‘‘முஸ்லிம்கள் பிரிவினை கேட்டுத்தான் போராடினார்கள்... கிறிஸ்தவர்கள் போராடவே இல்லை. ஏனென்றால், ஆளும் பிரிட்டிஷாரும் கிறிஸ்தவர்கள்தானே என்று நினைத்து மவுனமாக இருந்தார்கள்” என்பதுதான், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் பிரிவினை பேதம் விதைக்கும் சில விஷமிகளின் குற்றச்சாட்டு.

‘சமயத்தைத் தங்கள் நலனுக்காக ஏகாதிபத்தியம் பயன்படுத்துமே தவிர, அடிமை நாட்டு மக்கள் அனைவருமே அடிமைகள்தானே. எந்த ஆங்கிலேய அதிகாரி, சாதாரண இந்தியக் கிறிஸ்தவனைத் தனது காலனி நாட்டில் சமமாக நினைப்பான்? எந்த இந்தியக் கிறிஸ்தவன், அதிகாரங்களைக் குவித்துள்ள ஆங்கிலேய அரசின் பிரதிநிதியைத் தனக்குப் பங்காளியாக நினைக்க முடியும்? இது சாத்தியமா? ஆங்கிலேய ஏகாதிபத்தியம் புகுத்திய கொடுமையான வரிவிதிப்புகளுக்குத் தாங்களும் விதிவிலக்கு அல்ல என்பதை உணர இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு ஆண்டாண்டு காலமா தேவைப்படும்?’ என்ற மிகச் சரியான புரிதலுடன் பழைய வரலாற்று ஆதாரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் சேவியர்.

1787-ம் ஆண்டு கோவாவில், போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக நடந்த பின்டோ புரட்சியைத் தொடக்கமாகக் காட்டுகிறார் சேவியர். இந்திய தேசிய காங்கிரஸுக்கு முன்னதாக, 1868-ல் வங்காள கிறிஸ்தவ அமைப்பு முன்னெடுத்த முயற்சிகளும், 1929-ம் ஆண்டு அகில இந்திய கிறிஸ்தவப் பெருமன்றத்தின் தீர்மானமும் கவனிக்கத்தக்கவை.

அன்னி பெசன்ட், ‘ஆனந்த பசார் பத்திரிகா’ இதழில் கட்டுரைகள் தீட்டிய சகோதரி நிவேதிதா, காந்திக்கு ஊக்க சக்தியாக இருந்த சூசை, முதல் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த உமேஷ் சந்திர பானர்ஜி, கலிசரண் பானர்ஜி... என அகில இந்திய அளவிலும், நீலகிரி, நெல்லை, கரூர், ராமநாதபுரம் ஆகிய தமிழகப் பகுதிகளில் போராடிய கிறிஸ்தவ மக்களையும் மலையளவு பட்டியலிடுகிறது இந்தப் புத்தகம்.

‘‘நாங்கள் கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ளோமே தவிர, எங்கள் தேசிய உரிமையை விட்டுவிடவில்லை. நாங்கள் முழுக்க முழுக்க இந்த நாட்டில் வேரூன்றியவர்களாகவே இருக்கிறோம். வாழ்கிறோம்’’ என்று 1879-ல் கலிசரண் பானர்ஜி சொன்னது இன்று வரை வழிமொழியத்தக்கது.

இந்திய விடுதலைப் போராட்டமும் கிறித்தவர்களும்

- முனைவர் எம்.ஏ.சேவியர், சே.ச.

வைகறை பதிப்பகம்,
6, மெயின் ரோடு, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 84898 57600

விலை: ரூ.150/-

- புத்தகன்