ஓவியா, ஒரு நாள் தன் அப்பாவுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தாள்.

கடலும் வானமும் மிகவும் அழகாயிருந்தன.

‘‘வீட்டுக்குப் போகலாம்மா, வா’’ என்றார் அப்பா.

‘‘போப்பா, எனக்கு இன்னும் இந்தக் கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குப்பா’’ என்று சிணுங்கினாள் ஓவியா.

‘‘நீ பள்ளிக்கூடத்துக்குப் போகணும், நான் ஆபீஸுக்குப் போகணும், நேரம் ஆயிடுச்சே’’ என்றார் அப்பா.

‘‘அப்படின்னா நான் இந்தக் கடலை ஓவியமாக்கி என்னுடன் எடுத்து வருகிறேன் அப்பா’’ என்றாள் ஓவியா.

‘‘ஓ, அப்படியே செய்’’ என்றார் அப்பா.

‘‘அடடா, படம் வரைய என்னிடம் தாள் இல்லையே’’, என்று வருத்தப்பட்டாள் ஓவியா.

ஆனால், அவளுடைய தலையை வருடியது குளிர்ந்த சாரல்.

‘‘இதோ, என்னுடைய நீலநிறத் தாள். எடுத்துக்கொள்’’ என்றது கடல்.

‘‘ஆனால், வரைவதற்குக் கலர் பென்சில்கள் இல்லையே.’’

‘‘இதோ என்னுடைய ஏழு வண்ணங்களையும் எடுத்துக்கோ’’ என்று தந்தது வானவில்.

‘‘வைத்து எழுத அட்டை இல்லையே.’’

‘‘இதோ என்னைத் தருகிறேன்’’ என்றது கடற்கரை.

ஓவியா துள்ளிக்குதித்து மகிழ்ச்சியுடன் கடலை அப்படியே ஓவியமாக வரையத் தொடங்கினாள்.

எல்லாம் வரைந்தாயிற்று. ஆனால், ஒன்று மட்டும் வரைய முடியவில்லை.

‘‘அது என்ன?''

‘‘அந்த நேர்க்கோடுதான்.''

‘‘எந்த நேர்க்கோடு?’’

‘‘கடலையும் வானையும் இணைக்கும் நேர்க்கோடுதான்.’’ அது அந்தக் கோடியிலிருந்து இந்தக்கோடி வரை ஒரே நேராக இருந்தது.

ஓவியா பென்சிலால் கோடு இழுத்துப் பார்த்தாள். நேராக வரவில்லை. ஏனெனில், அவளிடம் அளவுகோல் இல்லை. உடனே அழத் தொடங்கிவிட்டாள்.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த பறவைக்கூட்டம், ‘‘கடலே, கடலே, எங்க ஓவியாவுக்கு அந்த நேர்கோட்டை அளவுகோலாகத் தாருங்களேன்’’ என்று பறவைகள் கேட்டன.

‘‘அதை மட்டும் தரமுடியாது’’ என்றன, கடலும் வானமும்.

ஓவியா இன்னும் பெரிதாக அழத் தொடங்கினாள்.

அதைப் பார்த்தவுடன் பறவைகள் அந்த நேர்க்கோட்டைத் தங்கள் அலகுகளால் கொத்தித் தூக்கின.

‘‘வேண்டாம்... பெரிய ஆபத்து! வேண்டாம்’’ என்று கத்தின கடலும் வானமும்.

பறவைகள் அதை மதிக்காமல், அந்த நேர்க்கோட்டை உருவித் தூக்கிக்கொண்டு வந்து ஓவியாவிடம் கொடுத்தன. ஓவியாவும் அதை வாங்கி, தாளின் மீது வைத்து கோடு வரையத் தொடங்கினாள்.

ஆனால், எந்த இடத்தில் வரைவது? கடலைப் பார்த்தாள். அங்கே, கடலும் வானும் ஒன்றாகிக் குழம்பித் தெரிந்தன.

ஏன் தெரியுமா? தடுப்புக்கோட்டை எடுத்தவுடன் எல்லாம் ஒன்றாகிப் போயின.

ஓவியாவுக்கு ரொம்பவும் பயமாகிவிட்டது.

‘‘ஓ..!’’, என்று கத்தினாள். திடுக்கிட்டுக் கண் விழித்தாள்.

‘‘அட, கனவா?’’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

இப்போது, ஓவியாவை அப்பா நிஜமாகவே கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். ஓவியா தேவையான தாள், அட்டை, பென்சில், ரப்பர், அளவுகோல் எல்லாம் எடுத்துக்கொண்டாள்.

ஓவியத்தை வரைந்தாள் அவளே தலைப்பையும் எழுதினாள்.

கையில் இருக்குக் கடல்... இயற்கைக்கு ஒரு மடல்!