கச்சா எண்ணெய் பருகும் உயிர்கள்

உயிரினினும் மேலான எனதன்பே
உனக்குத் தெரியுமா
நம் நிலத்தின் நாற்றுகள் மொத்தமாய்க் கருகி மடிந்தபோது
தாலாட்டின் அத்துணை சொற்களையும்
கண் முன்னே களவுகொடுத்தபோது
நாடிநரம்புகளென கிளை பரவிக்கிடந்த ஆற்றின் கண்கள்
ஒரே இரவில் ஒளியிழந்தபோது
கால்நடைகள் நெகிழிப்பைகள் உண்டு சுருண்டு விழுந்து செத்தபோது
தாத்தன்மார்கள் தூக்குக்கயிற்றை முத்தமிட்டு மாண்டபோது
அனைத்துக்கும் மேலாக அதிகாரத்தில் வீற்றிருக்கும்
கடவுளரே முன்நின்று மூச்சுக்காற்றில் விஷம் கலந்தபோது
நாதியற்ற நாங்கள் ஒரு குவளைத் தேநீர் இரண்டு திராம்களுக்கும்
ஒரு லிட்டர் பெட்ரோல் ஒன்றரை திராம்களுக்கும்
விலைபோகும் தேசத்திடம் கையெழுத்தானோம்
அதை அப்படிச் சொல்வதுதான் தகும் எனதன்பே
துயரங்கொள்ளாதே
உயிர் வறண்டு தொண்டைக்குழி வற்றும்போதெல்லாம்
நாங்கள்
ஆசை தீரப் அள்ளியள்ளிப் பருகுவோம்
பெட்ரோலை.

-தர்மராஜ் பெரியசாமி

குருட்டு நிலம்

பச்சை மஞ்சள் ஷரோன் பிளைவுட்
குடையின் கீழ்
கரும்புச் சாறுக் கடை.
ஆரஞ்சு மஞ்சள்
98.3 ரேடியோ மிர்ச்சி பண்பலை
குடையின் கீழ்
வாழைப்பழக் கடை.
பிங்க் நிற 93.5 சூரியன் பண்பலை
குடையின் கீழ்
கம்மங்கூழும் கேப்பைக் கூழும்.
நீலம் மஞ்சள் ஐடியா
குடையின் கீழ்
இளநீர்க் கடை.
சிவப்பு வெள்ளை ஏர்டெல்
குடையின் கீழ்
பூக்கடை.
சற்றே அந்தக் கடைகளை
யோசித்துப்பாருங்கள்.

- பச்சோந்தி

கைச்செலவுக்கும் பணமற்ற கடவுள்

ஓய்வூதியத்தில் ஒதுக்கிவைத்த
சிறுதொகையை எடுக்க விரைகிறார்
ஏ.டி.எம் படியேறுகையில் பாதம் தடுமாற
தாங்கிப்பிடித்த தாடிக்கார யுவனுக்கு
ஆங்கிலத்தில் நன்றி சொல்கிறார்
வரிசைகண்டு மலைத்து வாசலில் நிற்கையில்
வழுக்கையில் விழும் வெயிலை
குடைகொண்டு தடைசெய்கிறார்
கண்கள் பூத்துக் காத்திருந்து கடைசியில்
தனக்கும் முந்தைய வாடிக்கையாளரோடு
இருப்பின் பரிவர்த்தனை முடிவுபெற
காவலாளியிடம் மன்றாடுகிறார்
இறுதியில் முகம் சுருக்கிச் சபிக்கிறார்
ஆற்றாமை பொங்க
`உலகம் அழியட்டும்.’

- ஸ்ரீதர்பாரதி

கச்சா எண்ணெய் பருகும் உயிர்கள்

உயிரினினும் மேலான எனதன்பே
உனக்குத் தெரியுமா
நம் நிலத்தின் நாற்றுகள் மொத்தமாய்க் கருகி மடிந்தபோது
தாலாட்டின் அத்துணை சொற்களையும்
கண் முன்னே களவுகொடுத்தபோது
நாடிநரம்புகளென கிளை பரவிக்கிடந்த ஆற்றின் கண்கள்
ஒரே இரவில் ஒளியிழந்தபோது
கால்நடைகள் நெகிழிப்பைகள் உண்டு சுருண்டு விழுந்து செத்தபோது
தாத்தன்மார்கள் தூக்குக்கயிற்றை முத்தமிட்டு மாண்டபோது
அனைத்துக்கும் மேலாக அதிகாரத்தில் வீற்றிருக்கும்
கடவுளரே முன்நின்று மூச்சுக்காற்றில் விஷம் கலந்தபோது
நாதியற்ற நாங்கள் ஒரு குவளைத் தேநீர் இரண்டு திராம்களுக்கும்
ஒரு லிட்டர் பெட்ரோல் ஒன்றரை திராம்களுக்கும்
விலைபோகும் தேசத்திடம் கையெழுத்தானோம்
அதை அப்படிச் சொல்வதுதான் தகும் எனதன்பே
துயரங்கொள்ளாதே
உயிர் வறண்டு தொண்டைக்குழி வற்றும்போதெல்லாம்
நாங்கள்
ஆசை தீரப் அள்ளியள்ளிப் பருகுவோம்
பெட்ரோலை.

-தர்மராஜ் பெரியசாமி

குருட்டு நிலம்

பச்சை மஞ்சள் ஷரோன் பிளைவுட்
குடையின் கீழ்
கரும்புச் சாறுக் கடை.
ஆரஞ்சு மஞ்சள்
98.3 ரேடியோ மிர்ச்சி பண்பலை
குடையின் கீழ்
வாழைப்பழக் கடை.
பிங்க் நிற 93.5 சூரியன் பண்பலை
குடையின் கீழ்
கம்மங்கூழும் கேப்பைக் கூழும்.
நீலம் மஞ்சள் ஐடியா
குடையின் கீழ்
இளநீர்க் கடை.
சிவப்பு வெள்ளை ஏர்டெல்
குடையின் கீழ்
பூக்கடை.
சற்றே அந்தக் கடைகளை
யோசித்துப்பாருங்கள்.

- பச்சோந்தி

கைச்செலவுக்கும் பணமற்ற கடவுள்

ஓய்வூதியத்தில் ஒதுக்கிவைத்த
சிறுதொகையை எடுக்க விரைகிறார்
ஏ.டி.எம் படியேறுகையில் பாதம் தடுமாற
தாங்கிப்பிடித்த தாடிக்கார யுவனுக்கு
ஆங்கிலத்தில் நன்றி சொல்கிறார்
வரிசைகண்டு மலைத்து வாசலில் நிற்கையில்
வழுக்கையில் விழும் வெயிலை
குடைகொண்டு தடைசெய்கிறார்
கண்கள் பூத்துக் காத்திருந்து கடைசியில்
தனக்கும் முந்தைய வாடிக்கையாளரோடு
இருப்பின் பரிவர்த்தனை முடிவுபெற
காவலாளியிடம் மன்றாடுகிறார்
இறுதியில் முகம் சுருக்கிச் சபிக்கிறார்
ஆற்றாமை பொங்க
`உலகம் அழியட்டும்.’

- ஸ்ரீதர்பாரதி