வெளியேறிவிடுமாறு நிந்திக்கையில்
மக்குவின் கண்களில்
பேதைமை ஸ்தம்பித்தது.

அதனுடைய முட்டாள்தனங்களைப்
பட்டியலிடுகையில்
சிறிய புதிய பொம்மைகளைக்
காண்பதான பரவசம் அதன் முகத்தில்.

மக்குவினாலான மன உளைச்சலை
மோசமான வசவுகளாய் உதிர்க்கையில்
மக்குவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டது.

இறுதியிலும் இறுதியாக
அதன் முகத்திலறையும் விதம்
கதவை மூடிவிட்ட பின்
வெகுநேரம் வரை மக்குவின் நிழல்
பூக்களற்றத் தொட்டிச்செடியிடம்
தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தது.

வெளியேறிவிடுமாறு நிந்திக்கையில்
மக்குவின் கண்களில்
பேதைமை ஸ்தம்பித்தது.

அதனுடைய முட்டாள்தனங்களைப்
பட்டியலிடுகையில்
சிறிய புதிய பொம்மைகளைக்
காண்பதான பரவசம் அதன் முகத்தில்.

மக்குவினாலான மன உளைச்சலை
மோசமான வசவுகளாய் உதிர்க்கையில்
மக்குவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டது.

இறுதியிலும் இறுதியாக
அதன் முகத்திலறையும் விதம்
கதவை மூடிவிட்ட பின்
வெகுநேரம் வரை மக்குவின் நிழல்
பூக்களற்றத் தொட்டிச்செடியிடம்
தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தது.