
வெகு அதிகாலை சன்னதி வாயிலில் நிற்க
அரைத்தூக்கத்தில் இருந்தான் ஆண்டவன்.
“என்ன வரம் வேண்டுமுனக்கு?”
கேட்பதற்கு நிறையக் கைவசமிருப்பினும்
கேட்பதில் கூச்சமாய்…
“உன்னிடம் கோரிக்கை வைக்கா உள்ளம் வேண்டும்”
“உள்ளமா... உலகமா?”
நகைத்தபடியே சொன்னான்
“அதிகாரம் 35 எண் 341
உனக்கு நான் அளிக்கும் வரம் இதுதான்.”
பின்னே…
என்னவாயினும் பழனியாண்டவன்
தமிழ்க் கடவுளாயிற்றே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism