கங்கைக் கரையில்
அவனைப் பார்த்தேன்

அமெரிக்கத் தொப்பி
இங்கிலாந்து காலணி
இத்தாலி கழுத்தணி அணிந்திருந்தான்

மறைக்க வேண்டியதை
அவன் மறைக்கவே இல்லை

கடன் தொல்லையால்
தற்கொலை செய்து கொண்டு
கரையொதுங்கிய ஒரு பிணத்தின்
இறுகிய கைகளுக்குள்ளிருந்த
‘கிரெடிட் கார்டை’ பிடுங்கி
தீயில் வாட்டி
ருசிபார்த்துக்கொண்டிருந்தான்

அவனைக் கவனித்துக்கொண்டே இருந்தேன்
அவனருகில் இருந்த
ஒருத்தி சொன்னாள்...

‘அவன் நமது
நவீன இந்தியாவின்
கார்ப்பரேட் அகோரி!’

கங்கைக் கரையில்
அவனைப் பார்த்தேன்

அமெரிக்கத் தொப்பி
இங்கிலாந்து காலணி
இத்தாலி கழுத்தணி அணிந்திருந்தான்

மறைக்க வேண்டியதை
அவன் மறைக்கவே இல்லை

கடன் தொல்லையால்
தற்கொலை செய்து கொண்டு
கரையொதுங்கிய ஒரு பிணத்தின்
இறுகிய கைகளுக்குள்ளிருந்த
‘கிரெடிட் கார்டை’ பிடுங்கி
தீயில் வாட்டி
ருசிபார்த்துக்கொண்டிருந்தான்

அவனைக் கவனித்துக்கொண்டே இருந்தேன்
அவனருகில் இருந்த
ஒருத்தி சொன்னாள்...

‘அவன் நமது
நவீன இந்தியாவின்
கார்ப்பரேட் அகோரி!’