பிரீமியம் ஸ்டோரி

ட்ரீட்மெண்ட்

``கண் வலின்னு பையன் அழுறான்...'' என்றவரிடம்,

``காலைல 50MB, மதியம் 50MB, நைட்டு 50MB மட்டும் மொபைல பார்க்கச் சொல்லுங்க... சரியாயிடும்'' என்றார், டாக்டர்.

- சி.சாமிநாதன்

லாஸ்ட் ஸீன்

``கடைசியா எப்ப பார்த்தீங்க?'' என விசாரித்த போலீஸ்காரரிடம் வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீனைக் காட்டினார் பக்கத்து வீட்டுக்காரர்.

- கிருஷ்ணகுமார்

காதல்

``நம்ம பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு எப்படி சொல்ற!''

``நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்!''

- கி.ரவிக்குமார்

10 செகண்ட் கதைகள்

கதை

``சும்மாச் சும்மா கதை கேட்டு நச்சரிக்கக் கூடாது. பாட்டியை சீரியல் பார்க்கவிடு...'' என்றாள் அம்மா!

- பெ.பாண்டியன்

என் ஆளு

அவள் என் ஆளு என்பதில் ஆரம்பித்து நீங்க என்ன `ஆளு?' என்பதில் முடித்துவைக்கப்பட்டது கதிர்-மீராவின் காதல். 

- அபி

கோபம்


குடிகாரக் கணவனிடம் அடிவாங்கும் மனைவிகள் திருப்பி அடிக்கின்றனர் டாஸ்மாக் கடைகளை!

- பழ.அசோக்குமார்

அவசரம்

``வேலைக்கு மத்தில போன் எடுத்து பேசினா உசிரா போயிடும்?''

- 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கத்தினாள் மனைவி.

 - நந்த குமார்

குடிநீர்

``குடிநீருக்காகச் சாலை மறியல் பண்ணிய பொதுமக்களிடம் மறியலை கைவிடுங்கள்... உடனே தண்ணீர் வண்டி அனுப்புறேன் குடம் பத்து ரூபாய்தான்'' என்றார் தலைவர்!

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

உறுதி செய்தல்

`ஓவர் மேக்கப்' என்று நண்பிகள் சொன்னதை நம்பாமல் ஒரு செல்ஃபி எடுத்துப்பார்த்துக்கொண்டாள் நர்மதா.

- விகடபாரதி

நடிப்பு

டிவியில் பார்க்கும்போதுதான், `இன்னும் கொஞ்சம் நல்லா அழுதிருக்கலாம்' எனத் தோன்றியது, சீரியல் நடிகை சுமத்ராவுக்கு!

- சி.சாமிநாதன்

10 செகண்ட் கதைகள்

திகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு  ரூ.500. உங்கள் கதைகளை 10seconds tory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு