Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்
10 செகண்ட் கதைகள்

கண்காணிப்பு

“ஸ்கூல்ல பசங்க யாரும் செல்போன் கொண்டுவர்றாங்களா?” என வாத்தியாரிடம் வாட்ஸ்அப்பில் கேட்டார் ஹெச்.எம்!

- பெ.பாண்டியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 செகண்ட் கதைகள்

கலைப்பு

“இரண்டு நாள்ல கலைக்கப் போறாங்களாம் ஐயா...”

 பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஆளுங்கட்சி MLA, தோட்டக்காரன் காட்டிய குருவிக் கூட்டை.

- கல்லிடை வெங்கட்

10 செகண்ட் கதைகள்

 விதி

விதியை மீறி கட்டிய கட்டடத்தால் விதியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

- நந்த குமார்

10 செகண்ட் கதைகள்

வெள்ளைப்பூக்கள்

சண்டை போட்டுக்கொண்டே குடும்ப அமைதிக்காக​க் கோயிலுக்குப் புறப்பட்டனர்  கணவனும் மனைவியும்!

- கே.சதீஷ்

10 செகண்ட் கதைகள்

நிறைவு

 “வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் முதியோர் இல்லத்தில் காலத்தைக் கடத்தினார் கார்த்திக்.’’

- சீர்காழி.ஆர்.சீதாராமன்

10 செகண்ட் கதைகள்

தவிப்பு

“யார்​,​ யாரு​க்கோ லைக்ஸ் போடறார். எனக்கு லைக்ஸ் போட மாட்டேங்கறார். பிரியமில்லாத கணவர்கூட எப்படி வாழ்றது?’’ என அம்மாவிடம் அழுதாள் ஆர்த்தி!

- பெ.பாண்டியன்

10 செகண்ட் கதைகள்

வறட்சி

பாலம் கட்டித் தரச் சொல்லி போராடிய ஆற்றில், தார்ச்சாலை போட்டுக் கொண்டனர் மக்கள்.

- கி.ரவிக்குமார்

10 செகண்ட் கதைகள்

கல்வி

15 நாளில் கார் ஓட்டக்கற்றுக்கொண்டு, 10 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்கி டாக்ஸி டிரைவரானர் 45 வயதான ஆறுமுகம்!

- கே.மணிகண்டன்​​

10 செகண்ட் கதைகள்

தையல்

நகரின் பெரிய ஜவுளிக் கடையில் மகனுக்கு ஜீன்ஸும், டி-சர்ட்டும் வாங்கிக் கொடுத்தார் டெய்லர் மாடசாமி.

- கல்லிடை வெங்கட்.

10 செகண்ட் கதைகள்

பழையது

முதலாளியின் மகன் ஆதித்யாவின் பிறந்த நாளுக்குப் பரிசாக புது டிரெஸ் வாங்கிக் கொடுத்த வேலைக்காரியின் மகனுக்கு, ஆதித்யாவின் பழைய துணிகளைக் கொடுத்து அனுப்பினாள் முதலாளியம்மா.

 - கல்லிடை வெங்கட்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு  ரூ. 500. உங்கள் கதைகளை 10secondstory @vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism