Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்
10 செகண்ட் கதைகள்

அக்கறை

``மண்ணைத் திங்காதடா... வயிறு வலிக்கும்'' என்று மகனை அதட்டினார், மணல் வியாபாரி.

- சி.சாமிநாதன்

10 செகண்ட் கதைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயணம்

``ஹாஃப் இயர்லி லீவுல, யார் யார் எங்கெங்க போயிருந்தீங்க?'' எனக் கேட்டதும்,

``எங்க அப்பாகூட ஏ.டி.எம்-க்குப் போயிருந்தேன் மிஸ்'' என்றான் பிரஜன்.

- சி.நாதன்

10 செகண்ட் கதைகள்

விளையாட்டு

``பேயும் சாமியும் சண்டைபோடுற மாதிரி புதுசா ஏதாவது வீடியோ கேம் வந்திருக்காப்பா?'' என்று கேட்டாள் அபர்ணா.

- வெ.சென்னப்பன்

10 செகண்ட் கதைகள்

அமைதி

பஸ்ஸில் ஜன்னல் ஓர ஸீட் பிடித்து அமைதியாக உட்கார்ந்தபடி ஆக்ரோஷமாகச் சண்டைபோட்டுக்கொண்டிருந்தான் ரகுவரன், ட்விட்டரில்.

- கே.மணிகண்டன்

10 செகண்ட் கதைகள்

வீரன்

பொங்கல் கரும்பைச் சுவைத்தபடி டி.வி-யில் புதுப்படம் பார்த்துக்கொண்டிருந்தான் மாடுபிடி வீரன்.

- சி.எஸ்.நாதன்

10 செகண்ட் கதைகள்

நிம்மதி

``எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஏ.டி.எம்-ல பணத்தைப் பார்த்து'' எனப் பெருமூச்சுவிட்டார் அப்பா.

- கோ.பகவான்

10 செகண்ட் கதைகள்

​நட்பு

``உங்க ஏரியா ஏ.டி.எம்-ல பணம் போட்டா சொல்லுங்க. எங்க ஏரியாவுல பணம் போட்டா நான் சொல்றேன்'' என நம்பர் வாங்கிச் சென்றனர் ஏ.டி.எம் நண்பர்கள்.

- கோ.பகவான்

10 செகண்ட் கதைகள்

அம்மா

``கேட்கும்போது எல்லாம் பணம் அனுப்பினேனே... நீங்க ஒழுங்கா பார்த்திருந்தா, எங்க அம்மா செத்திருக்க மாட்டாங்க'' என முதியோர் இல்ல உரிமையாளரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தான் இளங்கோ.

- கே.சதீஷ்

10 செகண்ட் கதைகள்

பன்ச்

``ஒவ்வொரு ஏ.டி.எம்-லயும் ரெண்டாயிரம் ரெண்டாயிரமா சேர்த்த காசுடா'' என, வீரவசனம் பேசிக்கொண்டிருந்தார் ஹீரோ.

- கோ.பகவான்

10 செகண்ட் கதைகள்

செக்கிங்

``எங்க... வாய ஊதுங்க'' என்றாள், டிரங்க் அண்ட் டிரைவ் டியூட்டி முடிந்து வந்த கணவனிடம்.

- சி.சாமிநாதன்

10 செகண்ட் கதைகள்

திகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism