Published:Updated:

அடுத்து என்ன? - நரன்

அடுத்து என்ன? -  நரன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - நரன்

எவரின் கதையிலும் அமர மறுத்தவர்கள்படம் : அய்யப்ப மாதவன்

அடுத்து என்ன? - நரன்

எவரின் கதையிலும் அமர மறுத்தவர்கள்படம் : அய்யப்ப மாதவன்

Published:Updated:
அடுத்து என்ன? -  நரன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - நரன்

நாளையே  இறக்க விருப்பவனைப் போல் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருக்கிறேன். எழுத சாதகமான சூழலாய் இருக்கிறது எனக்கு. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இப்படியான மனநிலை இருக்கிறது. மூன்று ஆண்டுகளாக வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்த குடும்ப வாழ்விலிருந்து அறுத்துக் கொண்டு வெளியேறுகிறேன். குறைந்தபட்சம் எனக்கு என் மகளை அனுதினமும் பார்த்துவிட வேண்டும். அதற்காக மட்டும்தான் இந்த வாழ்வைச் சகித்துக்கொண்டு கழித்தேன். இந்த மாதத்திலிருந்து அதற்கும் வழியில்லாமல் போய் விடும். தப்பிக்க வேறு வழியில்லை. நிச்சயம் எழுதியே தீர்க்க வேண்டும் இந்த மனநிலையை.

அடுத்து என்ன? -  நரன்

இந்த ஆண்டு ஒரு சிறுகதைத் தொகுப்பு மற்றும் ஒரு நாவலுக்குத் திட்டமிட்டிருக்கிறேன். நாவலுக்கு  க்‘கேசம்’ என்று தலைப்பு. மூன்று கதைகள். முடியை மூன்று பிரியாகப் பிரித்து இடவலமாய் மாற்றி மாற்றி ஜடை பின்னுவதுபோலத்தான் இந்த நாவலைப் பின்னிக்கொண்டிருக்கிறேன். இந்த நூற்றாண்டின் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கதைகள். இதில் இரண்டு கதைகள் ஏற்கெனவே சுருங்கிய சிறுகதை வடிவத்தில்   வெளிவந்தவை. மூன்று கதைகளுக்குமான மையப்புள்ளி பெண்களின் கேசமும் ரோமமும்.

சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு: ‘இதோ என் சரீரம்: இதை என் நினைவாக உணவாகச் செய்யுங்கள்’ 17 கதைகளைக் கொண்டது. பத்து கதைகளை எழுதி முடித்துவிட்டேன். மற்றவை பகுதி பகுதியாக எழுதப்பட்டு செம்மை செய்யப்படாமலிருக்கின்றன.  என்னுடைய கதையிலிருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் இருண்மையும் பித்துத்தன்மையும் நிரம்பியவர்கள். அவர்கள் என்னோடும் என் வாழ்வியலோடும் ஏதோவொரு நேர்கோட்டில் தொடர்பிலிருப்பவர்கள். ஏதோவொரு இடத்தில் அவர்களின் வாழ்வை எழுதச்சொல்லி என் மனநிலையைத் தொந்தரவு செய்திருப்பார்கள். இதுவரை வேறு எவரின் கதையிலும் அமர மறுத்தவர்கள் அவர்கள்.

சுருக்கமாக எழுதுவது எனக்குப் பெரும் சிக்கலாக இருக்கிறது. எப்போதும் எனக்கு ஒரு பெரிய கேன்வாஸ் தேவைப்படுகிறது. இங்கே பத்திரிகைகள் 2000 முதல் 2500 வார்த்தைகள்கொண்ட கதைகளுக்கே வாய்ப்பு தருகின்றன. சிறிய சம்பவத்திற்குள் கதை சொல்வதற்குச் சிரமமாக இருக்கிறது. பிரசுரம் காண வேண்டுமென்றால் கதையைச் சுருக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு வரிகளுக்குள் சொல்வதற்கு இன்னும் பழக்கம் வரவில்லை. என்னைப் பழக்கப்படுத்த வேண்டும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? -  நரன்அடுத்ததாக உலகின் தடைசெய்யப்பட்ட கலைஞர்கள், அவர்களின் கலைப்படைப்புகள், திரைப்படங்கள், கவிதைகள், கதைகள், ஓவியங்கள் சார்ந்த கட்டுரைகளை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.பெரும் உழைப்பைக் கோரும் பணி அது. அதை அடுத்த ஆண்டு புத்தகமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

  அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் தினமும் இரண்டு மணி நேரம் எழுதுகிறேன். அதிகாலையில் இரண்டு மணி நேரம் வாசிக்கிறேன். மருத்துவர்கள் விரைந்து உறங்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இருந்த மிகுதியான நண்பர்களில் யாரோடும்   இப்பொது தொடர்பிலில்லை. இரவில் பெரும்பாலும் உறக்கம் வருவதில்லை. மனநிலையைக் கவனித்துக்கொள்வது பெரும்பாலும்   மருத்துவ ஆலோசனையாயிருக்கிறது. விழுங்கச் சொல்லி சில மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். மனதிற்குச் செயற்கையான அமைதியைச் சில மணி நேரங்களுக்கு அவை உத்திரவாதமளிக்கின்றன. எல்லோரிடமிருந்தும் முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு தனியே போய்க்கொண்டிருக் கிறேன். எழுத வாய்க்காத நாள்களில் நேரத்தை எப்படிச் செலவிட என்பது தெரியாமல்  அலுவலகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நாலரை கிலோமீட்டர் சாலையை வேடிக்கை பார்த்தபடியே வீட்டுக்கு நடந்து செல்கிறேன். மனதளவில் வயது முதிர்ந்தவனாய் உணர்கிறேன். இப்போதெல்லாம் தேவைக்கதிகமாகக் கையில் நாள்கள் இருப்பது போலிருக்கிறது. மன நிலையைக் காப்பாற்றியாக வேண்டும். அதற்காகவாவது நிறைய எழுத வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism