காலம் என்பது நம்பிக்கையின் சொல். புதிய கனவுகளையும் சாத்தியங்களையும் ஏந்திக்கொண்டுவரும் பிரபஞ்சத்தின் அற்புதக் கரம். இன்று அதற்குப் பெயர் 2017. மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் நாம் அதை வரவேற்போம்.

காலத்தில் கலந்துவிட்ட மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு நமது அஞ்சலி.

தனது ‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்காக 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்.

புத்தக வெளியீடுகள், விமர்சனக் கூட்டங்கள், விருதுகள், புத்தகத் திருவிழா என இந்தப் புத்தாண்டு பல்வேறு கொண்டாட்டங்களுடன் தொடங்குகிறது. தங்களது முதல் புத்தகங்களை வெளியிட்டுள்ள இளைய படைப்பாளிகளுக்கும், தொடர்ந்து எழுத்தில் தனது உழைப்பைச் செலுத்திவரும் அத்தனை படைப்பாளர்களுக்கும் அன்பு.

பேராசிரியர் அ.மார்க்ஸ் நேர்காணல், இன்குலாப் பற்றிய தியாகுவின் நினைவுகள், பிரபஞ்சனின் புத்தகங்களுடனான அனுபவம், பெண் சினிமா உலகை ஆராயும் ஜா.தீபாவின் கட்டுரை, அம்பையின் ஆளுமையைப் பேசும் சு.தமிழ்ச்செல்வியின் பகிர்வு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த அ.முத்துகிருஷ்ணனின் அலசல், ஜெயலலிதா குறித்த ஜெயராணியின் பார்வை, தேசிய அடையாளங்களுடனான மத்திய அரசின் போக்கை விமர்சிக்கும் சுப.வீரபாண்டியனின் கட்டுரை, தாயம்மாள் அறவாணன், சி.மோகன், சு.வெங்கடேசன், அ.முத்துலிங்கம், தமிழ்மகன், நக்கீரன் பங்களிப்புகளுடன் தொடர்கள், கதைகள், கவிதைகள் என, புத்தாண்டின் முதல் இதழ் உங்களிடம்!

- ஆசிரியர்