Published:Updated:

ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!

ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!

ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!

ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!

ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!

Published:Updated:
ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!

லக வரைபடத்தை அடுத்து, உலக மக்களை ஒன்றிணைக்கும் ஒரே சாதனம் சினிமா. இத்தாலியப் படத்தை இந்தியாவிலும் கொண்டாடலாம்;இந்தியப் படத்தை இத்தாலியிலும் அங்கீகரிக்கலாம்.நூறு ஆண்டுகளுக்கு முந்தைய படம் இன்றும் பார்க்கப்படுகிறது. இன்றைய படம், நூறு ஆண்டுகள் கழித்தும் பார்க்கப்படும். சினிமாவுக்கு நாடும் இல்லை. காலமும் இல்லை. அந்த உன்னதக் கலையின் உலகளாவிய வரலாறு இது.

நியூயார்க்கில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய எல்லீஸ், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் திரைப்படத் துறையைத் தொடங்கியவர். அங்கு திரைப்படம் குறித்து 35 ஆண்டுகள் (1956 - 91) வகுப்புகள் எடுத்தவர். டாகுமென்ட்ரி குறித்த விரிவான வரலாறு எழுதிய அவருடைய மிக முக்கிய நூல், ‘ஹிஸ்டரி ஆஃப் ஃபிலிம்’ என்பது. அதன் தமிழ் மொழியாக்கம்தான் இது.

ஜூ.வி நூலகம்: கோட்பாடு இல்லாத சூன்யங்கள்!

சினிமாவுக்கு உலகமே அதிக மதிப்பு தருகிறது. உண்மைதான். ‘‘எந்த ஒரு பிரபல வடிவத்துக்கும் அதிகபட்ச மதிப்புத் தருவது என்பது, திரும்பத் திரும்ப அதன் படைக்க வைக்கும் ஆற்றலை அங்கீகரிப்பதாகும்” என்கிறார் இயக்குநர் பைரி. சினிமாவுக்குத் தரும் அதிக மதிப்பே, அதிக படங்களையும் உன்னதமான படங்களையும் உருவாக்கக் காரணம் ஆனது. அதாவது விமர்சனமே, சினிமாவை வளர்த்துள்ளதை இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.

மக்கள் காசு கொடுத்துப் படம் பார்க்கும் பழக்கம் உருவானது முதல் 1960 வரை அமெரிக்கா, ஜெர்மன், ரஷியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசியாவின் பல நாடுகளிலும் வெளியான படங்கள், அவற்றின் கதைகள், தொழில்நுட்பம், நடிக நடிகையர் குறித்து அலசுகிறார் எல்லீஸ். முழுநீளப் படங்களுக்கு இத்தாலியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் முதலில் வந்ததும், பிறகு அமெரிக்கா அதனை முன்னெடுத்துச் சென்றதும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

சினிமா என்பது வெறும் கலை மட்டுமல்ல, அது ஒரு கோட்பாடு. உலகம் முழுக்கக் சினிமாவுக்குள் நடந்த தத்துவார்த்தப் போராட்டங்களை இந்த நூல் மூலம் அறியலாம். மொழிபெயர்த்த வேட்டை கண்ணன், சினிமாக்காரர் மட்டுமல்ல; உலக வரலாறும் அரசியல் கோட்பாடுகளும் அறிந்தவர். அதனாலேயே இந்த நூல் மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோட்பாடுகளுக்குச் சம்பந்தம் இல்லாமல் தமிழ்ப் படம் எடுக்கும் சூன்யங்கள் குறித்த வேதனையை விதைக்கிறது இந்த நூல்.

- புத்தகன்

உலக சினிமா வரலாறு
- ஜாக் சி.எல்லீஸ்

தமிழில்: வேட்டை
எஸ்.கண்ணன்
புதிய கோணம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
தொடர்புக்கு 044 - 24332424