Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

10 செகண்ட் கதைகள்

புது விசாரிப்பு

10 செகண்ட் கதைகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாமியார் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வந்த சித்ரா, நர்ஸிடம் நலன் விசாரித்துவிட்டுத் திரும்பினாள்!

- எஸ்.எஸ்.பூங்கதிர்

புறநகர் கிராமம்

10 செகண்ட் கதைகள்

கிராமத்தைவிட்டு வந்தவன், மறுபடியும் செல்கிறான் கிராமத்துக்கே... அதற்கு `புறநகர்ப் பகுதி' எனப் பெயரிட்டு!

- ர.யது நந்தன்

ஓட்டு

10 செகண்ட் கதைகள்

``பொங்கல் செலவுக்கு வசதியா, ஜனவரி மாசமாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவாங்களா..!'' எனப் புலம்பிக்கொண்டிருந்தார், பக்கத்து வீட்டுக்காரர்.

- பர்வீன் யூனுஸ்

சண்டைக் களம்

10 செகண்ட் கதைகள்

``எங்கேடா சண்டை போட்டீங்க? ஏன்டா உன் ஃப்ரெண்ட்கூட பேச மாட்டேங்குறே!'' என்று அப்பா கேட்டதற்கு, மகன் பதில் சொன்னான் ``வாட்ஸ்அப்ல!''

- கே.சதீஷ்

வேலை

10 செகண்ட் கதைகள்

வேலை தேடி அலைந்தார்... ரிட்டையர்டு ஆன அப்பா!

- பெ.பாண்டியன்

சவரன்

10 செகண்ட் கதைகள்

பெண் பார்த்துவிட்டு மாமனார், ``நீங்க எவ்வளவு முடியுமோ போடுங்க. நாங்க வெளியே `100 சவரன்'னு சொல்லிக்கிறோம்'' என்றார்!

- சண்முகபிரியா

அமோகம்

10 செகண்ட் கதைகள்

``உன்னோட வாட்ஸ்அப்  டிஸ்பிளே பிக்சர் சூப்பரா இருக்கு. ஃபேஸ்புக்ல போட்டிருந்தா, லைக்ஸ் குவிஞ்சிருக்கும்!'' என்றான் அவன்.

​- கே.சதீஷ்

அக்கறை

10 செகண்ட் கதைகள்

``ஹெல்மெட் போடாம எங்க வீட்டுக்கு வராதீங்க'' என்று நண்பர்களிடம் கண்டிப்பாகச் சொன்னார், விபத்தில் மகனை இழந்த தந்தை!

- சி.சாமிநாதன்

மாசு

10 செகண்ட் கதைகள்

`சாலை முழுக்க தூசு' என மாஸ்க் போட்டு வந்தவன், அலுவலகம் வந்ததும் `ஸ்மோக்கிங் ஸோன்'னுக்குள் நுழைகிறான்!

- புகழினி

வைரஸ்

10 செகண்ட் கதைகள்

``உங்க போன் ரொம்ப ஹேங் ஆகுது.

சீக்கிரமே வேற மாத்துங்கப்பா'' என்றான் மகன்.

- கோ.பகவான்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!