
ஆசை
`சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ண வேண்டும்' என ஆசைப்பட்டாள், மளிகைக்கடைக்காரரின் மனைவி.
- கிருஷ்ணகுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பாசம்
குழந்தை, சாதம் ஊட்டிக்கொண்டிருந்தது அம்மாவுக்கு.
- கிருஷ்ணகுமார்

பதற்றம்
எமர்ஜென்ஸி வார்டுக்குக் கொண்டுபோன நோயாளியை விட பதற்றமாகவே காணப்பட்டார் டாக்டர்.
- கோ.பகவான்

உணவே...
``நான் சாப்பிட்டுட்டேன், நீங்க சாப்பிடுங்க'' என்ற சரஸ்வதி, கணவனுக்கான மாத்திரையை எடுத்துக் கொடுத்தாள்.
- ஜெ.மாணிக்கவாசகம்

போராளி
போராட்டத்தில் கலந்துகொள்ள, ஃபேஸ்புக்கை அவசரமாக ஓப்பன் செய்தான்.
- பிரபாஷ்கரன்

அழுகை
``காது குத்தணும்னா, குழந்தை கையில் முதல்ல மொபைலைக் கொடுங்க'' என்றார் பொற்கொல்லர்.
- வேம்பார் மு.க.இப்ராஹிம்

பெருமை
``நான் எவ்ளோ அழகா இருந்திருக்கேன் பாரு!'' எனக் காட்ட, எல்லோரிடமும் சின்ன வயது போட்டோ ஒன்று இருக்கிறது.
-கே.சதீஷ்

தற்கொலை
``கடைசியா யாருக்கெல்லாம் வாட்ஸ்அப் அனுப்பினார்?'' என விசாரித்தார் காவல் அதிகாரி.
- கோ.பகவான்

செல்ஃபி
``பாட்டிக்கு சீரியஸா இருக்கு'' என டாக்டர் சொன்னதும், பாட்டியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டனர் உறவினர்.
- கிருஷ்ணகுமார்

சந்தேகம்
``ஆபீஸ் டூர் போனது நிஜமா? ஒரு குரூப் செல்ஃபிகூட எடுக்காம வந்திருக்கீங்க?'' என விவரமாக விசாரித்தாள் மனைவி.
- பெ.பாண்டியன்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ₹500. உங்கள் கதைகளை 10seconds tory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!