Published:Updated:

வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!

வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!

வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!

வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!

வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!

Published:Updated:
வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றிய ஆளுமைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அந்த ஆண்டு வெளியான தமிழின் சிறந்த புனைவு, அபுனைவுக்கான விருதும் வழங்கிவருகிறது.  2017-ம் ஆண்டுக்கான  கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10-ம் தேதி (இன்று) விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான `தமிழ் இலக்கியத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது' எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. எழுத்தாளர் அம்பை, எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர்.சுகுமாரன் உள்ளிட்டோர் இதற்கு முன் இந்த விருதைப் பெற்றுள்ளனர். 

வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதிவருகிறார், இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவிருக்கும் எழுத்தாளர் வண்ணதாசன். தனது `ஒரு சிறு இசை' சிறுகதைத் தொகுப்புக்காக 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள் எழுதிவரும் வண்ணதாசனின் படைப்புகளுக்கு பெரும்வாசகர்கள் உள்ளனர். மனித மனதின் மென்உணர்வுகளை, மனித  வாழ்வின் உன்னதமான தருணங்களை மெல்லிய நடையில் பதிவுசெய்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூ, இலை, பறவைகளின் இறகு என அன்றாட வாழ்வின் பரபரப்பில் நாம் கவனிக்க மறந்தவற்றை, நுட்பமான அழகியல் உணர்வோடு பதிவுசெய்தவர். சகமனிதனை நேசித்தல் என்பதைக் கடந்து, இயற்கை உயிர்களை நேசித்தல் என மனதின் பரப்பை விரிக்கச் செய்யும் எழுத்துகள்தான் இவரின் சாராம்சம்.

அவரின் கவிதை இதோ,

`சைக்களில் வந்த

தக்காளிக்கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்து திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களைவிடவும்

நசுங்கிப்போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை.'

புனைவுக்கான விருது: 

2017-ம் ஆண்டின் புனைவுக்கான விருதை `வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' நாவலுக்காக எழுத்தாளர் தமிழ்மகனுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்மொழியின் தொன்மத்தை அறிவியல் புனைவோடு பேசிய இந்த நாவல், வாசகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றது.

சென்னையைப் பற்றி இவர்  எழுதிய `வெட்டுப்புலி',  மிக முக்கியமான நாவலாக பல எழுத்தாளர்களின் பரிந்துரைப் பட்டியலிலும் இருக்கிறது. திராவிடப் பின்னணியிலான `வட தமிழகம்', `வனசாட்சி', `மானுடப் பண்ணை' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அறிவியல், சமூகம், தமிழ்மொழி குறித்து சுவாரஸ்யமான நடையில், தகவல்களைப் பொதிந்து வாசககர்களுக்குக் கடத்துவார்.  30 வருடங்களாக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள்  எழுதிவருகிறார். 

அபுனைவுக்கான விருது:

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பியின் `கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும்' என்ற ஆய்வு நூலுக்கு வழங்கப்படுகிறது. இவர், இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் காரைத்தீவு என்னும் ஊரில் பிறந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி, தற்போது கனடாவில் வசித்துவருகிறார்.  

மொழிபெயர்ப்புக்கான விருது:

`பாலசரஸ்வதி - அவர் கலையும் வாழ்வும்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக டி.ஐ.அரவிந்தனுக்கு  வழங்கப்படுகிறது.

டக்லஸ் எம்.நைட் ஆங்கிலத்தில் எழுதிய `Balasaraswathi - Her Life and Art' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நடனம் மற்றும் இசையில் மிக முக்கியமான ஆளுமையான பாலசரஸ்வதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலாக இந்த நூல் உள்ளது. 

இவர்கள் தவிர பா.அகிலன், அனுக் அருட்பிரகாசம், சசிகரன் பத்மநாபன், கவிஞர்.செழியன், தி.ஞானசேகரன், கலாநிதி நிக்கோலப்பிள்ளை சவேரி உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்துக்கும், விருது பெறும் படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism