Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்

ஓவியம்: ஸ்யாம்

10 செகண்ட் கதைகள்

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்
10 செகண்ட் கதைகள்

சந்தேகம்

``சாமிக்கும் பேய்க்கும் சண்டை வந்தா, யாருப்பா ஃபர்ஸ்ட் ஜெயிப்பா?'' எனக் கேட்டது குழந்தை.

- க.வி

10 செகண்ட் கதைகள்

ஆசுவாசம்

பந்தய தூரத்தைக் கடந்ததும் ஆசுவாசப்பட்டது, சவுக்கடி வாங்கிய மாடு.

 - பெ.பாண்டியன்

10 செகண்ட் கதைகள்

இயல்பு

தமிழகம், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது. மக்கள், வங்கி வாசலில்.

- இரா.பார்த்திபன்

10 செகண்ட் கதைகள்

நடிப்பு

பிச்சைக்காரன் சாப்பிடும் காட்சியில், உண்மையான பிச்சைக்காரனை நடிக்க வைத்தார்கள். நான்கு டேக் எடுத்தான் அவன்.

- நந்த குமார்

10 செகண்ட் கதைகள்

பேங்க்

``ஏன் எல்லாரும் வரிசையா நிக்குறீங்க?'' என்றேன், ``இது பேங்க் விளையாட்டு'' என்றான் பொடியன்.

- ரியாஸ்

10 செகண்ட் கதைகள்

சினிமா

தேசிய கீதம் முடிந்து  தொடங்கியது படம்,  அயிட்டம் சாங்குடன்.

- ரியாஸ்

10 செகண்ட் கதைகள்

நண்பன்

``சார், என்னைத் தெரியலையா?

நான்தான் உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்!''

என்றான் டிராஃபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டவன்.

- க.வி

10 செகண்ட் கதைகள்

வாழ்வு

கடவுள் கைவிட்டபோதும், பேய் ஓட்டி வாழ்ந்துகொண்டிருந்தார் கோயில் பூசாரி.

- பெ.பாண்டியன்

10 செகண்ட் கதைகள்

தேடல்

புதிதாக வெளியூருக்குச் செல்லவிருந்த அப்பாவுக்கு, கூகுள் மேப்பில் வழி காண்பித்தான் சிறுவன் ராகுல்.

- க.விக்னேஷ்

10 செகண்ட் கதைகள்

நெருக்கம்

​நெருங்கவேவிடாதவர்கள், எல்லோரும் நெருங்கி நின்றார்கள் இறுதி ஊர்வலத்தில்.

- கே.சதீஷ்

10 செகண்ட் கதைகள்

திகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!