Published:Updated:

அடுத்து என்ன? - தமிழ்மகன்

அடுத்து என்ன? - தமிழ்மகன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - தமிழ்மகன்

“புறக்கணிப்பின் பெருந்துயரத்தைப் புனைகிறேன்!” படம்: கே.ராஜசேகரன்

அடுத்து என்ன? - தமிழ்மகன்

“புறக்கணிப்பின் பெருந்துயரத்தைப் புனைகிறேன்!” படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
அடுத்து என்ன? - தமிழ்மகன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - தமிழ்மகன்
அடுத்து என்ன? - தமிழ்மகன்

புறக்கணிப்பின் வலி கொடியது. அமிலக் காந்தலாகக் குருதியைத் தீய்க்கும் தன்மை கொண்டது அது.

“ஏம்பா தள்ளி நில்லு’’ எனப் போகிற போக்கில் ஒருவன் நம்மைத் தட்டிவிட்டுப் போனாலே உடம்பெல்லாம் கொதிக்கிறது. இந்தப் புறக்கணிப்பின் துயரம் ஒரு குடும்பத்துக்கு நேர்ந்தால்... ஒரு கிராமத்துக்கு நேர்ந்தால்... ஒரு சாதிக்கு... ஒரு நாட்டுக்கு... ஓர் இனத்துக்கு... ஒரு மொழிக்கு? அது மாறாத வடுவாக மாறி, சமயம் பார்க்கிறது திருப்பி அடிப்பதற்கு.

தோற்றத்தில் நோஞ்சானாக இருப்பதாலோ, கறுப்பாக இருப்பதாலோ, குட்டையாக இருப்பதாலோ, தமிழில் பேசுவதாலோ, மிகச் சுலபமாக ஒருவன் சமூகத்தால் உதாசீனப்படுத்தப்படுகிறான். தனி மனிதருக்கு நடக்கும் இந்தப் புறக்கணிப்பின் துயரத்தைச் சற்றுக் கூர்ந்து ஆராய்ந்தால், அந்த வேதனையின் குவிமையம் தெரியும்.

ஹிட்லரால் புறக்கணிக்கப்பட்ட யூதர்கள், வெள்ளையர்களின் இழிவுக்கு ஆளான ஆப்பிரிக்கர்கள், சீனர்- ஜப்பானியர்- அமெரிக்கர்- இந்தியர் - சிங்களர் என எல்லோரும் ஒற்றுமையாகச் சேர்ந்தொழித்த தமிழர் எல்லாவற்றுக்கும் பின்னும் இருக்கிறது எகத்தாளமும் அதிகாரமும் புறக்கணிப்பும் பொய்மையும். முதுகில் குத்தப்பட்ட துரோகமும் துச்சமென வீசப்பட்ட வலியும் மூளையில் ஹிப்போகாம்பஸில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - தமிழ்மகன்

ஆழமாகப் பதிவதாகச் சொல்கிறது அறிவியல். ஆதி ஊடகமான மொழிக்குப் புறக்கணிப்பு நேரும்போதெல்லாம் தமிழர்கள் கொதிக்கிறார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்திய ராணுவம் களம் இறங்கியதும் 100 தமிழர்களின் மரணம் நிகழ்ந்ததும் வரலாறு.

கிளேஸியர் காலகட்டத்தில் பூமியின் மட்டம் மூன்று மீட்டர் வரை உயர்ந்ததாகச் சொல்கிறது அறிவியல். கடல் கொண்ட தென்னாடு என்கிறது வரலாறு. தமிழுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அதன் பின்னணியில் அறிவியல் காரணிகள் இருக்கின்றன. இரண்டையும் சேர்த்து யோசித்தபோது எனக்குள் உருவான அறிவியல் சீண்டல்தான், இந்த ‘ஜீன் குறிப்புகள்’ நாவல். தலைப்பு ஒருவேளை மாறலாம். ஓர் அறிவியல் வரலாற்றுப் பின்னணிக் கதை. தமிழின் தொன்மையை விஞ்ஞானச் சூழலில் அலசத் தீர்மானித்தேன். தமிழின் அத்தனை பெருமைகளையும் அறிவியல் புனைகதையின் வடிவத்தில் எழுதி வருகிறேன். போரும் வாழ்வும், குற்றமும் தண்டனையும் போன்றதொரு பெரும் பணி.

வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால், தாரகை எனத் தமிழகத்தின் சமீபத்துச் சரித்திரத்தைக் களமாகக் கொண்ட என் நாவல்கள்... என் அறிவியல் புனைகதையான ‘ஆபரேஷன் நோவா’ தொடர்கதையும் அதைத்தான் மையப்படுத்தியது. அந்தத் துணிச்சலில் இந்த அரசியலை அறிவியல் தொட்டு எழுதுகிறேன். ஐந்து ஆண்டுகளாக மனத்திலேயே ஆயிரம் முறை எழுதித் திருத்திவிட்டேன். இனி தாளில் எழுதுவதுதான் பாக்கி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism