Published:Updated:

ஈரம் - கவிதை

ஈரம் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
ஈரம் - கவிதை

கவிதை: சௌவி

ஈரம் - கவிதை

கவிதை: சௌவி

Published:Updated:
ஈரம் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
ஈரம் - கவிதை
ஈரம் - கவிதை

லையுதிர்கால மரமொன்றில் அமர்ந்து
தன் கூடு வெளியில் தெரிவதாய்க் கவலைப்பட்டு
ஓர் அச்சத்தோடு கத்தும் பறவையின் குரலை
அடையாளம் கண்டு
ஆறுதல் சொன்னதுண்டா?
வற்றத் துவங்கியிருக்கும்
நாகரிகங்கள் வளர்த்த
ஒரு பழைய நதியின் கண்களில்
வழியும் கண்ணீரை
கைகள் நீட்டித்துடைத்ததுண்டா?
உதிர்ந்து விழும் நட்சத்திரமொன்றின்
பிரிவில்
மற்றெல்லா நட்சத்திரங்களும்
துயர்கொண்டழும் பேரழுகையோடு
சேர்ந்து அழுததுண்டா?
குட்டிப்பகலைத் தூக்கிக்கொண்டு
ஓடிவந்த மின்மினிப்பூச்சி
உங்கள் வாகனத்தில் மோதியிறந்த இரவை
துக்கநாளாக அனுஷ்டித்தது உண்டா?
அவ்வளவு பெரிய வானத்தில்
தனியாய்ப் போகும் ஒற்றைமேகத்தின்
கொடுந்தனிமை துடைக்க
வானேறி அம்மேகத்துடன் கதைத்தபடி
பயணித்தது உண்டா?
இல்லை என்பது எவ்விதக்குற்றமும் இல்லைதான்
எனினும் என்பதில் இருக்கிறது
இப்பூமிக்கான ஈரம்.