Published:Updated:

'விமர்சனங்களை ஏற்கிறேன்!' - ’யுவபுரஸ்கார்’ விருது வென்ற சுனில் கிருஷ்ணன்

'விமர்சனங்களை ஏற்கிறேன்!' - ’யுவபுரஸ்கார்’ விருது வென்ற சுனில் கிருஷ்ணன்

'விமர்சனங்களை ஏற்கிறேன்!' - ’யுவபுரஸ்கார்’ விருது வென்ற சுனில் கிருஷ்ணன்

'விமர்சனங்களை ஏற்கிறேன்!' - ’யுவபுரஸ்கார்’ விருது வென்ற சுனில் கிருஷ்ணன்

'விமர்சனங்களை ஏற்கிறேன்!' - ’யுவபுரஸ்கார்’ விருது வென்ற சுனில் கிருஷ்ணன்

Published:Updated:
'விமர்சனங்களை ஏற்கிறேன்!' - ’யுவபுரஸ்கார்’ விருது வென்ற சுனில் கிருஷ்ணன்

டைப்பாளனுக்கு அங்கீகாரம்தான் மிக முக்கியமான ஒன்று. அந்த அங்கீகாரம்தான் தான் பயணிக்கும் பாதையைத் தீர்மானிக்கவும் தன்

படைப்பின் மீதான நம்பிக்கையையும் கொடுத்து அடுத்தகட்ட நகர்வுக்குப் பெரிய உந்துதலாகவும் இருக்கும். இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி வழங்கப்படும் ‘யுவ புரஸ்கார்’ விருது இந்த ஆண்டு சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் வலிகளைப் பதிவு செய்யும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு 'யாவரும் பதிப்பகம்' சார்பாக 2017 டிசம்பரில் வெளிவந்துள்ளது. வெளிவந்தது முதல் பலராலும் பாராட்டப் பெற்றது இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு, இந்த விருது மேலும் ஒரு அங்கீகாரம். வாழ்த்துகளால் நிரம்பிய அவருடைய பொழுதில் விருது பற்றிய உரையாடலுக்காகவும் சிறு பொழுதை ஒதிக்கயிருந்தார். அந்த உரையாடலில் இருந்து...

“உங்களைப் பற்றியும் எழுத்துக்கு வந்தச் சூழல் பற்றியும் சொல்லுங்கள்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நான் அடிப்படையில் ஓர் ஆயுர்வேத மருத்துவர். ஆரம்பகாலப் படிப்பு எல்லாம் காரைக்குடியில்தான். சொந்த ஊர் புதுக்கோட்டைப் பக்கத்திலிருக்கும் அரிமளம் என்ற கிராமம். கல்லூரிப் படிப்புக்குச் சென்னை சென்றேன். படிப்பை முடித்ததும் 2009-லிருந்து இப்போதுவரை காரைக்குடியில்தான் இருக்கிறேன். ஆரம்ப காலத்தில் தினமணி, சிறுவர் மலர், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களை மட்டுமே வாசித்த எனக்குக் கல்லூரிக்கு வந்தபின் ஆங்கில நூல்களுடைய அறிமுகம் கிடைத்தது. அதன்பின் ஆன்மீக நூல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். எந்த அளவுக்குப் புரிந்தது என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஓஷோ தொடங்கி பலருடைய நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனந்த விகடனில் வெளிவந்த ‘தொட்டித் திலகம்’ என்ற கட்டுரைமூலம் ஜெயமோகன் அறிமுகமானார். அதன்பின் அவருடைய எல்லா நூல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். அன்னா ஹசாரே இயக்கம் பெருசா வளர்ந்து வந்த நேரம் அதில் ஆர்வம் வந்து அதற்கு ஆதரவாகத் தரவுகளைச் சேகரிக்கிறது, கட்டுரை எழுதுவது, பேசுவது என்றிருந்தேன். அதன் தீவிரத் தன்மை குறைந்ததும் அதைப் பற்றிப் பேசவும் எழுதவும் என்ன இருக்கு என்று அதை விட்டுவிட்டேன் அப்போதான் அவரைவிடப் பல மடங்கு வீரியமானவரா இருக்கும் காந்தியைப் படிக்க ஆரம்பித்தேன். காந்தி பற்றிக் கட்டுரைகளைத் தொக்குக்குறது, அவருடைய கட்டுரைகளை மொழிபெயர்ப்பது என்று என்னுடைய வேலைகளை மாத்திக்கிட்டேன். அப்போதான் 2013-ல் ஜெயமோகனோட தளத்தில் ‘புதியவர்கள் கதை அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் கதைகள், தளத்தில் பதிவேற்றப்படும்’ என்று ஒரு போட்டி அறிவித்தார். அப்படித்தான் என்னுடைய முதல் கதையான ‘வாசு தேவன்’ வெளியாகியது. ஓர் உண்மையான அனுபவத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினேன். அம்புப் படுக்கையோட முதல் சிறுகதையும் இதுதான். இந்தக் கதை பரவலாகக் கவனிக்கப்பட்டதோடு நற்றிணையின் ‘புதிய வாசல்’ என்ற கதைத் தொகுப்பில் 12 கதைகளுள் ஒன்றாகவும் இடம்பெற்றது. எனக்கு ஒரு காந்திய அடையாளம் இதற்குள்ள உருவாகிடுச்சு. அது இல்லாமல் வேறொரு அடையாளம் வேண்டும் என்று ‘நரோபா’ என்ற புனைப்பெயரில் இணைய இதழ்களில் கதைகள் எழுத ஆரம்பித்தேன். யாவரும் பதிப்பகத்திலிருந்து என்னுடைய கதைகளைப் படிச்சுட்டு ஜீவ கரிகாலன் இந்தக் கதைகளை 2017-ல் பதிப்பித்தார். வெளியானதிலிருந்தே இந்தத் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.”

“இந்த விருதின்மூலம் புனைவு எழுத்தாளரா அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா?”

“தன்னுடைய அடையாளத்தை ஒரு படைப்பாளன் ஒரே ஒரு கதையின் மூலமே வெளிப்படுத்திவிட முடியும் என்று நினைக்கிறேன். அதுக்கு ஒரு தொகுப்பெல்லாம் தேவையில்லை. எழுத்தாளர் பாதசாரி நிறைய கதைகள் எழுதியிருந்தாலும் ‘காசி’ என்ற ஒரு சிறுகதையின் மூலமே புனைவு எழுத்தாளராக அறியப்பட்டார். அந்தக் கதையின் வழியாகவே இன்றுவரை புனைவு எழுத்தாளராக இருக்கின்றார். இதற்கு அப்புறம் நான் எப்படி எழுதுவேன் என்று தெரியலை. ஆனால், இந்த விருது மூலமா புனைவு எழுத்தாளராக என்மீது நானே நம்பிக்கையை வளத்துக்கிறதுக்கு இது ஒரு தொடக்காம இருக்கும் என்று நினைக்கிறேன்.”

“விமர்சனங்கள் நேர்மறையாக இருக்கும்போது ஏற்றுக்கொள்பவர்கள் எதிர்மறையாக இருக்கும்போது ஏன் ஏற்றுக்கொள்வதில்லையே?”

“என்னைப் பொறுத்தவரை விமர்சனம் என்பது ஒரு படைப்பாளனைக் குடலை உருவுவது போன்ற செயல் இல்லை. விமர்சகன் என்பவனும் ஒரு சக படைப்பாளி. படைப்பின்மீது விமர்சகனுக்கும் சம அக்கறை இருக்கின்றது. வெறுமனே ஒரு படைப்பைக் குறை சொல்லிவிடக் கூடாது. அப்படிச் சொல்ல வேண்டும் என்றாலும் தர்க்கபூர்வமாகக் காரண காரிய முறைகளைத் தெளிவாக விளக்க வேண்டும். ஓர் எழுத்தாளன் எழுதுகிறான் என்பது சமூகத்தில் அனைவரும் செய்துகொண்டிருக்கும் வேலையைவிட அவன் வேறொன்று செய்கிறான் என்பதாகத்தான் பார்க்கப்பட வேண்டும். ஏதோவொரு வகையில் சமூக அக்கறை இருப்பதாக நினைப்பதால்தான் அவன் தான் அனுபவப்பட்ட ஒன்றை எழுத்தில் கொண்டுவரவும் முடிவு செய்கிறான். அதில் மொழி, வாழ்க்கை முறை, அதைப் பார்க்கும் கோணம் எனச் சிலவற்றில் குறை இருக்கலாம். ஆனால், அவனிடம் சொல்வதற்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதற்கான அங்கீகாரம் கொடுக்க வேண்டும். விமர்சகனுடைய பொறுப்பு என்னவென்றால் எங்கெல்லாம் அவன் வெளிப்பட வேண்டும் என்பதையும் அதில் என்னவெல்லாம் தவறுகளைச் செய்திருக்கிறான் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.  தமிழ் இலக்கியத்தில் இருக்கும் பல மரபுகளில் அந்த எழுத்தாளன் என்ன மரபின் அடிப்படையில் வருகிறான் என எல்லாவற்றையும் பார்த்து அவன் எங்கே பொருத்தமாக வருகிறான், எங்கே விலகிச் செல்கிறான் என்பதைச் சொல்ல வேண்டும். அவ்வாறு அமையும் விமர்சனத்தை எல்லாப் படைப்பாளனும் நிச்சயம் ஏற்றுக்கொள்வான்.”

“கோட்பாடு, அமைப்பு சார்ந்து இயங்கிய எழுத்தாளர்கள், தனிப்பட்ட எழுத்தாளர்கள் சார்ந்து இயங்குகிறார்களே?“

“கருத்தியல் சார்ந்து எழுதுவதும், ஓர் எழுத்தாளரைப் பின்பற்றுவதும் ஒன்றில்லை. கருத்தியல் என்பதற்கு ஒரு வரையறை வைத்துக்கொண்டு அதைப் பின்பற்றுகிறீர்கள். ஆனால் ஓர் எழுத்தாளனின் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்து இயங்குதல் என்பது அவருடைய கருத்தைச் சார்ந்து அப்படியே இயங்குதல் என்பதில்லை. நான் ஜெயமோகன் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவன்தான். ஆனால், எனக்குக் காந்தியின் தாக்கம் இருக்கும். ஜெயமோகனைப் பின்பற்றும் மற்றவர்களைப் பார்த்தால் அவர்கள் வேறு சிந்தனையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்களைப் பின்பற்றுவது என்பது அவர்கள் கொள்கையைப் பின்பற்றுவது என்பதோ அதே அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருத்தல் என்பதோ இல்லை. அவர்களின் எழுத்தின் தீவிரத் தன்மையை கவனிப்பது மட்டுமே. அதில் தவறேதும் இல்லை.”

“படைப்புகளைப் புரிந்துகொள்வதற்குக் கோட்பாடுகள் முக்கியமா?“

“ஓர் எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின் வழியில்தான் படைப்பை உருவாக்குகிறான் என்றால் அது சரியாக அமையாது. படைப்பின் நோக்கமே அழகியல்தான். அதுதான் வாசகனைப் படைப்பின் பக்கம் ஈர்க்கிறது. படைப்பு அதன் தன்மைக்கு ஏற்ற கோட்பாட்டை அதுவே உருவாக்கிக் கொள்ளும். ஒரு படைப்பு நாம் வைத்திருக்கும் கோட்பாட்டிற்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக ரசனையைப் புறந்தள்ளிவிட முடியாது. அதே நேரத்தில் கோட்பாடுகளின் அறிமுகம் என்பது ஒரு படைப்பை வகைப்படுத்தவும் மேலதிகமாக விளங்கிக்கொள்ளவும் பயன்படுகிறது. எனவே அது தொடர்பாக அறிந்திருப்பதும் அவசிமானதே.”

 ‘அம்புப் படுக்கை’க்கு வந்த விமர்சனங்கள் என்ன?”

“இந்தக் கதைத் தொகுப்பில் '2016' என்ற சிறுகதை ஒன்று இருக்கிறது. அது ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 என்ற நாவலை ஒட்டி வந்த கதை. அந்தக் கதையைப் பற்றிக் கூறும்போது ‘ஒரு கதையைப் புரிந்துகொள்வதற்கு இன்னொரு கதையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று ஒரு தேவையை உருவாக்கியிருக்கீங்க’ என்று சொன்னார்கள். அது எந்த அளவு ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரியவில்லை. அந்த நாவல் பற்றித் தெரிந்திருந்தால் கூடுதலாகப் புரிதல் ஏற்படுமே தவிர அந்த நாவலைப் பற்றித் தெரியவில்லை என்றாலும் அந்தக் கதையை வாசிக்க முடியும் என்றுதான் நினைக்கிறேன். நிறைய கதைகளில் புனைவுத் தன்மை குறைவா இருக்கிறதாவும் ஒரு விமர்சனம் வந்தது. அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விமர்சனம்தான். புதிதாக எழுதுபவர்களின் கதைத் தொகுப்பைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வருகிறேன். அவற்றில் சரிபாதிக் கதைகளே நன்றாக இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான்.”

“யாரெல்லாம் கவனிக்கத்தக்க சமகால எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்?”

“‘டொரினா’ எழுதிய கார்த்திக் பாலசுப்ரமணியன், ‘இருமுனை’ எழுதிய தூயன், ‘பச்சை நரம்புகள்’ எழுதிய அனோஜன் பாலகிருஷ்ணன், ‘ஒளிர் நிழல்’ எழுதிய சுரேஷ் பிரதீப், ‘பேட்டை’ எழுதிய தமிழ்ப்பிரபா போன்ற சமகால எழுத்தாளர்களின் படைப்புகளில் கையாளப்பட்ட மொழி, வாழ்வியல் எல்லாம் வித்தியாசமானவையாக இருக்கின்றன. என்னைப் பிரமிக்கச் செய்கின்றன. ஒரு தேக்கநிலைக்குப்பின் எடுக்கும் உடைப்புபோல இவர்களேல்லாம் தற்போது எழுத வந்துள்ளது தமிழ்ச்சூழல் மீண்டும் ஆரோக்கியமான இலக்கியச் சூழலுக்குச் செல்வதையே காட்டுகிறது.” 

“உங்க விருது தொடர்பா ஒரு சலசலப்பு வந்ததே அது தொடர்பான உங்க கருத்தைச் சொல்ல முடியுமா?”

“விருதுத் தேர்வை மேலும் வெளிப்படையாக்க வேண்டும் எனும் வாதத்தில் தவறில்லை. ஆனால், ‘நாஞ்சில் நாடன் போன்ற நிமிர்வுகொண்ட மூத்த எழுத்தாளர் தாக்கத்துக்கு உள்ளாவார்’ எனக் கருதுவது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism