அந்தக் கூட்டத்தில்
யாரும் யாரைவிடவும்
கீழோ மேலோ இல்லை.

மிகை நடிப்பில்
மிருதுவாகக் காட்டிக்கொள்வதில்
ஒப்பனையில்
ஒப்பாரிவைப்பதில்
யாரும் யாருக்கும்
கூடுதலோ குறைவோ
இல்லை.

ஒரு பொருளை
ஒரு பதவியைப்
பறிப்பதிலும்
பங்கிட்டுக்கொள்வதிலும்கூட
சமமாகவே இருக்கிறார்கள்
சகலரும்.

பாதத்தில் கிடக்க
பாவம்போல் நடக்க
சொன்னதைச் செய்ய
சூழலுக்கேற்ப ஒத்தூத
பழகியிருக்கிறார்கள்
ஒருவரைப்போலவே
இன்னொருவரும்.

இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது.
காத்திருப்போம்...
எல்லோரும் சேர்ந்து
யாரோ ஒருவரைத்
தள்ளத்தானேபோகிறார்கள்
குழியில்

அல்லது

எல்லோரும் சேர்ந்து
ஒருவரைத் தள்ள
பறித்துக்கொண்டிருக்கிறார்கள்
குழியை.

அந்தக் கூட்டத்தில்
யாரும் யாரைவிடவும்
கீழோ மேலோ இல்லை.

மிகை நடிப்பில்
மிருதுவாகக் காட்டிக்கொள்வதில்
ஒப்பனையில்
ஒப்பாரிவைப்பதில்
யாரும் யாருக்கும்
கூடுதலோ குறைவோ
இல்லை.

ஒரு பொருளை
ஒரு பதவியைப்
பறிப்பதிலும்
பங்கிட்டுக்கொள்வதிலும்கூட
சமமாகவே இருக்கிறார்கள்
சகலரும்.

பாதத்தில் கிடக்க
பாவம்போல் நடக்க
சொன்னதைச் செய்ய
சூழலுக்கேற்ப ஒத்தூத
பழகியிருக்கிறார்கள்
ஒருவரைப்போலவே
இன்னொருவரும்.

இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது.
காத்திருப்போம்...
எல்லோரும் சேர்ந்து
யாரோ ஒருவரைத்
தள்ளத்தானேபோகிறார்கள்
குழியில்

அல்லது

எல்லோரும் சேர்ந்து
ஒருவரைத் தள்ள
பறித்துக்கொண்டிருக்கிறார்கள்
குழியை.