Published:Updated:

மாநகரத்தின் அகதிகள் - கவிதை

மாநகரத்தின் அகதிகள் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
மாநகரத்தின் அகதிகள் - கவிதை

சேயோன் யாழ்வேந்தன் - ஓவியம்: ஹாசிப்கான்

மாநகரத்தின் அகதிகள் - கவிதை

சேயோன் யாழ்வேந்தன் - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
மாநகரத்தின் அகதிகள் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
மாநகரத்தின் அகதிகள் - கவிதை
மாநகரத்தின் அகதிகள் - கவிதை

தேசத்தின் வல்லரசுக் கனவினால்
தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட
ஒரு மாநகரத்தின் அகதிகள்
அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட
தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள்
வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட
சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு.
அங்குள்ள வங்கிக் கணக்கையும்
அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள்.
கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு
அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும்
அதில் ஜீவிக்கிறார்கள்
பண்டிகைகள் நிமித்தம் தம் சொந்த நிலங்களுக்கு
பிதுங்கி வழியும் பேருந்துகளிலும்
ரயில்களின் கழிவறை அருகிலும்
பயணிக்க முடியும் என்பது
இம்மாநகரத்தின் அகதிகளுக்கு
இம்மாபெரும் தேசம் வழங்கியிருக்கும் சகாயம்.