Published:Updated:

மருதக் கண்ணீர்

மருதக் கண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
News
மருதக் கண்ணீர்

அறிவுமதி, ஓவியம்: டிராட்ஸ்கி மருது

மருதக் கண்ணீர்

செத்த பயிர
பாத்துபுட்டு
செத்து
விழுறா
விவசாயி!
ஒத்த
பயலும்
பாக்க
வரல
ஓட்டுப்
பொறுக்கும்
படுபாவி!

ழவு செஞ்சு
பாத்த
உடம்பு
நொடியில்
சாஞ்சு
போச்சு!
எழவு சொல்ல
போன
வீட்டில்
எழவு
கேக்க
லாச்சு!

கெண்ட குஞ்சு
மேஞ்ச
வயலில்
சீமக்
கருவ
தழஞ்சது!
யான கொண்டு
போரடிச்ச
சோழ மண்ணு
முடிஞ்சது!

ண்பதுக்கும்
மேல
உடலு
எறஞ்சி
கெடக்கு
பாரடா!
இவுக
மேல
நடந்து
வந்து
இந்தியான்னு
கூறடா!

மீனு தின்ற
கொக்கு
இன்று
வெட்டுக்
கிளிய
தின்னுது!
ஆத்து மணல
அள்ளித்
தின்ன
அரசு
என்ன
பண்ணுது?

ஞ்ச மண்ணு
தருசாச்சு!
பஞ்சம்
ரொம்ப
பெருசாச்சு!
பொங்கித்
தின்ன
கருக்காவும்
இல்லடா!
வர்ற
பொங்கலுக்கு
என்ன
செய்ய
சொல்லடா!