Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

மீண்டும் மொழிசார்ந்த பிரச்னைகள் முன்நகர்ந்திருக்கின்றன. ஒற்றை மொழி, ஒற்றைக் கலாசாரம், ஒற்றைத் தேசியம் என்கிற கருத்தியலுக்கு அதிகார பலம் கூடியிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் அதிகார

தலையங்கம்

வலிமையுடன் மொழித்திணிப்பு நடந்தபோதே, முதன்முதலாக அதற்கு எதிர்க்குரலை எழுப்பிய பெருமை தமிழகத்துக்கு உண்டு. இப்போது மீண்டும் மத்திய அரசு, இந்தி மொழித் திணிப்பு என்னும் அபாயகரமான ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இதற்கு எதிராக இப்போதும் தமிழகத்தில் குரல்கள் எழத்தான் செய்கின்றன. ஆனால், உரக்கக் குரல் எழுப்ப வேண்டிய தமிழக அரசோ பல்வேறு அரசியல் நிர்பந்தங்களால் மெள்ள முனகுவதற்குக்கூடத் தயாராக இல்லை. இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு கலாசார அதிகாரத்தை நிறுவப் பார்க்கிறது மத்திய அரசு. அதிலும், இப்போது கல்வி அணுகுமுறையின் மூலமாக இப்படியான ஒரு நிர்பந்தத்தை நம்மீது திணிக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றை அடையாளத்துக்குள் அடைக்கப் பார்க்கும் அரசியல் தந்திரத்தை முறியடிக்க வேண்டிய கடப்பாடு தமிழர்களுக்கும் அவர்தம் அரசுக்கும் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

அதேவேளையில் ‘இந்தி எதிர்ப்பு’ என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிப்பது, தமிழைப் புறக்கணிப்பது என்னும் பெருந்தவறுகளை நெடுங்காலம் செய்திருக்கிறோம் என்பதையும் நாம் உணர வேண்டும். தமிழைச் சரியாக எழுதவோ வாசிக்கவோ தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது என்பது அவலத்திலும் அவலம். மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி மட்டுமல்ல, அது ஓர் இனத்தின் பண்பாட்டு நினைவுத் தொடர்ச்சி; நம் அடிப்படை அடையாளம். அதைக் காப்பது நம் தலைமுறையைக் காப்பதாகும் என்பதை அழுத்தமாக உணரவேண்டிய தருணம் இது.

உங்களின் அன்போடும் ஆதரவோடும் பங்களிப்போடும் இரண்டாவது ஆண்டில் வெற்றிகரமாக  அடியெடுத்துவைக்கிறது விகடன் தடம். கலை, இலக்கியம், தமிழ் என எப்போதும் இணைந்திருப்போம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism