FA பக்கங்கள்
Published:Updated:

க்ரைம் டைம்

க்ரைம் டைம்
பிரீமியம் ஸ்டோரி
News
க்ரைம் டைம்

கிங் விஸ்வா - சதீஷ்

க்ரைம் டைம்
க்ரைம் டைம்
க்ரைம் டைம்
க்ரைம் டைம்
க்ரைம் டைம்
க்ரைம் டைம்

போட்டி எண் : 2   விடைகள்

க்ரைம் டைம்

க்ளூ 1: முன்னாள் மந்திரி, முதலைமச்சரைப் பணயக் கைதியாக்கி, அவரது காரில் டிரைவர் வேடத்தில் தப்பிக்க நினைச்ச அஜய் பொன்னையா, தன் முகத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, டிரைவர் ஸீட்டின் முன் பக்க கண்ணாடியில் கட்சி சின்னத்தின் VOTE FOR   PARISAL நோட்டீஸை ஒட்டியிருந்தார். இது இன்ஸ்பெக்டர் தேவ்-க்கு சந்தேகத்தை உண்டாக்கியது.

க்ரைம் டைம்

க்ளூ 2: ’வண்டியை செக் செய்யணும். டிக்கியைத் திறக்கச் சொல்லுங்க’ என்றதும் அமைச்சரே இறங்கித் திறக்கிறார். எந்த ஒரு டிரைவரும் தன்னுடைய முதலாளி இறங்கி டிக்கியைத் திறக்கும் வரை பேசாமல் இருக்க மாட்டார். டிரைவரே இறங்கித் திறப்பார். அந்த டிரைவர் இறங்காதது சந்தேகத்தை வலுப்படுத்தியது.

க்ரைம் டைம்

க்ளூ 3: சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள டிரைவரிடம் ‘2016 மாடல் அம்பாஸடரே வந்தாச்சு. இன்னும் பழைய மாடலே வெச்சிருக்கீங்களே. ராசியோ’ என, தேவ் கேட்டார். அம்பாஸடர் கார் கம்பெனி 2014-ம் ஆண்டிலே மூடப்பட்டுவிட்டது. உண்மையான டிரைவருக்கு இது தெரிந்திருக்கும். ஆனா, டிரைவரா நடிச்ச பொன்னையா, டென்ஷன்ல இதை யோசிக்கலை.

க்ரைம் டைம்

க்ளூ 4: டோல் கேட் பகுதியில் வண்டியை விட்டு இறங்கி, தப்பித்துச் செல்ல தன்னுடைய நண்பருக்காகக் காத்திருந்த பொன்னையா, தான் அணிந்திருந்த INSIDE OUT மாடல் கோட்டைத் திருப்பி அணிந்துகொண்டான். தொப்பியையும் கழற்றிவிட்டான். ஆனால், பர்ஸை எடுக்க கோட் உள்ளே கையை விட்டபோது, அது காரில் டிரைவராக வந்தவன் அணிந்திருந்தது என்பதை தேவ் தெரிந்துகொண்டார். பொன்னையா மாட்டிக்கொண்டான்.

போட்டியில் கலந்து கொண்டு சரியான விடையுடன் சிறந்த விமர்சனமும் எழுதி `500 மதிப்புள்ள பரிசை வெல்லும் 20 துப்பறியும் கில்லாடிகள் இவர்கள்தான்!

1)  கே.கே.தரணி, பல்லடம்.

2)  த.சித்ரா, ஏர்வாடி.

3)  தி.பவழன், ஜோலார் பேட்டை.

4)  இ.இஷா, திருநெல்வேலி.

5) எம்.புவனா, சேலம்-5.

6) க.சூரியா, கல்லுப்பாளையம்.

7) கே.ஶ்ரீதர், டி.வாடிப்பட்டி.

8) டி.மணிகண்டன், சென்னை-81.

9) எஸ்.சந்தோஷ், மன்னார்குடி.

10) ஜா.ஜாவீத் அஸ்ரஃப், தஞ்சாவூர்-1.

11) பி.தேவா, சத்திரப்பட்டி.

12) ச.மேட்டிஸ் ரிதிக், கருமத்தம்பட்டி.

13) க.பூமிகா, மதியநல்லூர்.

14) ப.சக்தி பிரியா, சென்னை-97.

15) ஏ.ராகுல், கோபிசெட்டிப்பாளையம்.

16) அ.ஞானசேகர், மதுரை-18.

17) எஸ்.சௌமினி, ஜோலார்பேட்டை.

18) டி.ராதாகிருஷ்ணன், கருமத்தம்பட்டி.

19) பா.சூர்யகுமார், வந்தவாசி.

20) மா.சரண்யா, சேலம்.

க்ரைம் டைம்

ந்தப் படக்கதையில் இன்ஸ்பெக்டர் தேவ், குற்றவாளியை எப்படிக் கண்டுபிடித்தார் என்று சொல்ல வேண்டும். அதற்காக நான்கு க்ளூக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த க்ளூக்கள் இடம்பெற்றுள்ள இடங்களில் சின்னம் இருக்கும். அந்தப் படங்களை கவனமாகப் பார்த்து யோசியுங்கள். நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் விவாதியுங்கள். நான்கு க்ளூக்களுக்கான விடைகளையும் சரியாகக் கண்டுபிடித்து ஒரு வெள்ளைத்தாளில் எழுதி, அந்தத் தாளிலேயே இங்குள்ள படத்தைக் கத்தரித்து ஒட்டுங்கள். அத்துடன், இந்த இதழ் சுட்டி விகடன் பற்றி 30 வார்த்தைகளுக்குள் விமர்சனம் எழுதி அனுப்புங்கள்.

க்ரைம் டைம்

சரியான விடைகள் மற்றும் சிறந்த விமர்சனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 20 பேருக்கு தலா `500 மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 28.02.2017
அனுப்ப வேண்டிய முகவரி...
துப்பறியும் போட்டி, சுட்டி விகடன்,  757, அண்ணா சாலை,  சென்னை - 600 002

ஹாய் சுட்டி ஃப்ரெண்ட்ஸ்...


31.01.17 சுட்டி விகடனில் வெளியான ‘க்ரைம் டைம் - காணாமல் போன கோடீஸ்வரன்’ போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பேர், சரியான விடைகளை எழுதி அனுப்பி, ‘நாங்களும் துப்பறியும் புலிகள்தான்’ என நிரூபித்துவிட்டார்கள். மிகவும் மகிழ்ச்சி. சரியான விடையுடன், சிறந்த விமர்சனங்களையும் எழுதியவர்களில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா `500 மதிப்புள்ள பரிசு பெறுகிறார்கள்.

சரியான விடைகள் மற்றும் பரிசு பெற்றவர்களின் விவரம் எதிர்ப் பக்கத்தில். விரைவில் அவர்களுக்குப் பரிசுப் பொருள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த இதழ் போட்டியில் பங்குபெறுங்கள்.துப்பறிந்து பரிசு பெறுங்கள்.

ஆல் தி பெஸ்ட்!

க்ரைம் டைம்

சென்ற (15.02.2017) இதழில் வெளியான ‘க்ரைம் டைம்’ மெகா போட்டி எண்: 3-ன் விடையும், பரிசு பெறுவோர் விவரமும் அடுத்த இதழில் இடம்பெறும்.