் சேர்ந்திருக்கிறாராம்.

ஸ்டேண்டிங் பேக் ஃபிலிப், ஹேண்ட் ஸ்பிரிங், ஹேண்ட் ஸ்டேண்ட் போ, ரவுண்ட் ஆஃப் பேக் ஃபிலிப் என சில பெயர்களை கடகட எனச் சொல்லிவிட்டு சிரித்தார் பிரணீத்.

‘‘என்ன அங்கிள், சைனீஸ் மொழியில் பேசற மாதிரி இருக்கா? இதெல்லாம் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சில பிரிவுகள். இதையெல்லாம் நான் கத்துக்கிட்டு இருக்கேன். ஸ்கேட்டிங், ஸ்விம்மிங் கிளாஸ் போறேன். அதுக்கு இந்த ஜிம்னாஸ்டிக் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கு’’ என்றார் பிரணீத்.

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

மூன்றாம் வகுப்பு படிக்கும் அர்ஜுன், செம ஸ்மார்ட். ஆறு வயதுக்குட்பட்ட மாநில அளவிலான போட்டியில் சாம்பியன்ஷிப் வென்றவர். ஹேண்ட் ஸ்பிரிங், 360 டிகிரி டர்ன்ஸ், 540 டிகிரி டர்ன்ஸ் எனப் பின்னி எடுக்கிறார்.

‘‘மெரீனா பீச்ல ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் பல்டி அடிக்கிறதைப் பார்த்து எனக்கும் அப்படி செய்ய ஆசை வந்துச்சு. அதுதான் நான் ஜிம்னாஸ்டிக் கற்க அடிப்படை காரணம். படிப்படியாக ஜிம்னாஸ்டிக் பழகி, ஸ்டேட் லெவல் சாம்பியன் ஆனேன்.

இப்போ, பயிற்சியாளரா இருக்கேன். ஐந்து வயது முதலே  ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொள்ளலாம். ஜிம்னாஸ்டிக் பயிற்சி தொடங்கிய முதல் ஐந்து நாட்கள் வலி இருக்கும். முதுகு, மணிக்கட்டு, கால் போன்ற இடங்களில் அதிக வலி இருக்கும். ரொம்ப அசதியாகவும் இருக்கும். இதற்குப் பயந்து சிலர் பாதியிலேயே நிறுத்திடுவாங்க’’ என்கிறார் கண்ணன்.

உதவிப் பயிற்சியாளரான ராமு, ‘‘அதற்காக, எடுத்த எடுப்பிலேயே கடினமான பயிற்சிகளாக இருக்கும்னு நினைக்க வேண்டாம். ஆரம்பத்தில் எளிதான பயிற்சிகளையே சொல்லித் தருவோம். ஜிம்னாஸ்டிக் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதே முதல் வேலை. ஜிம்னாஸ்டிக் பிடித்துவிட்டால், அதன்பின் யார் தடுத்தாலும் நிற்க மாட்டார்கள். முதல் ஒரு வாரத்துக்கு பிறகு வலி இருந்த இடங்கள் வலுவடைந்துவிடும்’’ என்கிறார்.

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

‘‘ஒலிம்பிக்கில் திபா கர்மாகர் நான்காம் இடம் பிடிச்சதும், நாடு முழுக்க அவரைப் பாராட்டியதும், ஜிம்னாஸ்டிக் மேலே ஈர்ப்பை உண்டாக்கி இருக்கு. இப்போ, பலரும் ஜிம்னாஸ்டிக் கற்க ஆர்வமா இருக்காங்க. வருங்கால ஒலிம்பிக் போட்டிகளில் நாங்க பதக்கங்களை ஜெயிச்சுட்டு வருவோம்’’ என உற்சாகமாக சொல்லிவிட்டு பயிற்சியைத் தொடர்ந்தார்கள் ஜிம்னாஸ்டிக் சுட்டீஸ். 

ஊருக்கு பல திபா கர்மாகர் கிடைத்தால் சந்தோஷம்தான்!

 - தா.ரமேஷ்,  படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,  பா.காளிமுத்து, ப.சரவணகுமார்

வில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்!

ஜிம்னாஸ்டிக் குறிப்புகள்

ஜிம்னாஸ்டிக் குறிப்புகள் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் ஈடுபட வயது வரம்பு கிடையாது. எனினும், ஐந்து வயது முதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுப்பது சிறந்தது.

ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்காக உணவு முறையில் பெரிதாக மாற்றம் இல்லை. பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் உடல் வலுவடையும்.

பிரெட், சப்பாத்தி, முட்டை, வாழைப்பழம் போன்றவையும் சிறந்த உணவு.
ஜிம்னாஸ்டிக் முடித்த பின், பால் குடிப்பது நல்லது.

ல ஃபிட்னஸ் சென்டர்களில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி வழங்கப்படுகிறது. இடம், பயிற்சிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism