Published:Updated:

பொங்கல் சிறப்பு கவிதைகள்

பொங்கல் சிறப்பு கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
பொங்கல் சிறப்பு கவிதைகள்

கவிஞர் யுகபாரதி, ஓவியங்கள்: செந்தில்

பொங்கல் சிறப்பு கவிதைகள்

கவிஞர் யுகபாரதி, ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
பொங்கல் சிறப்பு கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
பொங்கல் சிறப்பு கவிதைகள்
பொங்கல் சிறப்பு கவிதைகள்

`இன்று விடுமுறை'யென
தொங்கிக்கொண்டிருக்கும் பலகையை
எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாமல்
விலையில்லா அரிசிக்கு
வரிசையில் நிற்பவனையும்
அழைக்கத்தான் வேண்டுமா
விவசாயியென்று?

பொங்கல் சிறப்பு கவிதைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொங்கல் சிறப்பு கவிதைகள்

கூட்டுறவுக் கடனுக்காகக்
கூரைகளை ஜப்திசெய்ய வருபவர்கள்
வட்டிக்குப் பதிலாக
வாங்கிக்கொண்டு போகிறார்கள்
உயிர்களை.

பொங்கல் சிறப்பு கவிதைகள்

சூரியனுக்குப்
படைத்த பொங்கலை
யாருண்பது எனும் சண்டையில்
முடிந்துவிடுகிறது
அண்ணனுக்கும் தம்பிக்குமான
ஜல்லிக்கட்டு

பொங்கல் சிறப்பு கவிதைகள்

லாசாரத்தைக் காக்கவேண்டிய
பொறுப்பு குறித்து பேசுகிறவர்களில்
ஒருவராவது
ரேஷனுக்கு வந்திருக்கிறார்களா
இலவச வேட்டி சேலையை வாங்க!

பொங்கல் சிறப்பு கவிதைகள்

திகாரத்துக்கான போட்டி
அதிகமாகிவிட்ட ஊழல்
இருந்ததையும் பிடுங்கிக்கொண்ட
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
நாடே குப்பையாய்க் கிடக்க
எதை எரிப்பது
இந்தப் போகியில்?

பொங்கல் சிறப்பு கவிதைகள்

ம்ப முடிகிறதா உங்களால்?
வாழ்வு மொத்தமும்
அவளேயென்று கண்ணீர் மல்க
காதலைச்
சொல்லிக்கொண்டிருப்பவன்
மாடுபிடி வீரரென்பதை!

பொங்கல் சிறப்பு கவிதைகள்

கையால் அடுப்புகட்டி
கரும்பால் வளைவமைத்து
கலர்கலராய்க் கோலமிட்டு
பொங்கலிட அரசி களைந்த
சசி அத்தை சொன்னாள்
ஒருகாலத்தில்
பொங்கலென்றால் இருக்குமாம்
சந்தோஷமாக

பொங்கல் சிறப்பு கவிதைகள்

வ்வளவு விலையா
ஒரு கட்டு கரும்பென்று
ஒரே ஒரு களியோடு
வீடு திரும்பிய கலியமூர்த்திக்கு
இப்போதுவரை
தெரிந்திருக்கவில்லை
தனக்கு வந்த
சர்க்கரைவியாதி பற்றி

பொங்கல் சிறப்பு கவிதைகள்

காவிரியால் பொய்த்துப்போன
சம்பாவையும் குறுவையையும்
கண்ணீரில் அறுவடைசெய்பவர்கள்
பண்டிகையாயிருந்த பொங்கலைக்
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்
திதியாக!

பொங்கல் சிறப்பு கவிதைகள்

ணைகளைக் கட்டியதாகவும்
ஆறு குளங்களை வெட்டியதாகவும்
சோழவம்சத்தின் பெருமையைச்
சொல்லிக்கொண்டிருக்கையில்தான்
மத்திய அரசு அறிவித்தது
மேலாண்மை வாரியத்தை
அமைக்க முடியாதென்று!

பொங்கல் சிறப்பு கவிதைகள்

ருழும் மாமனுக்கு
இஞ்சித் துவையலை அரைத்தவள்
கழுவாமல்விட்ட அம்மியிலிருந்தே
அடித்துக்கொண்டிக்கிறது
காதலின் நெடி.

பொங்கல் சிறப்பு கவிதைகள்

ற்றுப்படுகைகளில்
அடுக்ககங்கள் வந்த பின்பே
கிடைத்தது
சிவனாண்டி சித்தப்பாவுக்கு
செக்யூரிட்டி வேலை.

பொங்கல் சிறப்பு கவிதைகள்

நெல்லுக்கே களஞ்சியமென்று
பெயரெடுத்த ஊர்தான்
சோத்துக்கு வழியில்லாத சோகத்தில்
லோடுலாரிகளில்
கொஞ்சம் கொஞ்சமாக
அனுப்பிக்கொண்டிருக்கிறது
ஆறுகளை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism