
மழைக்கு முன்பே
காற்று குளிர்ந்துவிடும்போது
இலைப் பச்சையாக மாறிவிடுகிறேன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அடிநிலத்தின் கீழ்
திரவியமாய் விழைகிறேன்
பித்தமேற்றும்
ஆர்ப்பரிக்கும் கடலின்
உப்பை விழுங்கிய ஆகாயம்
கனவும் விஷமுமான
மந்திரம் நான்
காலங்களின் மீது
அறைகூவல் விடுக்கும்
சொல் ஒன்றின்
இடதும் வலதுமாவேன்
என்னை
எங்கு ஒளித்துவைக்க முடியும்.