அசெளகரியமாக நகர்ந்த இரவை முன்னமே அனுப்பிவிட்டு
தேநீர்க்கடையில் அன்றைய தினத்தின் முதல் ரொட்டியை
ராகிமால்ட்டில் நனைப்பவர்கள்
சாலையில் வாகனமொன்று
சேகரமான உலோகக் குப்பைத்தொட்டிகளைத் தூக்கி
தனக்குள் கவிழ்த்துவதைப் பார்க்கிறார்கள்
அதன்பொருட்டு
வாகனங்களின் தள்ளுமுள்ளு நிகழ்கிறது
சில தகவல்கோபுரங்கள் ஞாபகப்பிசகைச் சந்திக்கின்றன
இப்படியான காலத்தில்
விடுமுறை நாளொன்றின் முந்தைய இரவில் நிகழும்
கலவிச்சுவைப்புகளுக்குப் பின் உறக்கமிழந்த சிலர்
தளராடையில்
இறைச்சிக்கடை வரிசையில் நம்பிக்கையோடு நிற்க வேண்டியதுதான்
பாடசாலை உந்துகளின் எண்ணிக்கையோடு
மட்டமான உணவுகளைப் புசித்துக்கொண்டு
காதல்கொள்ள உடல்வேண்டித் தனித்து உழல்பவர்கள்
பெருக்கமடைகிற இங்கு

பொறுப்பற்றுத் திரியும் ஒருவன்
கால்சராயோடு கண்ணாடியில் முத்தமிட்டுத் திரியும் ஆண்களை
நாற்றமடிக்கும் வெளிச்சம்குன்றிய நீண்ட நடைபாதையை
பெண்கள்சூடும் மறைவுக்கச்சைகள் எதையும் அலங்கரிக்காத நைலான்கொடிகளை
காண நேர்கிறது
அப்போது
சேரிகளை ஒட்டிய கறுத்த நதிக்கரைப் பறவைகள்
இரை பொறுக்குவதைப் பார்த்தபடி உருளும்
மின்வண்டிகளில்
உள்ளங்கைகளை இசைத்தபடி சேமிக்கும் நாணயங்களை
திருநங்கைகள் ஆசீர்வதித்துக்கொண்டிருப்பார்கள்
சிறு உணவுப் பொதிகளோடு பணிக்குச் செல்பவர்கள்
பார்க்க நேரும்படி
தடித்த சுத்தியலோடு நீலநிற மனிதர்கள்
குறுக்குமறுக்காக நீண்டுசெல்லும் இருப்புப்பாதைகளை
அடித்து முடுக்குவார்கள்
தனது அத்தனை அம்சங்களோடும் இயங்கிக்கொண்டிருக்கும்
இந்தத் திணைக்களத்துக்கு
வடகிழக்குத் தேசங்களிலிருந்து உழைத்துக் கொடுக்கும்

மனிதத் தொகுதியொன்று இறங்குவது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான்
தோராயமாக
இருபத்தியேழு வசந்தகாலங்களுக்கு முகமன் தெரிவித்திருக்கும் அவனோ
குறுக்கமடைந்திருக்கும்
ஐரோப்பிய எச்சங்கள் படிந்த அசுத்தத் தெருவொன்றில் வசிக்கிற
தொழில்முறை வேசையனான நண்பனோடு
போதையூக்க வஸ்துகளையுண்டு
எதிர்ப்படுபவர்களை விசாரித்துக்கொண்டும் ஓலமிட்டும்
அதிர்வுகள் நிரம்பிய பாதத்தோடு தொடர்கிறான்
திறந்தவெளிக் கிடங்குகளில் கொட்டப்படும் மிச்சங்களில்
உயிர்வாழ்வதற்கானவற்றைப் பொறுக்கிக் கழிந்தபடி நீளும் மனிதர்களின்
அன்றாடத்தின் ஒரு நாளில்
சிலர் வாகனப் பாதைகளை மறிக்கும்போது
மதுநிலையக் கதவுகள் சாத்தப்பட்டிருக்க
மாமிசத் தண்டுக்கென அலைவுறும்

பசித்த மனம்கொண்டவளின் விருப்புகளுக்குத் தப்பி
தன்னுடலை ஒருவன் கட்டடத்தின் உயரத்திலிருந்து தரை தள்ளியிருந்தான்
நீங்கள் பார்க்க முடியும்
பொதுவில் விலகியிருக்கும் சிலர்
நெகிழிகளை மென்றபடி கால்நடைகள் திரிகிற அல்லிக்கேணிப் பகுதிகளில்
மலிவான பழங்கள் விற்கும் தள்ளுவண்டிக்காரர்களைக் கடந்தபடி
கவிஞர்களைப்போல பேச்சில் புகைத்துக்கொண்டும் தெரிகிறார்கள்
மினுங்கும் கறுத்த சருமங்களோடு
வனப்பின் பிரக்ஞையற்ற கடற்பெண்கள்
மீன்களை சந்தைக்குச் சுமந்துபோகும் பாங்கையும்
கொண்டிருக்கும் இந்நிலத்தில்
தற்காலிகத்தில் எழும்பி சலுகைகளை அறிவிக்கும்
சாலையோர வணிகக் கூடாரங்களை கவனிப்பது அலுப்பூட்டுகிறது
கூர்நோக்கு இல்லங்களின் சிறார்கள் தொலைந்தபடியிருப்பதை
ஊடகங்கள் அச்சத்தோடு பகரும் வேளையில்
அந்தி மணற்கரையில்
நவீனக் கலங்களை வேடிக்கை பார்த்தபடி நிற்கும்
கலங்கரைவிளக்கத்தின் கீழும் அவர்களைக் காணலாம்
கசகசக்க இணைகளோடு முன்விளையாட்டில் ஈடுபட்டிருப்பதை
அல்லது ஆற்றுப்படுத்துவதில்
இதுபோன்றதான காலத்தில்
புறக்கணித்துச் சென்றவளின் அக்குளில் நிலவும்
உப்புத்துயரன்
தன் கழிவிரக்கத்துக்குத் தோதாகப் புகைத்துக்கொண்டிருக்கிறான்
ஒப்பந்தம் மறுப்போருக்கு
தண்டனையற்ற புணர்ச்சி அவசியமென்பது
எவ்வகையில் நியாயமற்றது
இன்னுமந்த நள்ளிரவு
ஒளிரும் விடுதிகளின் ஃப்ளோரசன்ட் இசையோடு
இளமையர் குடித்துக் களிக்கும் அகாலத்தில்
நாணயங்களைக் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளும் வாகனப் பயணங்களிடையே
தொன்மச் சிலைகள் ஆங்காங்கே பக்கவாட்டில் நிறுவப்பட்டிருக்கும்
பகட்டான சாலைகளில் தென்படும்படி
தன் சகாக்களோடு கூச்சலிட்டு
மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள் இரவுப் பெண்கள்

டகீலா மற்றும் வோட்காவின் வேறுபட்ட குணாதிசயங்கள்
தனித்திருக்கும் மத்திய வயது ஆண்களின் படுக்கையறைப் பேச்சுகள்
என்பதான நீட்சியில்
கவிதைகளை நடைபாதை வெளிச்சங்களில் சத்தமாக வாசிக்கும்போது
சமயங்களில்
இடைமறித்து எச்சரிப்பவர்களைத் தாக்கிவிட்டுத் தப்பி
திறந்துகிடக்கும் அவ்வேளையின் தெருவில்
பெரும்பாலும் தனியே நொண்டித்திரிகிற மட்டக்குதிரைபோல
அங்கு வானொலி கேட்கும் சிலரோடு சேர்ந்து ஒருவன் உறங்கியும்விடுகிறான்
செக்குமாடுகளெனக் கண்காணிப்புகள் சுழலும் பகுதியின்
பாலங்களுக்குக் கீழ் சிறு தடுப்புகளில் வசிப்பவர்கள்
தங்களைச் சாய்த்திருக்க

அதையொட்டிய உயர்ந்த தேவாலயங்களுக்கருகே
நிச்சலனத்தில் வாழும் பெரும் கல்லறைத் தோட்டம்
சில எண்களுடன் நிற்கும் புதிய வருகையாளருக்கு வாயைத் திறக்கிறது
இப்படியான நடப்புகளுக்கிடையே
ஒரு முறைமையை பொதுவில் வலியுறுத்துவது
எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது
அவர்கள் வெறுமனே
வேடிக்கை பார்த்தபடி கடந்துகொண்டிருப்பவர்கள் மட்டும்தானா
நிலவறைகளில் கூடும் சந்தைகளின் ஊதாரிக் குடிகாரர்களோடு
மெல்லிய வெளிச்சத்தில் குற்றங்களைப் பேசியபடி
அங்கு நிகழ்பவர்களாகவும்
தனித்துவாழ்வோரின்
தன்னின்ப திளைப்புத் தருணங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டும்
தொழிற்சாலைக் கழிவோடையருகே பின் சாமத்தின் மறைப்பில்
இரந்துவாழும் அந்தகனோடு
கன்றிச் சிவந்துகொண்டிருப்பவளின் முனகல்களைக் கேட்டுக் கடந்தபடியும்
வசிப்பிடமற்று உறங்குபவர்களுக்கிடையே விழித்த
குழந்தையில் துலங்கும் தனிமையின் கேவலில் உதிர்கிற
கண்ணீர்த்துளிகள் என்பதோடு
இருப்பின் பிளந்த உடல்களாக
இத்திணையின் வரைபடரேகைகள் நீளும் அத்தனை திசைகளிலும்
அலைவது யார் நானா.