Published:Updated:

சுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள்!

சுனில் கிருஷ்ணன் எழுதிய 'அம்புப் படுக்கை'எனும் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகடமியின் 'யுவபுரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிருங்கை சேதுபதியின் 'சிறகு முளைத்த யானை'கவிதைத் தொகுப்புக்கு 'பால சாகித்ய' விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமியின் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் சந்திரசேகர் கம்பரின் தலைமையில் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. அதன் முடிவில் 2018-ம் ஆண்டுக்கான பால சாகித்ய, யுவ புரஸ்கார் விருதுகள் முடிவுசெய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டன. 

பால சாகித்ய விருது அறிவிக்கப்படும் ஆண்டுக்கு முன்னர் ஐந்து ஆண்டுகளுக்குள், குறிப்பிட்ட எழுத்தாளர் முதல்புத்தகத்தை வெளியிட்டிருக்க வேண்டும் அல்லது அவரின் படைப்பாக்கக் காலத்தின் தொடக்க பத்தாண்டுகளில், குழந்தை இலக்கியத்துக்காக அவர் ஆற்றிய பணிக்காக வழங்கப்படும். ரூ.50,000மும் கொண்ட இவ்விருது, 23 மொழிகளில் எழுதுவோருக்காக வழங்கப்படுகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டோக்ரி மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும். வரும் நவம்பர் 14-ம் தேதி நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். நடப்பு ஆண்டு விருதுத் தேர்வுக் குழுவில், மகுடீசுவரன், மகாலிங்கம், பேரா. ஆர். கோதண்டராமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சாகித்ய அகாடமியின் வருடாந்திர யுவ புரஸ்கார் விருது, 22 மொழிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கவிதைத் தொகுப்புகளே அதிக விருதுகளைப் பிடித்துள்ளன. 10 கவிதைத் தொகுப்புகள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள் மற்றும் ஒரு நாடகத்துக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 

போடோ மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும். டோக்ரி மொழிக்கான விருது இந்த ஆண்டு இல்லை என்று சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தேதியன்று 35 வயதும், அதற்குக் குறைவான வயதும் கொண்டவர்கள் எழுதிய புத்தகங்களுக்காக இவ்விருது அளிக்கப்படுகிறது. ரூ.50,000மும் கொண்ட இவ்விருது, பின்னர் அறிவிக்கப்படும் தனி நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு யுவபுரஸ்கார் தமிழ் மொழி விருதுத் தேர்வில், நாஞ்சில் நாடன், ராமகுருநாதன், ரவிசுப்ரமணியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism