(தலைவிக் கூற்று - பெருந்திணை)

என் கொல்லையில் ஓர் உரக்குழி வெட்டித் தர முடியுமா?
வழிப்போக்கரே...
வளத்திற்கு உகந்த நாள் இன்று
தானியங்களில் மது ததும்பும் காலம்
உங்களுக்கு என் வீட்டில்தான் மதிய உணவு இன்று
முயல்கறியும் கஞ்சாத் துவையலும் சின்ன உள்ளியும்
என் உப்பை காலத்திற்கும் தருவேன் உமக்கு
வீட்டின் மேலேறி நிலவைப் பார்க்கும்படி
நான்கு ஓடுகளைப் பிரிக்க வேண்டும்
பின்னொரு காட்டுப்பூனையின் அதகளத்திற்கு இன்றிரவு
நீங்கள் முடிவுகட்ட வேண்டும் - மேலும்
இந்நிலத்தின் வள்ளிக்கிழங்குகளின் பாலில்
மதுரம் நிறையும்படி செய்ய வேண்டும்
படுக்கையறை ஒட்டடைகளை நான் துரிதமாக நீக்குகிறேன்
அவ்வறையின் பழுதுற்ற தாழில் செருக நடுவிரலைத் தருவீர்கள்தானே!
எனக்குச் சம்மதம் இந்த மண்ணில் கிடந்து மக்க
புழுக்களுக்கும் தாவரங்களுக்கும் உணவாக மாற வருகிறீர்கள்தானே!
என்ன அப்படியொரு சிரிப்பு?
அந்தச் செவ்வாழைக் கன்றுக்கு ஒரு முத்தமிடுங்கள்.
கற்றாழைச் சோற்றைச் சீவியெடுத்து
விம்மித் துடிக்கும் என் மார்புகளில் பூசிவிடுங்கள்.
பிறகு, மெள்ள மெள்ளக் கொதிக்கும் இந்தக் குழம்பில்
கொழுத்த மீனின் துண்டமாகக் கவனமாக இறங்குங்கள்
அவ்வளவுதான்
நம் மதிய உணவு தயாராகிவிட்டது.