நுரைத்தப் பழங்கஞ்சியாய்ப்
புளிப்பேறிய வயோதிகத்தின் இரவு
ஒரு பாராங்கல்லாய் மார்மீது படுத்துறங்குகிறது
எப்படி இறங்கச் சொல்ல...
எப்படி இறக்கிவிட?

பாதரசம்போன கண்ணாடி
எனது முகத்தைக் காட்டி இன்றோடு
இருபது வருடங்கள் ஆகிவிட்டன மகளே.
கறையான் அரித்த
நமது குடும்பப் புகைப்படத்திலும்
நீ பார்த்திருக்கக்கூடும் துருவேறிய
எனது மிருகக் கண்களை மட்டும்.

`இடுப்புல ஆறு மாசம்
வயித்துல மூணு மாசம்
பப்பாளி, எள்ளு, அன்னாசிக்கு
தப்பித் தளச்சவடி நீ' என்ற
கதையைக் கேட்கும்போது
என்னென்ன நினைத்திருப்பாய் மகளே?

அப்படி என் வயிற்றைப் பார்க்காதே
மயானத்துப் புழுக்கள் முண்டுகின்றன.
அப்படி என் மார்பைப் பார்க்காதே
சீழ் வடிகிறது.

நான் ஒரு கொலையை இறக்கிவைத்துவிட்டேன்
நீ உன் பிணத்தைச் சுமக்கிறாய்.

மாசற்ற உன் கண்கள்கொண்டு
அப்படி எனது கண்களைப் பார்க்காதே மகளே
அதற்குப் பதில் மரணத்தை ஒரு மிடறாக்கிப்
பருகக் கொடு.

நுரைத்தப் பழங்கஞ்சியாய்ப்
புளிப்பேறிய வயோதிகத்தின் இரவு
ஒரு பாராங்கல்லாய் மார்மீது படுத்துறங்குகிறது
எப்படி இறங்கச் சொல்ல...
எப்படி இறக்கிவிட?

பாதரசம்போன கண்ணாடி
எனது முகத்தைக் காட்டி இன்றோடு
இருபது வருடங்கள் ஆகிவிட்டன மகளே.
கறையான் அரித்த
நமது குடும்பப் புகைப்படத்திலும்
நீ பார்த்திருக்கக்கூடும் துருவேறிய
எனது மிருகக் கண்களை மட்டும்.

`இடுப்புல ஆறு மாசம்
வயித்துல மூணு மாசம்
பப்பாளி, எள்ளு, அன்னாசிக்கு
தப்பித் தளச்சவடி நீ' என்ற
கதையைக் கேட்கும்போது
என்னென்ன நினைத்திருப்பாய் மகளே?

அப்படி என் வயிற்றைப் பார்க்காதே
மயானத்துப் புழுக்கள் முண்டுகின்றன.
அப்படி என் மார்பைப் பார்க்காதே
சீழ் வடிகிறது.

நான் ஒரு கொலையை இறக்கிவைத்துவிட்டேன்
நீ உன் பிணத்தைச் சுமக்கிறாய்.

மாசற்ற உன் கண்கள்கொண்டு
அப்படி எனது கண்களைப் பார்க்காதே மகளே
அதற்குப் பதில் மரணத்தை ஒரு மிடறாக்கிப்
பருகக் கொடு.