Published:Updated:

ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி

ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி

ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி

ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி

ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி

Published:Updated:
ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி

‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என்ற ஏக்கத்தோடு மறைந்து போனார் வள்ளலார். ஆனால், அவர் மூட்டிய அறிவு நெருப்பு தமிழ்ச் சமூகத்தில் இன்னமும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

‘நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே’
- எனவும்

‘சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி’
- எனவும் ஒலித்த வள்ளலாரின் மரணமில்லாப் பெருவாழ்வு தொடர்ந்துகொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ‘வள்ளலார் மூட்டிய புரட்சி’ என்ற புத்தகத்தை பழ.நெடுமாறன் எழுதி இருக்கிறார். வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் 12 தொகுதிகளாக்கி வெளியிட்ட  ஆ.பாலகிருஷ்ணப் பிள்ளையின் பேரனான கா.தமிழ் வேங்கை இந்தப் புத்தகத்தை வெளியிட்டு இருப்பதன் மூலமாக அணையா நெருப்புக்குக் கூடுதல் நெய் வார்க்கப்பட்டுள்ளது.

ஜூ.வி நூலகம் - வள்ளலார் மூட்டிய புரட்சி

வள்ளலார் ஆன்மிக குரு அல்ல, அறத்தின் குரு. அறத்தின் குரல். அதனால்தான் அவரது பாடல்களில் ஆண்டவனின் மீதான பக்தியைவிட அப்பாவி மக்களின் அறியாமை மீதான கோபம் அதிகம் இருக்கும். மக்களிடம் புரையோடிப் போயிருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் எழுப்பிய அறைகூவல்கள்தாம் ஆறாம் திருமுறையாக விரிந்தன. ‘இருளை நீக்க வந்த ஞாயிறு’ என்று வள்ளலாரை திரு.வி.க சொன்னது இதனால்தான். நெடுமாறனை இப்படி ஒரு புத்தகம் எழுதத் தூண்டியதும் இதுதான். கடவுள், மதம், சாதி, பெண்ணுரிமை, தமிழ், மடங்கள் ஆகிய அனைத்திலும் வள்ளலார் செய்த புரட்சிகள், பாடல் குறிப்புகளுடனும் வரலாற்றுடனும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.

‘தமிழகத்தில் வள்ளலாருக்கு முன்பிருந்த சமய ஞானிகள் மடங்களையே நிறுவினார்கள். ஆனால், காவியாடை தரிக்காமல் வெண்மை நிற ஆடை தரித்த வள்ளலார், மடம் நிறுவாமல் சங்கம் நிறுவினார். மடம் என்பது துறவிகளுக்கு மட்டுமே உரியது. ஆண்களுக்கு மட்டுமே அங்கு இடமுண்டு. ஆனால், சங்கம் என்பது ஆடவருக்கும் பெண்டிருக்கும் உரியது. பக்குவம் பெற்றவர்கள், பெறாதவர்கள் ஆகிய அனைவர்க்கும் உரியது. அனைவர்க்கும் இடம் தந்து அவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான் மடம் என்று பெயரிடாமல் சங்கம் என்று வள்ளலார் பெயரிட்டார்’ என்பது போன்ற நுட்பமான செய்திகள் புத்தகம் முழுக்க உள்ளன.

‘சமூக சீர்திருத்தத்தின் தந்தை’ என்று வள்ளலாரை உருவகப்படுத்தினார் பாரதியார். வள்ளலாரின் வழித்தடத்தில் பயணித்தவர்களாக சட்டம்பி சுவாமிகள், நாராயண குரு, தந்தை பெரியார் ஆகியோரைக் குறிப்பிடுகிறார் நெடுமாறன். இந்த வழித்தடத்தினர் தொடர வேண்டும்.

இன்று வள்ளலார் நெறி திரிக்கப்படுகிறது; மறைக்கப்படுகிறது. எனவே, இந்தப் புத்தகத்தின் தேவை கூடுதலாகவே இருக்கிறது.

- புத்தகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வள்ளலார் மூட்டிய புரட்சி
- பழ.நெடுமாறன்

ஐந்திணை வெளியீட்டகம்,
4.ஏ/29, முகமதியர் தெரு, மந்தக்கரை, விழுப்புரம்- 605602

விலை: ரூ.150