கட்டுரைகள்
Published:Updated:

பாடல் - அண்டோனியோ ஜோஸ் போண்ட்

பாடல் - அண்டோனியோ ஜோஸ் போண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
பாடல் - அண்டோனியோ ஜோஸ் போண்ட்

தமிழில்: ரவிக்குமார்

பாடல் - அண்டோனியோ ஜோஸ் போண்ட்

கோடைக்காலம் முழுவதும்
அந்த இசைத்தட்டைக் கேட்பதிலேயே செலவிட்டேன்
அந்த உணர்வு விலகிவிடக் கூடாது என்பதற்காக
தினம் ஒருமுறை அதைக் கேட்டேன்
பசி எடுத்தபோது நடப்பதற்குப் போனேன்

பாடல் - அண்டோனியோ ஜோஸ் போண்ட்ஒளி தன்போக்கில் அந்தப் பாடலைப் பாடியது
கடல் அதைப் பாடியது, ஒரு பறவை அதைப் பேசியது
ஒரு கணம் நினைத்தேன்: இதெல்லாம் நடக்கிறதென்றால்
நான் காதலில் வீழ்ந்திருக்கவேண்டும்

கோடை போனது
மரக்கிளையைவிடவும் காய்ந்துபோய்க்கிடந்த
அந்தப் பறவை
தனது அலகை மீண்டும்
திறக்கவே இல்லை