Published:Updated:

காலதாமதமாய் அறியவரும் மரணங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காலதாமதமாய் அறியவரும் மரணங்கள்!
காலதாமதமாய் அறியவரும் மரணங்கள்!

தமிழ்மணவாளன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பிரீமியம் ஸ்டோரி
காலதாமதமாய் அறியவரும் மரணங்கள்!

சில நாட்கள் வெளியூர் பயணம் முடித்து
கருக்கலில் வீடு திரும்பும்போதுதான் கவனித்தேன்...
எனக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர்
இரண்டு நாட்களுக்கு முன்னர்
மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கும்
ஃப்ளெக்ஸ் பலகையை.

எப்போதேனும் தேநீர் அருந்தச் செல்லும்
கடை முன் வாகனத்தை நிறுத்த,
வழக்கமாய் முகமலர்ச்சியோடு உரையாடும் பெரியவரின் புகைப்படம்
சந்தனப்பொட்டு மல்லிகை மாலையோடு சாத்திவைக்கப்பட்டிருக்கிறது.

பேருந்துக்காய்க் காத்திருந்த
கோடை மதியத்தில்
எதிர்ப்பட்ட சரவணனிடம்
‘எப்படியிருக்காங்க அம்மா?’ எனக்
கேட்டவுடன்தான் சொல்கிறான்...
‘அவங்க இறந்து ஆறு மாசமாச்சு’.

காலதாமதமாக அறியவரும் மரணங்கள்
சட்டென உருவாக்கும் துக்கம்
அக்கணத்தில்
உரியவர்களினும் சற்றதிகமாய் இருப்பது,
உரையாடும்போது தெரிகிறது
காலத்தால் அவர்கள்
அதிலிருந்து மீண்டிருப்பதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு