நெற்றிக்கண் திறக்கிறார் நெல்லையப்பர்

வந்தது பண்டிகைக் காலம்
வண்ண விளக்குகளால்
மின்னின ரத வீதிகள்.

காண வரும் பக்தர்களுக்காகக்
காத்துக்கொண்டிருந்தார் நெல்லையப்பர்.

கோயில் வாசல் வளைவு தாண்டிய
கூட்டத்தில் பாதி வலப்பக்கம் திரும்பி
வடக்கு ரத வீதியில் துணிகளை அள்ள,
மீதியோ
இடப்பக்கம் திரும்பி
இருட்டுக்கடை முன்
அல்வாவுக்காக.

கோபமுற்றாலும்
குளிர்ந்தார் சுவாமி,
சற்றே கோயிலுக்குள் வந்த
குடும்பம் கண்டு.

‘`எல்லா தியேட்டரும் ஃபுல்லாயிட்டுல்லா... அதான்
நெல்லையப்பரைப் பார்க்க வந்துட்டம்”
அலைபேசியில்
அளவளாவிக்கொண்டே
ஆரத்தி பார்த்த
பக்திமானைக் கண்டு
வெகுண்டெழுந்தார்
வேணுவன ஸ்வாமி.

நெற்றிக்கண் திறக்கப்போன
நெல்லையப்பரின் கோபம் கண்டு
காதில் சொல்கிறாள் காந்திமதியம்மை
‘`போகட்டும் விடுங்க. நம்ம பிள்ளைகள் தானே''
என்று.

- ஆதர்ஷ்ஜி

தேநீர்

டெல்டா மாவட்ட
தேசிய நெடுஞ்சாலையில்
நட்சத்திர உணவகம் எதிரே நீலச் சீருடையில்
கொடியசைத்து
தேநீராவது பருக அழைப்பவன்
சோழப் பேரரசின்
வழித்தோன்றலாகவும் இருக்கலாம்

நெற்களத்தில் போரடித்த
யானைகள் பற்றியோ
தானியங்கள் சேமித்த
குதிர்கள் குறித்தோ
காகம் தட்டிவிட்ட
கமண்டல வரலாற்றையோ
கேட்டுத் தொலைக்காதீர்கள்...

தேநீர் குறித்த
சந்தேகம் இருந்தால் மட்டும் கேளுங்கள்!

- கார்த்தி

என் கேலரியில் ரகசியமாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறாள்

மிக அரிதாகக் காணக்கிடைத்த
உன் தோழிகளுடன் நீ இருக்கும்
சில புகைப்படங்களில்
ஒன்றில்,
எல்லோரும் ஒருபோல சிரித்திருக்க
நீ மட்டும் நெற்றியைச் சுருக்கி புன்னகைக்கிறாய்.
மற்றொன்றில் எல்லோரும் சிரிக்கத் தயாராகையில்
அவர்களுக்கு முன்
கழுத்தை பக்கவாட்டில் சாய்த்து
கண்களை மூடியபடி
புன்னகைத்துக்கொண்டிருக்கிறாய்.
கடைசியான புகைப்படத்தில்
இம்முறை
புன்னகைக்காமல்
மிக இயல்பாக இருக்கிறாய்.
வழக்கம்போல
வலது ஓரத்தில் இருக்கும்
மூன்று புள்ளிகளைத் தொட்டு
‘Save Photo’ செய்கிறேன்
புன்னகைத்தபடியே.

- பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

நெற்றிக்கண் திறக்கிறார் நெல்லையப்பர்

வந்தது பண்டிகைக் காலம்
வண்ண விளக்குகளால்
மின்னின ரத வீதிகள்.

காண வரும் பக்தர்களுக்காகக்
காத்துக்கொண்டிருந்தார் நெல்லையப்பர்.

கோயில் வாசல் வளைவு தாண்டிய
கூட்டத்தில் பாதி வலப்பக்கம் திரும்பி
வடக்கு ரத வீதியில் துணிகளை அள்ள,
மீதியோ
இடப்பக்கம் திரும்பி
இருட்டுக்கடை முன்
அல்வாவுக்காக.

கோபமுற்றாலும்
குளிர்ந்தார் சுவாமி,
சற்றே கோயிலுக்குள் வந்த
குடும்பம் கண்டு.

‘`எல்லா தியேட்டரும் ஃபுல்லாயிட்டுல்லா... அதான்
நெல்லையப்பரைப் பார்க்க வந்துட்டம்”
அலைபேசியில்
அளவளாவிக்கொண்டே
ஆரத்தி பார்த்த
பக்திமானைக் கண்டு
வெகுண்டெழுந்தார்
வேணுவன ஸ்வாமி.

நெற்றிக்கண் திறக்கப்போன
நெல்லையப்பரின் கோபம் கண்டு
காதில் சொல்கிறாள் காந்திமதியம்மை
‘`போகட்டும் விடுங்க. நம்ம பிள்ளைகள் தானே''
என்று.

- ஆதர்ஷ்ஜி

தேநீர்

டெல்டா மாவட்ட
தேசிய நெடுஞ்சாலையில்
நட்சத்திர உணவகம் எதிரே நீலச் சீருடையில்
கொடியசைத்து
தேநீராவது பருக அழைப்பவன்
சோழப் பேரரசின்
வழித்தோன்றலாகவும் இருக்கலாம்

நெற்களத்தில் போரடித்த
யானைகள் பற்றியோ
தானியங்கள் சேமித்த
குதிர்கள் குறித்தோ
காகம் தட்டிவிட்ட
கமண்டல வரலாற்றையோ
கேட்டுத் தொலைக்காதீர்கள்...

தேநீர் குறித்த
சந்தேகம் இருந்தால் மட்டும் கேளுங்கள்!

- கார்த்தி

என் கேலரியில் ரகசியமாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறாள்

மிக அரிதாகக் காணக்கிடைத்த
உன் தோழிகளுடன் நீ இருக்கும்
சில புகைப்படங்களில்
ஒன்றில்,
எல்லோரும் ஒருபோல சிரித்திருக்க
நீ மட்டும் நெற்றியைச் சுருக்கி புன்னகைக்கிறாய்.
மற்றொன்றில் எல்லோரும் சிரிக்கத் தயாராகையில்
அவர்களுக்கு முன்
கழுத்தை பக்கவாட்டில் சாய்த்து
கண்களை மூடியபடி
புன்னகைத்துக்கொண்டிருக்கிறாய்.
கடைசியான புகைப்படத்தில்
இம்முறை
புன்னகைக்காமல்
மிக இயல்பாக இருக்கிறாய்.
வழக்கம்போல
வலது ஓரத்தில் இருக்கும்
மூன்று புள்ளிகளைத் தொட்டு
‘Save Photo’ செய்கிறேன்
புன்னகைத்தபடியே.

- பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி