பிரீமியம் ஸ்டோரி
விலகுதல் - சக்தி ஜோதி

சமீப நாட்களாக
அவளின் அதிகாலைகளை
சிட்டுக்குருவிகள்
திறந்துவைக்கின்றன

தானியங்களைத் தூவி
அவைகளுக்காகக் காத்திருக்கையில்
நினைவிலசைகிறது
விலகிச்சென்ற உறவுகளும்

விலகுதல் - சக்தி ஜோதி


மீண்டெழுந்த கணங்களும்

பிரசன்னமாகும் முகங்கள்
பிரியங்கள்
அதன் பொருட்டான வாக்குறுதிகள்
அவற்றை பின்பற்ற இயலாத சூழல்கள்
எப்பக்கமும் அலையடித்துக்கொண்டிருக்க
தரையிறங்கியிருக்கும் அச்சிறு பறவைகள்

இறையெடுத்த பின்
எந்த கணத்தில் நிலம்விட்டு
வானம் ஏகும் என்பதை
ஒருபோதும் கணிக்க இயலுவதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு