தேவை அதிகமில்லை

பப்பாளி மரத்தின்
யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை
காக்கை கொத்திக் கீழே தள்ளியது
இன்னும் சில காக்கைகள் வந்தன
தின்றதுபோக மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் மைனாக்கள் வந்தன
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் கற்றாழைக் குருவிகள் வந்தன
அவையும் புசித்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் சிட்டுக்குருவிகள் வந்தன
அவையும் எடுத்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் வண்டுகள் வந்தன
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டு அகன்றன
இப்போது சாரை சாரையாய்
எறும்புகள் வந்து
கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு
கடக்கின்றன
மனிதனுக்குத் தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்
பசியாற்றுகிறது எண்ணிலா உயிர்க்கு
இத்தனை எடுத்ததுபோக
இன்னும் மிச்சமிருக்கிறது பப்பாளிப்பழம்!

- சௌவி

சாவி

எனக்கு மிகவும் பிடித்தது
குளக்கரையில் நான் நிற்கும் புகைப்படம்.
ஆர்வமாக நானதைக் குனிந்து பார்க்கையில்
குளத்தினுள் விழுந்துவிட்டது
சட்டை பாக்கெட்டிலிருந்த சாவி.
என்ன செய்வேன் நான்,
புகைப்படத்துக்குள் நுழையும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது இல்லையே!
போட்டோவில் இருக்கும்
என்னிடமே நான் சொல்லி,
அதை எடுத்துத் தரச் சொல்லலாம்தான்
போட்டோவுக்குள் இருந்து
என்னைப் பார்க்கும் நானும்
போட்டோவில் இருக்கும்
என்னைப் பார்க்கும் நானும் ஒன்றல்ல
என்கிறான் தத்துவவாதி நண்பனொருவன்.
எனக்குக் குழப்பமாக இருக்கிறது
நிகழ்காலத்தில் நிற்கும் நான்
இறந்தகாலத்துக்குள் குனிந்து
சாவியை எடுத்து
எதிர்காலத்தின் பூட்டை
எப்படித் திறக்கப்போகிறேன்?

- கார்த்திக் திலகன்

மழைத் தீக்குச்சி

தெருவிளக்கணைக்க
முடியாமல் தவிக்கிறது
நடைபாதை தாம்பத்யம்.

- வாலிதாசன்

ஒரு கல்... ஓர் ஒளியாண்டு

சிறுவயதில் கோபமாக
வான் நோக்கி வீசிய கல்
திரும்பி வரவேயில்லை.
வெகுநேரம் காத்திருந்து
வீடு திரும்பிவிட்டேன்.

அதிலிருந்து அந்தப் பக்கம்
போகும்போதெல்லாம்
அச்சம் தலைக்கேறும்.

அந்தக் கல்
ஒளியாண்டு வேகத்தில் பயணித்து
கோள்கள் கடந்து
நட்சத்திரங்கள் உரசி
சென்றுகொண்டே இருப்பதாக
அடிக்கடி கனவு வரும்.

கல்
வீசியவனை மறந்துபோயிருக்கலாம்.

நினைவு திரும்பும் வாய்ப்பு
ஏதேனுமுண்டா என அச்சத்தில்
சோதிடனை அணுகினேன்.

எடுத்தவுடன் இப்படித் தொடங்கினான்
`ஜாதகத்தின் மூன்றாவது கட்டத்தில்
ஒரு கல் இருக்கிறது.’

- எம்.ஸ்டாலின் சரவணன்

தேவை அதிகமில்லை

பப்பாளி மரத்தின்
யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை
காக்கை கொத்திக் கீழே தள்ளியது
இன்னும் சில காக்கைகள் வந்தன
தின்றதுபோக மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் மைனாக்கள் வந்தன
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் கற்றாழைக் குருவிகள் வந்தன
அவையும் புசித்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் சிட்டுக்குருவிகள் வந்தன
அவையும் எடுத்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் வண்டுகள் வந்தன
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டு அகன்றன
இப்போது சாரை சாரையாய்
எறும்புகள் வந்து
கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு
கடக்கின்றன
மனிதனுக்குத் தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்
பசியாற்றுகிறது எண்ணிலா உயிர்க்கு
இத்தனை எடுத்ததுபோக
இன்னும் மிச்சமிருக்கிறது பப்பாளிப்பழம்!

- சௌவி

சாவி

எனக்கு மிகவும் பிடித்தது
குளக்கரையில் நான் நிற்கும் புகைப்படம்.
ஆர்வமாக நானதைக் குனிந்து பார்க்கையில்
குளத்தினுள் விழுந்துவிட்டது
சட்டை பாக்கெட்டிலிருந்த சாவி.
என்ன செய்வேன் நான்,
புகைப்படத்துக்குள் நுழையும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது இல்லையே!
போட்டோவில் இருக்கும்
என்னிடமே நான் சொல்லி,
அதை எடுத்துத் தரச் சொல்லலாம்தான்
போட்டோவுக்குள் இருந்து
என்னைப் பார்க்கும் நானும்
போட்டோவில் இருக்கும்
என்னைப் பார்க்கும் நானும் ஒன்றல்ல
என்கிறான் தத்துவவாதி நண்பனொருவன்.
எனக்குக் குழப்பமாக இருக்கிறது
நிகழ்காலத்தில் நிற்கும் நான்
இறந்தகாலத்துக்குள் குனிந்து
சாவியை எடுத்து
எதிர்காலத்தின் பூட்டை
எப்படித் திறக்கப்போகிறேன்?

- கார்த்திக் திலகன்

மழைத் தீக்குச்சி

தெருவிளக்கணைக்க
முடியாமல் தவிக்கிறது
நடைபாதை தாம்பத்யம்.

- வாலிதாசன்

ஒரு கல்... ஓர் ஒளியாண்டு

சிறுவயதில் கோபமாக
வான் நோக்கி வீசிய கல்
திரும்பி வரவேயில்லை.
வெகுநேரம் காத்திருந்து
வீடு திரும்பிவிட்டேன்.

அதிலிருந்து அந்தப் பக்கம்
போகும்போதெல்லாம்
அச்சம் தலைக்கேறும்.

அந்தக் கல்
ஒளியாண்டு வேகத்தில் பயணித்து
கோள்கள் கடந்து
நட்சத்திரங்கள் உரசி
சென்றுகொண்டே இருப்பதாக
அடிக்கடி கனவு வரும்.

கல்
வீசியவனை மறந்துபோயிருக்கலாம்.

நினைவு திரும்பும் வாய்ப்பு
ஏதேனுமுண்டா என அச்சத்தில்
சோதிடனை அணுகினேன்.

எடுத்தவுடன் இப்படித் தொடங்கினான்
`ஜாதகத்தின் மூன்றாவது கட்டத்தில்
ஒரு கல் இருக்கிறது.’

- எம்.ஸ்டாலின் சரவணன்