Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
##~##

தலைமுறை வளர்த்தவள்

சில குல்மொஹர் வேர்களுக்கும்
வேறு பல குரோட்டன்ஸ் செடிகளுக்கும்
தின்னக் கொடுத்துப்
பழகிப்போனது அவளது உடல்.
பார்த்தீனிய விதைகளில்
பஞ்சடைத்துப்போயிருந்தன சதைகளனைத்தும்.
எண்டோசல்ஃபான் பருகியவாறே
காற்றில் தலையசைத்தனர்
மரணம் சூழ்ந்துகிடந்த தளிர்கள்.
ராமகுருவிகாரும்*
வெள்ளைக்குருவிகாரும்*
விளைந்த அவளது
கருவறையில்
குவித்துவைக்கப்பட்டிருந்தன
மான்சாண்டோ குழந்தைகள்.
முன்பொரு காலத்தில்
அவள் மேனிகொத்திச் சிலாகித்துப்போன
சிட்டுக்குருவிகளுக்காக
இன்னொரு முறை
அழுது வீங்கினாள்.
மஞ்சனத்தி மரங்களில்
குடும்பம் வளர்த்த மைனாக்களும்
எங்கோ தொலைந்தன.
விரல் நீட்டி ஆலாவிடம்
பூப்போடச் சொன்ன
அவளது பேரப்பிள்ளைகளின்
விரல்களில் குடியேறிவிட்டன

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொல்வனம்!

செயற்கைப்பூச்சுகள்.
சில காலங்களுக்கு முன்
இருளில் பேயாய் வந்து
கதைகளைப் பரப்பிவைத்த
வேம்பும் முளைப்பதில்லை.
அவளது பிரதேசத்தில்
உயிர்வேலியில் உயிர் வளர்த்த
முசுமுசுக்கை அவரை சுரைக்கொடி
எதுவுமற்று
சூடுபறக்க நீண்டுகிடந்தது
காம்பவுண்ட் சுவர்.
எல்லாமும் உதறி எழத் துடித்தவளின்
முந்தானை இழுத்துக் கதை கேட்ட
எஞ்சியவர்களுக்காக
நகரவேயில்லையவள்
எல்லாவற்றுக்காகவும்...
நள்ளிரவில் ஒலிக்கும்
அவளது ஒப்பாரியும்
சின்ன கோயில்காடு தாண்டி
சாமந்திக்குளத்திற்குள்
விழுந்துருகுகிறது...
ஏதேனுமொரு மீன்கொத்திக்கு
அது இரையாகும்... அவளும்கூட!

- ஈஸ்வர சந்தானமூர்த்தி

நீள வாய்

பேருந்தின் இரைச்சல் ஓசையில்
பேச்சு வராத தமையனைப் பற்றி
ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாள்
ஒருத்தி
எனக்கென்னவோ அவளே
அவனுக்கும் சேர்த்துப்
பேசிக்கொண்டிருப்பதுபோல்
இருந்தது!

- செல்வராஜ் ஜெகதீசன்

 ஒற்றை இலையில்

ழுங்கற்ற மனிதர்களுக்கு
வரிசையைக் கற்றுக்கொடுக்கும்
எறும்புகள்
மறைந்து வாழும் இடத்தை
மனிதர்கள் அறிவதேயில்லை

 மழைக் காலத்தின் வருகையை
சின்னஞ்சிறிய எறும்புகள்
அரிசியைக் கடத்திச் செல்லும்
பேரழகில் அறிவிக்கின்றன

 பூமி எல்லோருக்குமான
பொதுவுடமை என்பதை
அறியாத மனிதர்கள்
எறும்புகளைத் திருடர்களைப் போல
இழிவாக நினைக்கிறார்கள்

சொல்வனம்!

விருந்தினரை உபசரிக்கத்
தேடும் வேளையில்
சர்க்கரை ஜாடிக்குள்
அழையா விருந்தாளியாக
அமர்ந்திருக்கின்றன

 எறும்பின் கண்களில்
உலகைப் பார்த்தால்
உலகம் இனிப்பாகிறது
எறும்பைப் போல வாழாத மனிதனின்
வாழ்க்கை கசப்பாகிறது

 சோம்பலை அறியாத எறும்புகள்
கட்டிவைத்த புற்று வீடுகளில்
கால் வைக்கும்போது
சுயமரியாதைக்கான யுத்தத்தை
பிரகடனப்படுத்துகின்றன

 தன் தலை மீது விழுந்த
ஒற்றை மழைத் துளி
நதியாய் மாறுகிறது

 நதியில் விழுந்து நகர்ந்தபோதும்
ஒற்றை இலையில்
கரை வந்து சேர்கிறது!

 - அமீர் அப்பாஸ்

சொல்வனம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism