பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் சந்திப்போம்...

பூமலரும் காடுகளின்

குளிர்வான மணல்மேடுகளில்

மீண்டும் நாம் சந்திப்போம்

மீண்டும் சந்திப்போம்...

பழைய நாட்களின்

ஈரம் முழுவதையும்

திருப்ப முடியாவிடினும்

ஒவ்வொரு புதுத் தருணத்திலும்

உயிர் உருகி நின்றதை

நினைவுகொள்வோம்...

அன்றெனுக்குப் பரிசாய்

தந்த கடல் பாசியை

நட்சத்திரக் கனவுகளை

ஆழ்ந்த அந்நேரத்தின்

அமைதியை இழந்துவிடவில்லை

இளவேனிற் காலத்தின்

ஏதேனும் இடைவெளியில்

மீண்டும் நாம் சந்திப்போம்

நிச்சயமாக...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு