Published:Updated:

கவிதை - க.மோகனரங்கன்

கவிதை - க.மோகனரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
கவிதை - க.மோகனரங்கன்

ஓவியங்கள் : செல்வம் பழனி

கவிதை - க.மோகனரங்கன்

ஓவியங்கள் : செல்வம் பழனி

Published:Updated:
கவிதை - க.மோகனரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
கவிதை - க.மோகனரங்கன்
கவிதை - க.மோகனரங்கன்

முடிச்சு

வ்வளவு
வேண்டுதல்களுக்குப் பிறகு
அத்தனை
காத்திருத்தல்களுக்குப் பின்பு
இறுதியாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவிதை - க.மோகனரங்கன்


இறங்கி வந்து
எட்டாத உயரத்திலிருந்து
நீ
நீட்டிய
அன்பின் நுனியில்
ஒரு முடிச்சிருந்தது
அதை
அவிழ்க்க முயன்று
தோற்றவன்
கடைசியாகத்தான்
கண்டுகொண்டேன்
அதைச் சற்றே
விரித்து நுழைத்தால்
அளவெடுத்தாற்போல
அவ்வளவு கச்சிதமாய்ப் பொருந்துகிறது
என் கழுத்திற்கு.

கவிதை - க.மோகனரங்கன்

சிற்றூழியம்

னது
அன்பின் மருந்துக் குப்பியோ
சின்னஞ்சிறியது.
அதன் துளிகள்
உங்களை
குணமாக்கவில்லையென்று
குறையிறக்காதீர்கள்!
மாறாக என்னுடைய
வெறுப்பின் விருட்சமோ,
எப்போதும் தரித்துக்கொள்ள
ஏதுவாக,
எண்ணிலாக் கிளைகளுடன்
எழுந்து நிற்பது.
எனவே
எவ்வளவு பெரியவர் என்றாலும்
நீங்கள்
கடைசியாய்
நீட்டிப்படுக்க வசதியாகவொரு
பெட்டி செய்துவர
என்னால் ஆகும்.