Published:Updated:

இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்

இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்

2016-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்

2016-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு

Published:Updated:
இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்
இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்

மீபத்தில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பாப் இசைப் பாடகர், பாப் டிலனுக்கு அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

“பாப் டிலன் ஒரு பாப் இசைப் பாடகர் அவருக்கு கிராமி விருது வழங்கலாம்; ஆஸ்கார்கூட வழங்கலாம் (உண்மையில் பெர்னாட்ஷாவுக்கு அடுத்து ஆஸ்கார்மற்றும் நோபல் பரிசுகளை வாங்கியிருக்கும் இரண்டாவது நபர் பாப் டிலன்). ஆனால் நோபல்? அதுவும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு?” என்று கேள்விகளை எழுப்புகிறார்கள்.

ஆணையிட்டு எழுதப்படும் நமது திரைப்படப் பாடல்களையும், தன்னெழுச்சியாக எழுதி இசைக்கப்படும் மேற்கத்திய பாப் இசைப் பாடல்களையும் ஒரே தரத்தில் எண்ணுவது ஒரு பிழை எனில், மற்ற பாப் இசைப் பாடகர்களையும் பாப் டிலன், பிங்க் பிளாய்ட், ஜான் லென்னன், ஜோனி மிட்செல் போன்றவர்களையும் ஒரே இனத்தில் சேர்ப்பது இன்னொரு பிழை. முதலில் பாப் டிலனுக்காக, நோபல் கமிட்டி கழுத்தை நீட்டியிருப்பதின் பின்னணி பற்றி புரிந்துகொள்ள வேண்டும். சிரியக் கவி அடோனிஸ், பிலிப் ரோத், ஹாருகி முரகாமி போன்றவர்களைத் தாண்டி ஒரு பாடலாசிரியருக்கு ஏன் நோபல் கொடுக்கப்பட்டிருக்கிறது?

இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!அதற்குள் போவதற்கு முன்னால், மரபாக ‘இலக்கியம்’ என்றழைக்கப்படும் கூடுகளிடம் இருந்து நோபல் பரிசுக் குழுவின் இலக்கியத்துக்கான வரையறைகள், விலகுவது இது முதன்முறை அல்ல. 1953-ம் ஆண்டில் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இரண்டாம்உலகப்போரின்
போது அவர் ஆற்றிய எழுச்சி உரைகளுக்காகவும் ‘திரளும் புயல்’ என்று அவர் இரண்டாம் உலகப்போர் உருவான காலகட்டத்தைப் பற்றி எழுதிய குறிப்புகளுக்காகவும் நோபல் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரைப் பற்றியும் ஜெர்மனியில் நாசிசத்தின் எழுச்சி மற்றும் வீழ்தல் பற்றியும் அறிந்துகொள்ள இது ஒரு முக்கியமான ஆவணமாக இன்றும் நிலவுகிறது. கடந்த ஆண்டு இந்தப் பரிசு பெலாரசைச் சேர்ந்த ‘ஸ்வெட்லானா  அலெக்ஸ்சாண்டிராவினோ அலெக்சுவிட்ச்’ என்ற பெண் பத்திரிகையாளருக்கு வழங்கப்
பட்டது. இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்ற சோவியத் பெண்களைப் பற்றிய அவரது ‘போரின் பெண்மையற்ற முகங்கள்’ புத்தகம் ஒரு முக்கிய நூலாகும். இவருக்கும் சர்ச்சிலுக்கும் வழங்கப்பட்ட நோபல் பரிசு, இவர்களது போர் பற்றிய சித்திரங்களுக்காக என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், பாப் டிலனுக்கும் இதே காரணத்துக்காகத்தான் இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

அன்றைய ரஷ்யாவில், அவ்வப்போது நிகழும் யூத இன ஒழிப்புக் கலவரங்களில் இருந்து தப்பித்து, அமெரிக்காவுக்கு ஓடிவந்த குடியேறித் தம்பதிகளுக்கு மகனாக, 1941-ம் ஆண்டு பிறந்தார் பாப் டிலன். ‘இந்த இரவுக்குள் மென்மையாகச் சென்றுவிடாதே, ஒளியின் மரணத்துக்கு எதிராகச் சீற்றமுறு’ என்பன போன்ற அழியா வரிகளை எழுதிய கவி, ‘டிலன் தாமஸின்’ மீது இருந்த வியப்பில்  ‘ராபர்ட் ஆலன் ஜிம்மர்மேன்’ என்ற தனது இயற்பெயரை மாற்றி ‘பாப் டிலன்’ என்று சூட்டிக்கொண்டார்.

இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்

மங்கலான ஒளியில் ‘மின்னே செட்டோவின்’ இரவு மதுவிடுதிகளில் பாடும் ஒரு ‘ராக் - ரோல்’ இசைக் கலைஞனாகவே பாப் டிலனை முதலில் உலகம் அறிந்துகொண்டது. விரைவிலேயே டிலன் ராக்-ரோலை விடுத்து நாட்டுப்புறப் இசைப் பாடல்களுக்கு மாறினார். இவ்வாறு மாறியதற்கு அவர் சொன்ன காரணம் ‘நாட்டுப்புறப் பாடல்களில் ஆழமும் சோகமும் விரக்தியும் வாழ்க்கையும் இருக்கின்றன’.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு டிலன், நியூயார்க் நகரத்துக்கு நகர்கிறார். அங்குதான் அவர் அந்தத் தலைமுறையின் பாடகனாக உருமாறுகிறார். சோவியத்துக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் தொடங்கியிருந்த காலம். அமெரிக்காவில் நிறவெறியும் அதற்கு எதிரான சிவில் உரிமைப் போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். இருபது ஆண்டு வியட்நாம் யுத்தம் தீவிரமாகநடைபெற்றுக்கொண்டிருந்த காலம். அணு ஆயுதப் பரவலும் அதற்கு எதிரான குரல்களும் வலுப்பெற்று இருந்த காலம். மரபார்ந்த ஒழுக்கம், அரசு, மதம், பால், நிறம் சம்பந்தமான இறுக்கங்களை எதிர்த்து இன்று எதிர்க்கலாசாரம் என்று அழைக்கப்படும், ஓர் அலை எழும்பிவந்த காலம் அது.

மேற்கில் பெருகிவந்த இந்த எதிர்க் கலாசார அலையைப் பற்றி இன்று நாம் என்ன அறிந்திருக்கிறோம்? நம்முடைய அறிதல்கள் அதிகபட்சமாக இமயமலையில், கோவாவில் பார்த்த லாகிரி வஸ்துகள் பாவித்து, மயங்கிக் கிடக்கும் ஹிப்பிகளோடு முடிந்துவிடுகிறது. சிலருக்கு பீட்டில்ஸ் இசைக் குழுவினர் இந்தியாவுக்கு வந்து மகேஷ் யோகியின் சீடர்களானது நினைவிருக்கிறது. பிறகு நமது பிரிய ஓஷோ என்னும் ரஜனீஷ். ஆனால், இந்த எதிர்க்கலாசாரம் என்ற சிந்தனைப்போக்கு இவை மட்டும் அல்ல. மேற்கண்டவை யாவும் தனிமனிதத் தளத்தில் பொதுப்புத்திக்கு எதிராக அன்று நடத்தப்பட்ட கலகங்கள். சமூகத்தளத்தில் இந்த அலை ஏற்படுத்திய தாக்கம் பெரியது. உண்மையில் அவற்றின் பலன்களைத்தான் இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த அலையின் முணுமுணுப்புகள் இப்போதுதான் இந்தியாவில் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

இதில் முக்கியமானது, அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான மார்ட்டின் லூதர்கிங் போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட குடிமை உரிமைப் போராட்டம். நிறவெறிச் சட்டங்களுக்கு ஒத்துழையாமை. நிறவெறிக்கு எதிராக மட்டும் அல்லாது பெண்கள் உரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமை, மைனாரிட்டிகளின் உரிமைகள், சூழலியம் போன்ற கருத்தாக்கங்களும் இந்தக் காலகட்டத்தில் எழும்பி வந்தவையே. கூடவே அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டங்களும். லண்டன் ‘ட்ரபால்கார்’ சதுக்கத்தில் நடந்த ஒரு லட்சம் பேர் கூடிய ‘குண்டுகளைத் தடைசெய்’ பேரணியையும் அமெரிக்காவில் வியட்நாம் போருக்கு எதிராக நடந்த ‘வியட்நாமை விட்டு வெளியேறு’ பேரணியையும் குறிப்பாகச் சொல்லலாம். ஒரு நாடு நடத்தும் அறமற்ற போருக்கு எதிராக, அந்த நாட்டு மக்களே போராடியது முதன்முதலாக இந்தக் காலகட்டத்தில்தான். அதுவரை ‘அறத்தின்’ வங்கியாக அரசும் மதமுமே செயல்பட்டுக்கொண்டிருந்தன. இந்த அறத் தனியுடமை, கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது இந்தக் காலத்தில்தான்.

இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்


பிராங்பர்ட் பள்ளி எனப்படும் புதிய இடதுசாரிச் சிந்தனைகள் தோன்றியதும்இந்தக் காலகட்டத்தில்தான். பெரும்பாலும் இந்தக் கலகங்கள் கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன. முன்சென்ற தலைமுறைகளின் பாதி நீதிகளில் அதிருப்திகொண்ட புதிய தலைமுறை, எல்லா தளங்களிலும் தனது திருப்தியின்மையைத் தெரிவித்தது. பெரும்பாலும் அவர்களது எதிர்ப்பின் கலை வடிவங்களாக ஓவியங்களும் பாப் இசைப் பாடல்களும்தான் இருந்தன. இந்தச் சூழலில்தான் பாப் டிலன் வருகிறார். இந்தச் சூழலைத்தான் இசையில் அவர் பிரதிபலிக்கிறார். அவரது பாடல்கள் போராட்ட கீதங்கள் ஆகின்றன. அவை இன்புறுத்துவது மட்டுமே என்ற பழைய தொந்தரவில் இருந்து இசையை விடுவிக்கின்றன. அவரது பெரும்பாலான புகழ்பெற்ற பாடல்கள் எழும்பிய தருணங்  களைக் கவனித்தால், இது புலப்படும்.

அவரது முதல் ஹிட்டான ‘காற்றில் பதில் படபடத்துக்கொண்டிருக்கிறது’ பாடல்,ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைப் போராட்டத்துக்கான கொடிப்பாடலாக இன்றும் கருதப்படுகிறது. அந்த இயக்கத்தின் முக்கியமான ஓர் ஆளுமையும் பெண்பாடகருமான மாவிஸ் ஸ்டேபிள்ஸ், “ஒரு வெள்ளையரால் எப்படி கறுப்பினமக்களின் வலியைச் சொல்லும் வழிகளை அடைய முடிந்தது என்று அந்தப் பாடலைக்கேட்கும்போதெல்லாம் வியந்திருக்கிறேன்!’ என்கிறார். ‘காலங்கள் மாறிக்கொண்டிருக் கின்றன’ என்ற அவரது பாடலும் கறுப்பு மக்களின் இந்தப் போராட்டத்தைக் குறித்து எழுதப்பட்டதே. அவரது இன்னொரு புகழ்பெற்ற பாடலான ‘போரின் எஜமானர்கள்’ வியட்நாம் யுத்தத்தைக் குறித்து எழுதப்பட்டது. வியட்நாமின் தலைநகர் சைகானில் இதை அவர் பாடினார். இது மட்டும் அல்லாது
அமெரிக்காவின் கம்யூனிஸ ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கேலிசெய்து  ‘ஜான் பிர்ச் குழுவைப் பற்றி பேசுவது’ என்ற பாடலைப் பாடினார். இந்தக் குழு அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்கள் ஊடுருவுவதைத் தடுப்பதாகத் தன்னைச் சொல்லிக்கொண்டிருந்தது. அந்தப் பெயரில் மக்களின் தனி/அரசியல் உரிமைகளில் தலையிட்டுக்கொண்டிருந்தது.

இந்தப் பரிசு, டிலனுக்கு அறிவிக்கப்பட்டதும் இலக்கியச் சனாதனவாதிகள் ‘நோபல் கற்பிழந்துவிட்டது’ என்பதுபோல் பதற, சல்மான் ருஷ்டி போன்ற சிலர் வரவேற்றார்கள். ருஷ்டி, ‘இலக்கியத்தின் வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன’ என்கிறார். என் கருத்தும் இதுவாகவே இருக்கிறது... இலக்கியம் அல்லது கவிதை இன்று பல்வேறு வடிவங்களுக்குத் தன்னை நீட்டித்துக் கொள்ளும் இடத்தில் இருக்கிறது. பாப் இசைப் பாடல்களாக, சித்திரக் கதைகளாக அவ்வளவு ஏன், வரும் காலங்களில் கணினி விளையாட்டுகளாகக்கூட அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்.

இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்

இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து வந்த Maus, வலிப்பு நோய் பற்றிய ஒரு சிறுவன் வாழ்வை விவரிக்கும் epileptic, ஈரானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் மன்னராட்சிக்கும் எதிராக நடந்த புரட்சி, எப்படி ஒரு மதப் புரட்சியாக மாற்றப்பட்டு அந்த நாடு ஒரு முல்லா அரசாக எப்படி ஆனது என்பதை விவரிக்கும் Persepolis போன்ற கிராஃபிக் நாவல்கள், எந்த ஓர் இலக்கியப் பிரதிக்கும் இணையானவை என்பதே எனது கருத்து. இவையும் நோபல் பரிசுக்குத் தகுதியானவையே. இந்தப் பரிசை இங்கு யமுனா ராஜேந்திரன் போன்ற இடதுசாரிகள் சிலரும் இந்திரா பார்த்தசாரதியும் மட்டுமே வரவேற்றிருக்கிறர்கள். மற்றவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. இன்னும் சிலர் இது எத்தனையாவது அமெரிக்கருக்கு, யூதருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற அரசியலைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அமெரிக்கர்கள் என்று யாரும் அல்ல என்பது என் கருத்து (செவ்விந்தியர்களைத் தவிர).

நோபல் பரிசு பெற்ற யூதர்களின் பட்டியலும் பெரியதே. ஏறக்குறைய 22 சதவிகிதம்.  உலகத்தில் ஒரு சதவிகிதத்துக்குக் குறைவான மக்கள்தொகை கொண்ட யூதர்களின் சாதனை இது. ஆனால், இவரில் யாரையும் தகுதியற்றவர் என்று சொல்வதற்கு இல்லை. சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களாக யூதர்கள் வேட்டையாடப்பட்டு வந்திருக்கிறார்கள். நாடு நாடாகத் துரத்தப்பட்டு, அழிக்கப்பட்டுப் பிழைத்திருக்கும் ஓர் இனம், யூத இனம். இத்தனையையும் மீறி உலகக் கலை, அரசியல் சிந்தனைத்தளத்தில் அவர்களது பங்கு அபாரமானது. உலகத்தின் நீதி உணர்வை உருவாக்குவதிலும் அவர்களின் பங்கு பெரியதே.

அமெரிக்காவில் நிறவெறி மிகுந்து வெள்ளை மேன்மையை நிலைநாட்ட, ‘க்ளூ க்ளுக்ஸ் க்ளான்’ போன்ற பயங்கரவாத முகமூடி அமைப்புகள் செயல்பட்டு, கறுப்பு நிறத்தவரை அழிப்பதே, அடிமைப்படுத்துவதே தங்கள் இலக்கு என்று பகிரங்கமாக அறிவித்துத் திரிந்தபோது,  ‘அமெரிக்க யூதர்கள்’ கறுப்பு நிறத்தவருக்கு பக்கபலமாக இருந்தார்கள். அவர் களுக்காக அமெரிக்க நீதிமன்றங்களில் வாதாடினார்கள். இன்று இந்தப் பரிசு அவர்களது ‘இந்த நெடிய நீதிசார் மரபுக்கு’ ஒரு நினைவூட்டலாக இருக்கும். இன்று யூதர்கள் நீதியின் மறுபக்கம் நிற்கிறார்கள். எப்படி அவர்கள் இவ்விதம் ஆக்கிரமிக்கப்படுகிறவர்கள் என்ற இடத்தில் இருந்து ஆக்கிரமிப்பவர்கள் என்ற இடத்தை அடைந்தார்கள் என்று, அகச்சோதனை செய்யத் தூண்டுகோலாக இருக்கும் இந்தப் பரிசு என்று நம்ப விரும்புகிறேன். 75 வயதான பாப் டிலனுக்கு இந்தப் பரிசு ஒரு பொருட்டு அல்ல. அவரை யூதர் எனக் கொள்ளுதல் கூடாது. அவர் அந்தக் குறுகிய புட்டிக்குள் நிற்பவர் அல்ல. அவர் ஆஸ்கர் உட்பட பல பரிசுகளை வாங்குவதற்குக் கூட போனது இல்லை. அந்த நேரம் வேறு எங்கேயாவது அவர் பாடிக்கொண்டிருந்திருக்கலாம்.

“எவ்வளவு சாலைகளில் நடக்கவேண்டும்

ஒரு மனிதன்

அவனை நீங்கள் மனிதன் என்று அழைப்பதற்கு?

எவ்வளவு சமுத்திரங்களை நீந்தவேண்டும்

ஒரு வெண்புறா

அது கரையில் உறங்கும் முன்பு?

ஆம், எத்தனைமுறை பீரங்கிக் குண்டுகள் பறக்கவேண்டும்

இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்


அவை நிரந்தரமாகத் தடை செய்யப்படுவதற்கு?

பதில், எனது நண்பனே

காற்றில் படபடத்துக்கொண்டிருக்கிறது

மற்றவர்கள் அழுவதைக் கேட்க ஒருவருக்கு

எத்தனை காதுகள் வேண்டும்?

எவ்வளவு மரணங்கள் வேண்டும்

நிறையப் பேர் இறந்துவிட்டார்கள்

என்று அவர்கள் உணர்வதற்கு?

பதில், எனது நண்பனே

காற்றில் படபடத்துக்கொண்டிருக்கிறது.”