நான்குமுனைச் சந்திப்பொன்றில்
ஒரு போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர்.
குடியானவன் வெலவெலத்துப்போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த கணம் அறை விழும் சத்தத்திற்காய்
எல்லோரும் காத்திருக்க
அதிகாரி குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.
அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும் ஓசை கேட்டது.
`நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!’ என
வாழ்த்தியது வானொலி.
போலீஸ் தன் சுடரை
ஒரு கந்துவட்டிக்காரனிடம் பற்றவைத்துவிட்டுப் போனார்.
அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன்.
கிழவி தலையைச் சொறிந்தபடியே
`நாளைக்கு...’ என்றாள்.
ஓர் எழுத்துகூட ஏசாமல் தன் ஜொலிப்பை
அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.
அதில் பிரகாசித்துப்போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளைச் சேர்த்துப் போட்டாள்.
அவை ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தன.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை ஈந்துவிட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க் குட்டி
அந்த `ஒளிநறுங்கீற்றை’ லபக்கென்று விழுங்கியது!

நான்குமுனைச் சந்திப்பொன்றில்
ஒரு போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர்.
குடியானவன் வெலவெலத்துப்போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த கணம் அறை விழும் சத்தத்திற்காய்
எல்லோரும் காத்திருக்க
அதிகாரி குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.
அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும் ஓசை கேட்டது.
`நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!’ என
வாழ்த்தியது வானொலி.
போலீஸ் தன் சுடரை
ஒரு கந்துவட்டிக்காரனிடம் பற்றவைத்துவிட்டுப் போனார்.
அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன்.
கிழவி தலையைச் சொறிந்தபடியே
`நாளைக்கு...’ என்றாள்.
ஓர் எழுத்துகூட ஏசாமல் தன் ஜொலிப்பை
அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.
அதில் பிரகாசித்துப்போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளைச் சேர்த்துப் போட்டாள்.
அவை ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தன.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை ஈந்துவிட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க் குட்டி
அந்த `ஒளிநறுங்கீற்றை’ லபக்கென்று விழுங்கியது!