ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-611

ம்... என்றால் அழுதுவிடும் மனதை
தோளில் கை போட்டுத் தேற்றி நிறுத்தியிருக்கிறேன்
இமிக்ரேஷன் வரிசையில்.
‘இப்படியே போய்விடுகிறேனே’ எனப் புலம்பியபடியிருந்த
அதன் காதுகளில் மூன்றே மூன்று மந்திரங்களைச் சொன்னேன்
பிறகு அது கம்மென நின்றுகொண்டது.
கண்டங்களை ஊடறுக்கும் ஒரு பிரமாண்டப் பறவையென
ஓடுதளத்தில் பாந்தமாக நிற்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஒன்றுமே தெரியாத பச்சப்பிள்ளையைப்போல.
உலகம் என்பது ஒரு சிறிய கிராமமாகிவிட்டபடியால்
தேவனிடத்தில் ஏதொன்று கேட்பதற்கும் வழியில்லை.
இந்த நேரத்தில் எந்தையிடம் அளவிலாத அன்பும்
நம் சமூகத்திடம் அளவற்றக் கோபமும்கொள்கிறேன்.
ஒரே ஆறுதல் அத்துணை வாஞ்சையால் உளங்கவரும்
இதோ இந்தப் பணிப்பெண்தாம்.
அம்மணி எத்தனைப் பொலிவு உன் பூ முகத்தில்
‘இருக்கை வாரைக் கட்டுங்கள்’ என்பதில்தான் எத்தனைக் கொஞ்சல்!
பொறுக்க முடியாக் காலம் சுழற்றிவிட்ட சவுக்கடியில்
மூச்சிரைக்க ஓடி தன் வலியச் சிறகுகளால்
வான் நோக்கிச் சீறுகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
ஜன்னலில் இப்போது பார்க்கிறேன்
எனக்கு நேரெதிர் திசையில் விடுபட்டுக்கொண்டிருந்தது
சிறியதாக
மிக மிகச் சிறியதாக
என் மையத்தில் சுழலும் ஓர் உலகம்,
தாவிப்பிடிக்க யத்தனிக்கும் சிறுவனின் கைகளிலிருந்து
அதுபாட்டுக்கு நழுவிச்செல்லும்
ஒரு ரப்பர் பந்தைப்போல.

- தர்மராஜ் பெரியசாமி

தலைப்பிடப்படாத கவிதை

தலைப்பிடப்படாத கவிதை ஒன்று
நடந்துசெல்கிறது.
சரம்சரமான மல்லிகைப்பூ தொங்குகிறது.
வாசமான வாசம்
குணம் மணத்துடன்
ஸ்கூட்டியில் போகும்போது
திசைவேகமும்கொள்கிறது.
கொஞ்சம் முத்தமும் வெப்பமும்
முகிழ்த்து நுரைக்கின்றன தோழர்களுக்கு.
தலைப்பெல்லாம் ஒரு பொருட்டா என்றபடி
அந்தக் கவிதை
எல்லாவற்றையும் ஒருமுறை
அசைத்துப்பார்க்கிறது.

- சச்சின்

இரண்டு கிலோ கெளரவம்

தர்பூசணி என்று அழைப்பது
கெளரவக் குறைவு என்று எண்ணியதால்
`தர்பூஸ் ரெண்டு என்ன ரேட்?’ என்றார்
செல்கடை சித்தப்பு.
தர்பூசணியை எடைக்கு விற்கும்
புத்திசாலிகள் நிறைந்த நாட்டில்
ஏமாளியாக இருத்தல் வரம் ஆதலால்
ஒன்றுக்கு இரண்டாக வாங்கினார்.
`எப்போ இறங்கிய பழம்?’ என
வியாபாரியிடம் விசாரித்த சித்தப்பு
`நேற்றுதான்’ எனச் சொன்னதும்
`கிட்டன்ஸ்லதானா?’ எனக் கேட்டுவிட்டு
பெருமை பொங்கப் பார்த்தார்.
வண்டியைக் கிளப்பிய அவரிடம்
நடந்துவந்த ஒருவன்
மருத்துவமனைக்கு வழி கேட்டபோது
`ஹாஸ்பிட்டல் இப்படியே போனா வாக்கபிள்தான்’
எனச் சொல்லி
விசிலடித்தபடியே கிளம்பிப் போனார்.